பங்களாதேஷுடனான ஒருநாள் தொடரின்பின் இலங்கையின் தரவரிசையில் ஏற்படும் மாற்றங்கள்

2522

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடவுள்ளது. குறித்த தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் (26) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒருநாள் சர்வதேச அணிகளின் தரவரிசையில் ஏற்படப்போகின்ற மாற்றங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவையானது வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை 16 பேர் குழாம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான……

அண்மையில் நிறைவுக்குவந்த 12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண தொடர் ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணி 90 தரவரிசை புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் காணப்பட்டது. தற்போது உலகக்கிண்ண தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையிலும் பங்களாதேஷ் அணி அதே 90 தரவரிசை புள்ளிகளுடன் அதே ஏழாமிடத்திலேயே காணப்படுகின்றது. 

ஆனால், இலங்கை அணியானது உலகக்கிண்ண தொடரை புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தை பெற்று வெற்றிகரமாக நிறைவு செய்ததன் காரணமாக, உலகக்கிண்ண தொடர் நிறைவில் தரவரிசை நிலையில் அதிகரிப்பு கிடைத்தது. உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் 76 தரவரிசை புள்ளிகளுடன் ஒன்பதாமிடத்தில் இருந்த இலங்கை அணிக்கு தொடர் நிறைவில் 79 புள்ளிகளுடன் எட்டாமிடம் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள தொடர் மூலமாக இரு அணிகளுக்கும் தரவரிசை நிலையில் உயர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்காது. காரணம் இரு அணிகளுக்குமிடையில் பாரிய தரவரிசை புள்ளி வித்தியாசம் காணப்படுகின்றது. ஆனால் போட்டிகளை வெற்றிபெறுவதன் மூலம் தரவரிசை புள்ளிகளை உயர்த்திக்கொண்டு இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள போட்டிகள் மூலமாக தரவரிசை நிலையில் உயர்வதற்கான வாய்ப்புக்கள் இரு அணிகளுக்கும் காணப்படுகின்றது.

இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் தொடரின் பின்னர் தரவரிசை புள்ளியில் ஏற்படவுள்ள மாற்றம். (தரவரிசை நிலை அதிகரிப்பு ஏற்படாது)

இலங்கை அணி 3 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றும் போது, இலங்கை 82 புள்ளிகள், பங்களாதேஷ் 86 புள்ளிகள்

இலங்கை அணி 2 – 1 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றும் போது, இலங்கை 80 புள்ளிகள், பங்களாதேஷ் 88 புள்ளிகள்

பங்களாதேஷ் அணி 3 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றும் போது, பங்;களாதேஷ் 93 புள்ளிகள், இலங்கை 77 புள்ளிகள்

பங்களாதேஷ் அணி 2 – 1 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றும் போது, பங்களாதேஷ் 90 புள்ளிகள், இலங்கை 78 புள்ளிகள்

குலசேகரவுக்கு பிரியாவிடையாக அமையவுள்ள பங்களாதேஷுடனான 3ஆவது ஒருநாள் போட்டி

பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள 3ஆவது ஒருநாள்…..

மேலும் ஒருநாள் வீரர்களின் தரவரிசையில் முன்நிலையில் காணப்படும் லசித் மாலிங்க, அகில தனஞ்சய, முஷ்பிகுர் ரஹீம் மற்றும் பங்களாதேஷ் அணித்தலைவர் தமீம் இக்பால் ஆகியோர் வீரர்களின் தரவரிசையில் முன்னேற்றம் அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றனர்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<