பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மொசரப் ஹொசைன் ருபெல் தன்னுடைய 40ஆவது வயதில் அகால மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை டெஸ்ட் தொடருக்காக நாடு திரும்பினார் சகிப்
நீண்ட காலம் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டிருந்த மொசரப் ஹொசைன் இந்த செவ்வாய்க்கிழமை (20) இவ்வுலகினை விட்டுப் பிரிந்திருக்கின்றார்.
மொசரப் ஹொசைனிற்கு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் புற்றுநோய் (Brain Tumour) இருப்பது கண்டறியப்பட்டிருந்ததோடு, பின்னர் பெற்ற தொடர் சிகிச்சைகள் மூலம் அவர் அந்த நோயிலிருந்து மீண்டிருந்தார்.
எனினும், கடந்த ஆண்டின் ஜனவரி மாதம் அவருக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டதோடு, இந்த நோயின் தாக்கமே இறுதியில் அவரது இறப்பிற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் மொஹமட் சிராஸ்
இடதுகை சுழல்பந்துவீச்சாளரான மொசரப் ஹொசைன் 2008 தொடக்கம் 2016 வரையிலான காலப்பகுதியில், பங்களாதேஷ் அணிக்காக ஆறு ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு, 26 ஓட்டங்களையும் குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<