இலங்கை வரும் பங்களாதேஷ் குழாமில் காயத்திலிருந்து மீளாத ஷகீப்

532

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண T-20 முத்தரப்பு தொடருக்கான பங்களாதேஷ் குழாமுக்கு காயத்தில் இருந்து முழுமையாக சுகம் பெறாத நிலையில் அணித்தலைவர் ஷகீப் அல் ஷஸன் அழைக்கப்பட்டுள்ளார்.

[rev_slider LOLC]

சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கையுடனான போட்டியின்போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முன்னணி சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹஸன் விளையாடவில்லை. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுடனான முத்தரப்பு தொடருக்கான 16 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாம் இன்று (26) அறிவிக்கப்பட்டது.

முக்கியமான பலர் இன்றி இலங்கை வரும் இந்திய குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கையில் ஆரம்பமாகும் சுதந்திர…

இந்த குழாமுக்கு ஷகீப் அழைக்கப்பட்டபோதும் அவரது விரல் காயம் முழுமையாக சுகமடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் இந்த முத்தரப்பு தொடரின் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மாத்திரம் ஆடுவார் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் பங்களாதேஷ் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளருமான கோட்னி வோல்ஷ் இந்த தொடரில் பங்களாதேஷ் அணியின் இடைக்கால பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போதே 30 வயதான ஷகீப் அல் ஹஸனின் விரலில் காயம் ஏற்பட்டு அதற்கு தையலும் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இலங்கையுடனான டெஸ்ட் மற்றும் T-20 போட்டிகளுக்கான அணிக்கு சேர்க்கப்பட்டபோதும் அவர் ஆடாத நிலையில் மஹ்மூதுல்லாஹ் பங்களாதேஷ் அணியின் தலைவராக செயற்பட்டார்.

குறிப்பாக இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடரை இலக்கு வைத்து இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரில் ஷகீப் அல் ஹஸனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

மெதிவ்ஸின் மீள்வருகைக்காக காத்திருக்கும் தெரிவுக் குழு உறுப்பினர்கள்

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினர், உபாதைக்குள்ளாகியுள்ள…

பங்களாதேஷின் சுதந்திர கிண்ண தொடருக்கான அணியில், இறுதியாக இலங்கையுடன் இடம்பெற்ற இரண்டு T-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடிய அணியில் இருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷகிப், இம்ருல் கைஸ், நூருல் ஹஸன் ஆகியோர் சேர்க்கப்பட்டு, மொஹமது சைபுத்தீன், சாகிர் ஹஸன், ஆதிப் ஹொஸைன் மற்றும் மொஹமது மிதுன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இருந்த சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றதை அடுத்து ஜிம்பாப்வேயில் பிறந்த ரிச்சர்ட் ஹால்சால் பங்களாதேஷ் அணியின் இடைக்கால பயிற்சியாளராக செயற்பட்டார். அவர் 2014 நடுப்பகுதி தொடக்கம் பங்களாதேஷ் அணியின் களத்தடுப்பு மற்றும் உதவி பயிற்சியாளராக செயற்பட்டவராவார். ஹத்துருசிங்கவுக்கு பதில் புதிய பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்படாத நிலையிலேயே அவருக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஹால்சால் பயிற்சியாளர் பொறுப்பில் இடம்பெறாததற்கான காரணம் கூறப்படாத நிலையிலேயே தற்பொழுது வோல்சுக்கு இடைக்கால பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் மீண்டும் மன்னராக மகுடம் சூடிய இந்தியா

டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது முறையாகவும் முதலிடத்துக்கு முன்னேறிய..

வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுதந்திரக் கிண்ண முத்தரப்பு தொடரில் பங்களாதேஷ் அணி தனது முதல் போட்டியாக மார்ச் 8ஆம் திகதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை ஒட்டியே இந்த முத்தரப்பு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மின்னொளியிலேயே அனைத்துப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. ஆரம்ப சுற்றில் ஒரு அணி ஏனைய அணியுடன் தலா இரண்டு போட்டிகளில் ஆடவுள்ளது. அதன் நிறைவில் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

பங்களாதேஷ் குழாம்

ஷகீப் அல் ஹஸன் (தலைவர்), மஹ்முதுல்லாஹ், தமிம் இக்பால், சௌம்யா சர்கர், இம்ருல் கைஸ், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் காப்பாளர்), சபீர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன், தஸ்கின் அஹமது, அபூ ஹைதர், அபூ ஜயெத், ஆரிபுல் ஹக், நஸ்முல் இஸ்லாம், நூருல் ஹஸன், மஹெதி ஹஸன்.