சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் அணி மற்றும் பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் நிறைவில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி வலுவான நிலையில் காணப்படுகின்றது.
வாய்ப்பை பயன்படுத்துங்கள், இல்லாவிட்டால் நீக்கப்படுவீர்: திமுத் எச்சரிக்கை
நியூசிலாந்துடனான இரண்டாவது போட்டியில் தமது வீரர்கள் துடுப்பாட்டத்தில் பொறுப்புடன்…
பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி அங்கே, மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் ஆடிய பின்னர் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாட ஆரம்பித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டி இன்று (27) தொடங்கியது.
குல்னா நகரின் ஷேக் அபுநாசர் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் தலைவர் நஜ்முல் ஹொசைன் சான்டோ முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமது தரப்பிற்காக தேர்வு செய்தார்.
இந்த சுற்றுப் பயணத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரினை இலங்கை வளர்ந்துவரும் அணி 2-1 என கைப்பற்றியிருந்த காரணத்தினால் அதே உற்சாகத்துடன் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் சிறந்த ஆரம்பத்தை காட்டியது.
இளையோர் ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கையில்!
19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் ஆசிய கிண்ணத் தொடர் எதிர்வரும்…
அந்தவகையில் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் முதல் விக்கெட் அவ்வணி 12 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் வீழ்த்தப்பட்டது. முதல் விக்கெட்டாக கலன பெரேராவின் வேகத்திற்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மொஹமட் நயீம் 9 ஓட்டங்களை மட்டும் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி 81 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தமது இரண்டாம் விக்கெட்டினை பறிகொடுத்தது. இதன்போது ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சயீப் ஹஸன் 18 ஓட்டங்களுடன் அரங்கு நடந்தார். தொடர்ந்து சிறிது நேரத்தில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி இன்னுமொரு விக்கெட்டினையும் பறிகொடுத்தது.
எனினும், பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் தலைவர் நஜ்முல் ஹொசைன் சன்டோ மற்றும் அடிப் ஹொசைன் ஆகியோர் தமது தரப்பை தமது சிறந்த துடுப்பாட்டம் மூலம் வலுப்படுத்தினர்.
இலங்கையின் புதிய கிரிக்கெட் யாப்புக்கு ஐ.சி.சி தலைவர் முட்டுகட்டை
விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, இலங்கை…
இதில் நஜ்முல் ஹொசைன் சன்டோ சதம் பெற, அபிப் ஹொசைன் அரைச்சதம் விளாசியிருந்தார். இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 88 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் பெற்ற அபிப் ஹொசைன் 7 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், சதம் பெற்ற நஜ்முல் ஹொசைன் சன்டோ தனது 7ஆவது முதல்தர சதத்துடன் 124 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் சாக்கிர் ஹஸனுடன் நின்றிருந்தார். சாக்கிர் ஹஸன் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 9 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சு சார்பாக நிஷான் பீரிஸ், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் கலன பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Saif Hassan | run out (Kalana Perera) | 18 | 94 | 3 | 0 | 19.15 |
Mohammad Naim | c Minod Bhanuka b Kalana Perera | 9 | 8 | 2 | 0 | 112.50 |
Najmul Hossain Shanto | lbw b Kalana Perera | 133 | 269 | 13 | 1 | 49.44 |
Yasir Ali | c Pathum Nissanka b Ramesh Mendis | 4 | 30 | 0 | 0 | 13.33 |
Afif Hossain | b Nishan Peiris | 54 | 108 | 1 | 0 | 50.00 |
Zakir Hasan | c Pathum Nissanka b Ramesh Mendis | 49 | 128 | 4 | 0 | 38.28 |
Mahidul Islam Ankon | c & b Asitha Fernando | 4 | 12 | 0 | 0 | 33.33 |
