Home Tamil மொமினுல் ஹக்கின் சதம்: மெஹெடியின் அபார பந்துவீச்சினால் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் A அணி

மொமினுல் ஹக்கின் சதம்: மெஹெடியின் அபார பந்துவீச்சினால் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் A அணி

298

இலங்கை A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மொமினுல் ஹக் அபார சதம் மற்றும் சத்மான் இஸ்லாம் அரைச் சதமடித்து கைகொடுக்க பங்களாதேஷ் A அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. 

அதே சமயம், இலங்கை A மற்றும் வளர்ந்துவரும் அணிகளுக்காக விளையாடி வருகின்ற இளம் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ் இன்றைய போட்டியில் அபாரமாக பந்துவீசி 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். 

இளம் பெதும், கமிந்து ஜோடி அசத்த இலங்கை A அணி வலுவான நிலையில்

பங்களாதேஷ் A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் …

இதன்படி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் A அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ஓட்டங்களுடன் உள்ளது.

இலங்கை A, பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டையில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் முதல் நாளான நேற்று (04) முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி, பெதும் நிஸ்ஸங்க மற்றும் கவிந்து மெண்டிஸின் அரைச் சதங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ஓட்டங்களைக் குவித்தது. சரித் அசலங்க 17 ஓட்டங்களுடனும், லஹிரு உதார 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். 

இருவரும் இன்றைய (05) இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். போட்டி ஆரம்பித்தது முதல் மெஹெடி ஹசன் மீராஸின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி வீரர்கள் தடுமாறினர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லஹிரு உதார 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த நிஷான் பீரிஸ் LBW முறையில் ஆட்டமிழக்க, மெஹெடி ஹசனின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய ரிஷாட் ஹொசைனிடமும், மொஹமட் சிராஸ் மொமினுல் ஹக்கிடமும் பிடிகொடுத்து ஓட்டமின்றி அடுத்தடுத்து ஓய்வறை சென்றனர்.

இறுதியில் இலங்கை A அணி 90.2 ஓவர்களில் 268 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பங்களாதேஷ் A அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மெஹெடி ஹசன் மீராஸ் 84 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை பங்களாதேஷ் A அணி தொடங்கியது. ஜஹ்ருல் இஸ்லாம் ஒரு ஓட்டத்துடன் மொஹமட் சிராஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து வந்த நஜ்முல் ஹொசைன் 9 ஓட்டங்களை எடுத்து பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் சங்கீத் குரேவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 

பின்னர் சத்மான் இஸ்லாமுடன் மொமினுல் ஹக் இணைந்தார். இருவரும் 3  ஆவது விக்கெட்டுக்காக சிறப்பாக துடுபாடி 154 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதில் சத்மான் இஸ்லாம் 77 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மொஹமட் சிராஸின் பந்துவீச்சில் லஹிரு உதாரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த மொஹமட் மிதுன், மொமினுல் ஹக்குடன் இணைந்தார். 21 ஓட்டங்களை எடுத்த மொஹமட் மிதுன் அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் வெளியேறினார்.

இந்நிலையில், 5ஆவது விக்கெட்டுக்காக மொமினுல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த அனாமுல் ஹக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 40 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற நிலையில் அனாமுல் ஹக் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் மொமினுல் ஹக்கின் ஆதிக்கம் நீடித்தது. இதனால் பங்களாதேஷ்  A அணி சரிவில் இருந்து மீண்டது. சிறப்பாக விளையாடிய அவர் சதமடித்து அசத்தினார். 

எனினும், சதமடித்த மொமினுல் ஹக்கின் விக்கெட்டை மொஹமட் சிராஸ் கைப்பற்றினார். அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை 270 ஓட்டங்களை எட்டிய போது, மொமினுல் ஹக் சிராஸின் பந்து வீச்சை எதிர்கொள்ள அதை லஹிரு உதார பிடியெடுத்தார். மொமினுல் ஹக் 117 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

இதன்படி, 2ஆவது நாள் முடிவில் பங்களாதேஷ் A அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ஓட்டங்களை எடுத்துள்ளது. நூறுல் ஹசன் (35), மெஹெடி ஹசன் (6 ஓட்டங்கள்) ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் சிராஸ் 3 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும். 

