பங்களாதேஷ் முன்னாள் வீரருக்கு தலை உபாதை

56

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்டவீரரான நபீஸ் இக்பாலுக்கு மூளையில் இரத்தப் போக்கு (Blood Haemorrhage) ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

நிஸ்ஸங்க, அவிஷ்க அதிரடியில் ஜப்னா கிங்ஸ் இலகு வெற்றி

பங்களாதேஷ் அணிக்காக 2003 தொடக்கம் 2006 வரையிலான காலப்பகுதியில் 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் நபீஸ் இக்பால், பங்களாதேஷ் துடுப்பாட்ட நட்சத்திரம் தமீம் இக்பாலின் உடன் பிறந்த சகோதரராவார் 

பங்களாதேஷ் அணிக்கு T20 உலகக் கிண்ணத் தொடரின் போது பொருட்கள் முகாமைத்துவம் (Logistics) செய்வதில் உதவியாக காணப்பட்டிருந்த நபீஸ் இக்பால், தனக்கு தலையில் அடிக்கடி வலி ஏற்படுவதாக கடந்த வாரம் முதல் குறிப்பிட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் 

பின்னர் நபீஸை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவருக்கு தலையில் ஒரு வித இரத்தப்போக்கு ஏற்படுவதனை கண்டறிந்ததோடு, அவர் தற்போது ஆபத்தில் பெரும் இருந்து தப்பியிருப்பதாக கூறியிருக்கின்றனர். எனினும் நபீஸ் பூரண உடற்தகுதியினைப் பெற்றுக் கொள்ள இன்னும் சில நாட்கள் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

மறுமுனையில் நபீஸ் இக்பாலின் உடல்நிலை குறித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மஷ்ரபி மொர்தஸா ஆகியோருடன் அவ்வணியின் தற்போதைய வீரர்களான முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லா ஆகியோர் வைத்தியசாலை சென்றிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<