ராங்பூர் அணிக்கு த்ரில் வெற்றிகளை பெற்றுத்தந்த திசரவுக்கு வாய்ப்பில்லை

815

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக முக்கிய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா, அந்த அணியின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலில் உள்வாங்கப்படவில்லை.

T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் …

சர்வதேச வீரர்களை உள்ளடக்கிய பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடருக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை, செப்டம்பர் 30ம் திகதிக்கு முன், பி.பி.எல். நிர்வாகத்திடம் வெளிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொடரில் பங்கேற்கவுள்ள 7 அணிகளில், ஆறு அணிகள் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் விபரத்தினை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் நிர்வாக குழுவிடம் ஒப்படைத்துள்ளது. இதில் சிட்டகொங் விகிங்ஸ் அணி மாத்திரம் தக்கவைப்பு வீரர்களின் பெயர்களை வெளியிடவில்லை. காரணம், இம்முறை தொடரிலிருந்து விலகுவதாக சிட்டகொங் அணி ஏற்கனவே அறிவித்திருந்தது.

எவ்வாாறயினும், ஆறு அணிகள் அறிவித்துள்ள தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் நிர்வாகக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக பங்களாதேஷ் அணியில் தற்போது சிறந்த துடுப்பாட்ட வீரராக வலம் வரும், முஷ்பிகுர் ரஹீமை ராஜ்ஷாஹி கிங்ஸ் அணி கைவிட்டுள்ளது. ஆசியக் கிண்ணம் உட்பட இறுதியாக நடைபெற்ற பல போட்டிகளில் ரஹீம் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு காரணமாகியிருந்தார். அத்துடன் கடந்த பருவகாலத்தில் ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியின் தலைவராகவும் இவர் செயற்பட்டிருந்தார். இவரின் விடுவிப்பு தற்போது கேள்வியை எழுப்பியுள்ளது.

இம்ரான் தாஹிரின் ஹெட்ரிக் மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென் ஆபிரிக்கா

இதேவேளை, கடந்த முறை ராங்பூர் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இலங்கை அணியின் அதிரடி சகலதுறை வீரர் திசர பெரேராவை ராங்பூர் அணி இம்முறை தக்கவைக்கவில்லை. கடந்த முறை ராங்பூர் அணி கிரிஸ் கெயிலின் அதிரடியுடன் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. எனினும், அதற்கு முன்னர் நடைபெற்ற லீக் போட்டிகளில் திசர பெரேரா ராங்பூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

முக்கியமாக, கடந்த பருவகாலத்தின் 24வது லீக் போட்டியில் இறுதி ஓவருக்கு 10 ஓட்டங்கள் டாக்கா அணிக்கு தேவைப்பட, அதனைக் கட்டுப்படுத்தி ராங்பூர் அணிக்கு 3 ஓட்டங்களால் திசர பெரேர வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அத்துடன், சிட்டகொங் விகி்ங்ஸ் அணிக்கு எதிரான 28வது போட்டியில் இறுதி ஓவருக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப் பந்தில் சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இப்படி பல போட்டிகளின் வெற்றிக்கு காரணமாக இருந்த இவர், தேசிய அணியின் வேலைப்பழுவால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.  

இந்த நிலையில் திசர பெரேரா அந்த அணிக்காக இம்முறை தக்கவைப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருந்தும் துரதிஷ்டவசமாக ராங்பூர் அணி அவரை தக்கவைக்கவில்லை. அத்தோடு கடந்தமுறை இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் லசித் மாலிங்க, இசுறு உதான ஆகியோரும் தக்கவைப்பு பட்டியலில் இடம்பெறவில்லை. இவர்களுடன் கடந்த முறை பங்களாதேஷ் பிரீமீயர் லீக்கில் விளையாடிய உபுல் தரங்க, சதுரங்க டி சில்வா, தனுஷ்க குணதிலக, டில்ஷான் முனவீர மற்றும் குமார் சங்கக்கார உள்ளிட்டோரும் தக்கவைப்பு பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.

எந்த தோல்வியுமின்றி இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதியில் இலங்கை

பங்களாதேஷில் நடைபெற்று…

எவ்வாறாயினும், குறித்த வீரர்கள் மற்றும் தக்கவைப்பு பட்டியலில் இடம்பெறாத வீரர்களை, அணிகள் இம்மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ள வீரர்கள் வரைவின் மூலம் தங்களுடைய அணிகளுக்காக தெரிவுசெய்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் விபரம்

ராங்பூர் ரைடர்ஸ்மஷ்ரபீ மொர்டசா, மொஹமட் மிதுன், நஷ்முல் இஸ்லாம், ரூபல் ஹுசைன்

டாக்கா டைனமைட்சகிப் அல் ஹசன், கீரொன் பொல்லார்ட், சுனில் நரைன், ரோவ்மன் பவெல்

ராஜ்ஷாஹி கிங்ஸ்முஷ்தபிசூர் ரஹ்மான், மெஹிடி ஹசன் மிராஜ், மொமினுல் ஹக், ஷகிர் ஹசன்

கொமிலா விக்டோரியன்ஸ்தமிம் இக்பால், இம்ரூல் கையிஸ், மொஹமட் சய்புதீன், சொஹைப் மலிக்

சில்ஹெட் சிக்ஸர்ஸ்சபீர் ரஹ்மான், நசீர் ஹுசைன், சொஹைல் தன்வீர்

குஹ்ல்னா டைடன்ஸ்மொஹமதுல்லா ரியாத், நஷ்முல் ஹுசைன் ஷென்டோ, கார்லோஸ் பிராத்வைட்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க