சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவதும் இறுதியுமான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் A அணி, இலங்கை A அணியை டக்வத் லூயிஸ் முறையில் 98 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
இலங்கை A அணியின் வெற்றியைப் பறித்த நயிம், மிதுனின் துடுப்பாட்டம்
இலங்கை A மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கிடையில் நடைபெற்ற….
மேலும், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் பங்களாதேஷ் A அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
பங்களாதேஷ் A கிரிக்கெட் அணிக்கும், இலங்கை A அணிக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நிறைவடைந்திருந்தன. இப்போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பெற்று தொடர் 1-1 என சமநிலை அடைந்த நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நோக்குடன் மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி இன்று (12) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A அணியின் தலைவர் அஷான் பிரியஞ்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் தரப்பிற்கு வழங்கினார்.
Photos: Bangladesh A tour of Sri Lanka 2019 | 3rd Unofficial ODI
அதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் A அணித்தரப்பு 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் A அணி துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சயீப் ஹசன் சதம் பெற்று 110 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 117 ஓட்டங்களை குவித்திருந்தார். மறுமுனையில், மொஹமட் நயீம் 5 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக அரைச்சதமொன்றுடன் 66 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வீரர்களின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளர்களான அசித்த பெர்னாந்து 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாந்து 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 323 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய இலங்கை A அணி, தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.
பாகிஸ்தானில் இலங்கை அணி செயற்பட்டவிதம் சிறப்பாக இருக்கின்றது – ருமேஷ் ரத்நாயக்க
உலகின் முதல் நிலை T20 அணியான பாகிஸ்தானுக்கு எதிராக……
தொடர்ந்து இலங்கை A அணி, போட்டியின் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடி ஒரு கட்டத்தில் 24.2 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. எனினும் போட்டியில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.
ஆட்டம் கைவிடப்படும் போது டக்வத் லூயிஸ் முறையில் நிர்ணயம் செய்யப்பட்ட வெற்றி இலக்கான 229 ஓட்டங்களை இலங்கை A அணி அடையத் தவறிய நிலையில் போட்டியின் வெற்றியாளர்களாக பங்களாதேஷ் வீரர்கள் மாறிக்கொண்டனர்.
இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் திறமையினை வெளிப்படுத்தியிருந்த கமிந்து மெண்டிஸ், 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம், இலங்கைத்தரப்பு தலைவரான அஷான் பிரியஞ்சன் 34 ஓட்டங்களை குவித்திருந்தார்.
பங்களாதேஷ் A அணியின் பந்துவீச்சு சார்பில் எபாதத் ஹொசைன் மற்றும் சயீப் ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Saif Hassan | c Ashan Priyanjan b Shiran Fernando | 117 | 110 | 12 | 3 | 106.36 |
Niam Sheikh | obstructing the field b | 66 | 76 | 5 | 2 | 86.84 |
Najmul Hossain | c Kamindu Mendis b Amila Aponso | 2 | 12 | 0 | 0 | 16.67 |
Anamul Haque | c Ashan Priyanjan b Vishwa Fernando | 15 | 21 | 2 | 0 | 71.43 |
Mohammad Mithun | c Ramesh Mendis b Shiran Fernando | 32 | 35 | 1 | 2 | 91.43 |
Afif Hossain | c Amila Aponso b Shiran Fernando | 12 | 13 | 1 | 0 | 92.31 |
Nurul Hasan | lbw b Vishwa Fernando | 17 | 12 | 1 | 1 | 141.67 |
Ariful Haque | c Ramesh Mendis b Shiran Fernando | 6 | 5 | 1 | 0 | 120.00 |
Abu Hider | c Amila Aponso b Vishwa Fernando | 8 | 7 | 1 | 0 | 114.29 |
Sunzamul Islam | not out | 12 | 7 | 1 | 0 | 171.43 |
Ebadat Hossain | not out | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Extras | 32 (b 1 , lb 7 , nb 1, w 23, pen 0) |
Total | 322/9 (50 Overs, RR: 6.44) |
Fall of Wickets | 1-120 (22.2) Niam Sheikh, 2-131 (25.1) Najmul Hossain, 3-156 (30.2) Anamul Haque, 4-255 (41.1) Saif Hassan, 5-267 (43.1) Mohammad Mithun, 6-288 (45.5) Afif Hossain, 7-295 (46.4) Nurul Hasan, 8-299 (47.3) Ariful Haque, 9-307 (48.4) Abu Hider, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 10 | 0 | 69 | 3 | 6.90 | |
Shiran Fernando | 10 | 0 | 50 | 4 | 5.00 | |
Ramesh Mendis | 7 | 0 | 44 | 0 | 6.29 | |
Chamika Karunarathne | 8 | 0 | 61 | 0 | 7.62 | |
Ashan Priyanjan | 6 | 0 | 29 | 0 | 4.83 | |
Amila Aponso | 9 | 0 | 61 | 1 | 6.78 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Abu Hider b Afif Hossain | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Sandun Weerakkody | b Abu Hider | 18 | 13 | 2 | 1 | 138.46 |
Kamindu Mendis | c Saif Hassan b Ebadat Hossain | 55 | 65 | 2 | 3 | 84.62 |
Ashan Priyanjan | c Rishad Hossain b Saif Hassan | 34 | 35 | 4 | 0 | 97.14 |
Priyamal Perera | c Nurul Hasan b Saif Hassan | 7 | 10 | 0 | 0 | 70.00 |
Ashen Bandara | c Ariful Haque b Ebadat Hossain | 6 | 12 | 0 | 0 | 50.00 |
Chamika Karunarathne | not out | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Ramesh Mendis | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0) |
Total | 130/6 (24.4 Overs, RR: 5.27) |
Fall of Wickets | 1-11 (1.5) Pathum Nissanka, 2-27 (4.4) Sandun Weerakkody, 3-91 (15.6) Ashan Priyanjan, 4-103 (19.2) Priyamal Perera, 5-120 (22.6) Ashen Bandara, 6-129 (24.2) Kamindu Mendis, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Abu Hider | 5 | 0 | 28 | 1 | 5.60 | |
Afif Hossain | 6 | 0 | 36 | 1 | 6.00 | |
Ebadat Hossain | 4.4 | 0 | 26 | 2 | 5.91 | |
Saif Hassan | 6 | 0 | 25 | 2 | 4.17 | |
Sunzamul Islam | 3 | 0 | 15 | 0 | 5.00 |
முடிவு – பங்களாதேஷ் A அணி 98 ஓட்டங்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<