சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் A அணி, இலங்கை A அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.
இலங்கை A அணிக்காக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மொஹமட் சிராஸ்
அம்பாந்தோட்டையில் நடைபெற்றுவரும்………….
இதன்படி, இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் A கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த 04ஆம் திகதி ஹம்பாந்தொட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி, பெதும் நிஸ்ஸங்க (85) மற்றும் கமிந்து மெண்டிஸின் (62) அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை எடுத்தது.
பங்களாதேஷ் A அணிக்காக பந்துவீச்சில் மெஹெடி ஹசன் மீராஸ் 84 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் A அணி வீரர்கள் மொமினுல் ஹக்கின் சதம் (117) மற்றும் சத்மான் இஸ்லாமின் அரைச் சதத்தின் (77) உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 330 ஓட்டங்களைக் குவித்தது.
மொமினுல் ஹக்கின் சதம்: மெஹெடியின் அபார பந்துவீச்சினால் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் A அணி
இலங்கை A அணிக்கு எதிரான……………..
பந்துவீச்சில் இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற 24 வயதுடைய வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ் 63 ஓட்டங்ளை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல்தரப் போட்டிகளில் மொஹமட் சிராஸ் மூன்றாவது தடவையாகவும் 5 விக்கெட் பிரதியைப் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
இதையடுத்து, 62 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை A அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவின் போது விக்கெட் இழப்பின்றி 126 ஓட்டங்களை எடுத்திருந்தது. பெதும் நிஸ்ஸங்க 75 ஓட்டங்களுடனும், சங்கீத் குரே 50 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
போட்டியின் நான்காவது நாளான இன்று (07) இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி முதல் விக்கெட்டுக்காக 219 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர். இதில் அரைச் சதமடித்த சங்கீத் குரே 89 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் பெதும் நிஸ்ஸங்கவுடன் கமிந்து மெண்டிஸ் இணைந்தார். இருவரும் எதிரணியின் பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர்.
அபாரமாக ஆடிய பெதும் நிஸ்ஸங்க முதல்தரப் போட்டிகளில் தனது 10ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். மறுமுனையில் கமிந்து மெண்டிஸ் தனது 5ஆவது முதல்தர அரைச் சதத்தைப் பெற்றுக் கொண்டார்.
அன்று சங்கக்கார செய்ததை இன்று குனதிலக்க செய்கிறார் – மிஸ்பா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு…………..
பெதும் நிஸ்ஸங்க 192 ஓட்டங்களை எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆகி ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 20 பௌண்டரிகள் அடங்கும். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் 132 ஓட்டங்களைச் குவித்தனர்.
இந்த நிலையில், இலங்கை A அணி 107 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 357 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுக்கு வந்தது. இதனால், போட்டியும் சமநிலை அடைந்தது. கமிந்து மெண்டிஸ் 67 ஓட்டங்களுடனும், அஷான் பிரியன்ஜன் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன்படி, இரண்டு போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
இந்த நிலையில், இலங்கை A மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 09ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Mehidy Hasan | 85 | 166 | 11 | 0 | 51.20 |
Sangeeth Cooray | c Najmul Hossain b Mehidy Hasan | 17 | 32 | 2 | 0 | 53.12 |
Kamindu Mendis | c Nurul Hasan b Mehidy Hasan | 62 | 121 | 8 | 1 | 51.24 |
Ashan Priyanjan | c Nurul Hasan b Ebadat Hossain | 28 | 48 | 4 | 0 | 58.33 |
Charith Asalanka | c Mominul Haque b Salauddin Sakil | 44 | 100 | 8 | 0 | 44.00 |
Priyamal Perera | c Mohammad Mithun b Ebadat Hossain | 4 | 15 | 0 | 0 | 26.67 |