Nayeem Hasan | c Sangeeth Cooray b Asitha Fernando | 36 | 72 | 4 | 0 | 50.00 |
Yeasin Arafat | c & b Ramesh Mendis | 12 | 45 | 1 | 0 | 26.67 |
Tanvir Islam | not out | 16 | 43 | 1 | 0 | 37.21 |
Shafiqul Islam | b Ramesh Mendis | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Extras | 24 (b 6 , lb 14 , nb 4, w 0, pen 0) |
Total | 360/10 (135.4 Overs, RR: 2.65) |
Fall of Wickets | 1-12 (3.1) Mohammad Naim, 2-81 (31.4) Saif Hassan, 3-95 (41.2) Yasir Ali, 4-194 (72.6) Afif Hossain, 5-249 (93.4) Najmul Hossain Shanto, 6-262 (98.6) Mahidul Islam Ankon, 7-320 (117.5) Zakir Hasan, 8-326 (120.6) Nayeem Hasan, 9-348 (131.6) Yeasin Arafat, 10-360 (135.4) Shafiqul Islam, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 25 | 3 | 74 | 2 | 2.96 | |
Kalana Perera | 27 | 8 | 62 | 2 | 2.30 | |
Chamika Karunarathne | 25 | 4 | 55 | 0 | 2.20 | |
Nishan Peiris | 30 | 3 | 76 | 1 | 2.53 | |
Ramesh Mendis | 28.4 | 2 | 73 | 4 | 2.57 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Yasir Ali b Nayeem Hasan | 16 | 22 | 3 | 0 | 72.73 |
Sangeeth Cooray | c Yasir Ali b Nayeem Hasan | 6 | 16 | 0 | 0 | 37.50 |
Charith Asalanka | c Mohammad Naim b Nayeem Hasan | 18 | 34 | 2 | 0 | 52.94 |
Minod Bhanuka | c Mahidul Islam Ankon b Nayeem Hasan | 11 | 25 | 2 | 0 | 44.00 |
Promod Maduwantha | lbw b Tanvir Islam | 40 | 136 | 3 | 0 | 29.41 |
Ashen Bandara | c Najmul Hossain Shanto b Shafiqul Islam | 85 | 256 | 8 | 0 | 33.20 |
Ramesh Mendis | c Saif Hassan b Shafiqul Islam | 18 | 44 | 2 | 0 | 40.91 |
Chamika Karunarathne | b Nayeem Hasan | 8 | 51 | 0 | 0 | 15.69 |
Kalana Perera | c Mahidul Islam Ankon b Nayeem Hasan | 8 | 6 | 1 | 0 | 133.33 |
Nishan Peiris | b Nayeem Hasan | 15 | 28 | 3 | 0 | 53.57 |
Asitha Fernando | not out | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Extras | 18 (b 11 , lb 6 , nb 1, w 0, pen 0) |
Total | 244/10 (103.4 Overs, RR: 2.35) |
Fall of Wickets | 1-21 (5.3) Pathum Nissanka, 2-26 (7.3) Sangeeth Cooray, 3-52 (15.2) Minod Bhanuka, 4-59 (17.4) Charith Asalanka, 5-141 (59.2) Promod Maduwantha, 6-170 (74.1) Ramesh Mendis, 7-196 (90.6) Chamika Karunarathne, 8-206 (92.6) Kalana Perera, 9-234 (100.4) Nishan Peiris, 10-244 (103.4) Ashen Bandara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Yeasin Arafat | 16 | 4 | 28 | 0 | 1.75 | |
Shafiqul Islam | 23.4 | 6 | 59 | 2 | 2.52 | |
Nayeem Hasan | 40 | 14 | 93 | 7 | 2.33 | |
Tanvir Islam | 22 | 7 | 41 | 1 | 1.86 | |
Afif Hossain | 2 | 1 | 6 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Saif Hassan | not out | 40 | 113 | 0 | 1 | 35.40 |
Mohammad Naim | lbw b Nishan Peiris | 8 | 54 | 0 | 0 | 14.81 |
Najmul Hossain Shanto | b Asitha Fernando | 25 | 38 | 2 | 2 | 65.79 |
Yasir Ali | b Nishan Peiris | 3 | 11 | 0 | 0 | 27.27 |
Afif Hossain | c Chamika Karunarathne b Nishan Peiris | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Zakir Hasan | not out | 25 | 37 | 3 | 0 | 67.57 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 102/4 (43 Overs, RR: 2.37) |
Fall of Wickets | 1-21 (16.2) Mohammad Naim, 2-48 (27.3) Najmul Hossain Shanto, 3-55 (30.5) Yasir Ali, 4-63 (32.2) Afif Hossain, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 7 | 2 | 19 | 1 | 2.71 | |
Kalana Perera | 7 | 4 | 4 | 0 | 0.57 | |
Chamika Karunarathne | 5 | 1 | 5 | 0 | 1.00 | |
Ramesh Mendis | 6 | 3 | 18 | 0 | 3.00 | |
Nishan Peiris | 15 | 4 | 43 | 3 | 2.87 | |
Charith Asalanka | 3 | 0 | 13 | 0 | 4.33 |
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்