Lahiru Udara | c Nurul Hasan b Mehidy Hasan | 20 | 50 | 2 | 0 | 40.00 |
Nishan Peiris | lbw b Mehidy Hasan | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Prabath Jayasuriya | c Rishad Hossain b Mehidy Hasan | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Mohamed Shiraz | c Mominul Haque b Mehidy Hasan | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | not out | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 0 , lb 6 , nb 1, w 1, pen 0) |
Total | 268/10 (90.2 Overs, RR: 2.97) |
Fall of Wickets | 1-32 (13.4) Sangeeth Cooray, 2-153 (47.4) Kamindu Mendis, 3-188 (57.3) Pathum Nissanka, 4-217 (66.5) Ashan Priyanjan, 5-221 (70.3) Priyamal Perera, 6-264 (87.1) Lahiru Udara, 7-264 (87.3) Nishan Peiris, 8-268 (89.2) Prabath Jayasuriya, 9-268 (89.4) Mohamed Shiraz, 10-268 (90.2) Charith Asalanka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ebadat Hossain | 23 | 7 | 62 | 2 | 2.70 | |
Salauddin Sakil | 17.2 | 2 | 60 | 1 | 3.49 | |
Mehidy Hasan | 37 | 14 | 84 | 7 | 2.27 | |
Rishad Hossain | 13 | 0 | 56 | 0 | 4.31 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jahurul Islam | b Mohamed Shiraz | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Shadman Islam | c Sangeeth Cooray b Prabath Jayasuriya | 77 | 104 | 8 | 1 | 74.04 |
Najmul Hossain | c Lahiru Udara b Mohamed Shiraz | 9 | 17 | 2 | 0 | 52.94 |
Mominul Haque | c Lahiru Udara b Mohamed Shiraz | 117 | 190 | 15 | 1 | 61.58 |
Mohammad Mithun | c Lahiru Udara b Asitha Fernando | 21 | 36 | 2 | 0 | 58.33 |
Anamul Haque | c Lahiru Udara b Prabath Jayasuriya | 8 | 17 | 1 | 0 | 47.06 |
Nurul Hasan | c Lahiru Udara b Asitha Fernando | 36 | 31 | 3 | 2 | 116.13 |
Mehidy Hasan | not out | 38 | 61 | 3 | 1 | 62.30 |
Rishad Hossain | c Lahiru Udara b Mohamed Shiraz | 7 | 34 | 0 | 0 | 20.59 |
Salauddin Sakil | c Sangeeth Cooray b Prabath Jayasuriya | 4 | 5 | 1 | 0 | 80.00 |
Ebadat Hossain | b Mohamed Shiraz | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 4 , lb 4 , nb 3, w 1, pen 0) |
Total | 330/10 (83.1 Overs, RR: 3.97) |
Fall of Wickets | 1-3 (1.2) Jahurul Islam, 2-22 (5.1) Najmul Hossain, 3-176 (40.1) Shadman Islam, 4-215 (51.5) Mohammad Mithun, 5-230 (56.4) Anamul Haque, 6-270 (63.6) Mominul Haque, 7-285 (67.3) Nurul Hasan, 8-310 (79.4) Rishad Hossain, 9-315 (80.6) Salauddin Sakil, 10-330 (83.1) Ebadat Hossain, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 16 | 4 | 48 | 2 | 3.00 | |
Mohamed Shiraz | 21.1 | 6 | 63 | 5 | 2.99 | |
Nishan Peiris | 7 | 0 | 41 | 0 | 5.86 | |
Ashan Priyanjan | 4 | 0 | 22 | 0 | 5.50 | |
Prabath Jayasuriya | 31 | 3 | 114 | 3 | 3.68 | |
Charith Asalanka | 3 | 0 | 19 | 0 | 6.33 | |
Kamindu Mendis | 1 | 0 | 15 | 0 | 15.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | run out (Mehidy Hasan) | 192 | 307 | 20 | 1 | 62.54 |
Sangeeth Cooray | c Nurul Hasan b Rishad Hossain | 89 | 188 | 12 | 0 | 47.34 |
Kamindu Mendis | not out | 67 | 134 | 6 | 0 | 50.00 |
Ashan Priyanjan | not out | 5 | 14 | 0 | 0 | 35.71 |
Extras | 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0) |
Total | 357/2 (107 Overs, RR: 3.34) |
Fall of Wickets | 1-219 (62.3) Sangeeth Cooray, 2-351 (103.4) Pathum Nissanka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ebadat Hossain | 21 | 2 | 60 | 0 | 2.86 | |
Mehidy Hasan | 37 | 5 | 118 | 0 | 3.19 | |
Salauddin Sakil | 22 | 4 | 79 | 0 | 3.59 | |
Rishad Hossain | 23 | 2 | 78 | 1 | 3.39 | |
Mohammad Mithun | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Mominul Haque | 3 | 0 | 12 | 0 | 4.00 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<