ஸ்கோர் விபரம்

Result

Match drawn

Sri Lanka A Team
268/10 (90.2) & 357/2 (107)

Bangladesh A
330/10 (83.1)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Mehidy Hasan 85 166 11 0 51.20
Sangeeth Cooray c Najmul Hossain b Mehidy Hasan 17 32 2 0 53.12
Kamindu Mendis c Nurul Hasan b Mehidy Hasan 62 121 8 1 51.24
Ashan Priyanjan c Nurul Hasan b Ebadat Hossain 28 48 4 0 58.33
Charith Asalanka c Mominul Haque b Salauddin Sakil 44 100 8 0 44.00
Priyamal Perera c Mohammad Mithun b Ebadat Hossain 4 15 0 0 26.67
Lahiru Udara c Nurul Hasan b Mehidy Hasan 20 50 2 0 40.00
Nishan Peiris lbw b Mehidy Hasan 0 2 0 0 0.00
Prabath Jayasuriya c Rishad Hossain b Mehidy Hasan 0 5 0 0 0.00
Mohamed Shiraz c Mominul Haque b Mehidy Hasan 0 2 0 0 0.00
Asitha Fernando not out 0 2 0 0 0.00


Extras 8 (b 0 , lb 6 , nb 1, w 1, pen 0)
Total 268/10 (90.2 Overs, RR: 2.97)
Fall of Wickets 1-32 (13.4) Sangeeth Cooray, 2-153 (47.4) Kamindu Mendis, 3-188 (57.3) Pathum Nissanka, 4-217 (66.5) Ashan Priyanjan, 5-221 (70.3) Priyamal Perera, 6-264 (87.1) Lahiru Udara, 7-264 (87.3) Nishan Peiris, 8-268 (89.2) Prabath Jayasuriya, 9-268 (89.4) Mohamed Shiraz, 10-268 (90.2) Charith Asalanka,

Bowling O M R W Econ
Ebadat Hossain 23 7 62 2 2.70
Salauddin Sakil 17.2 2 60 1 3.49
Mehidy Hasan 37 14 84 7 2.27
Rishad Hossain 13 0 56 0 4.31
Batsmen R B 4s 6s SR
Jahurul Islam b Mohamed Shiraz 1 4 0 0 25.00
Shadman Islam c Sangeeth Cooray b Prabath Jayasuriya 77 104 8 1 74.04
Najmul Hossain c Lahiru Udara b Mohamed Shiraz 9 17 2 0 52.94
Mominul Haque c Lahiru Udara b Mohamed Shiraz 117 190 15 1 61.58
Mohammad Mithun c Lahiru Udara b Asitha Fernando 21 36 2 0 58.33
Anamul Haque c Lahiru Udara b Prabath Jayasuriya 8 17 1 0 47.06
Nurul Hasan c Lahiru Udara b Asitha Fernando 36 31 3 2 116.13
Mehidy Hasan not out 38 61 3 1 62.30
Rishad Hossain c Lahiru Udara b Mohamed Shiraz 7 34 0 0 20.59
Salauddin Sakil c Sangeeth Cooray b Prabath Jayasuriya 4 5 1 0 80.00
Ebadat Hossain b Mohamed Shiraz 0 3 0 0 0.00


Extras 12 (b 4 , lb 4 , nb 3, w 1, pen 0)
Total 330/10 (83.1 Overs, RR: 3.97)
Fall of Wickets 1-3 (1.2) Jahurul Islam, 2-22 (5.1) Najmul Hossain, 3-176 (40.1) Shadman Islam, 4-215 (51.5) Mohammad Mithun, 5-230 (56.4) Anamul Haque, 6-270 (63.6) Mominul Haque, 7-285 (67.3) Nurul Hasan, 8-310 (79.4) Rishad Hossain, 9-315 (80.6) Salauddin Sakil, 10-330 (83.1) Ebadat Hossain,

Bowling O M R W Econ
Asitha Fernando 16 4 48 2 3.00
Mohamed Shiraz 21.1 6 63 5 2.99
Nishan Peiris 7 0 41 0 5.86
Ashan Priyanjan 4 0 22 0 5.50
Prabath Jayasuriya 31 3 114 3 3.68
Charith Asalanka 3 0 19 0 6.33
Kamindu Mendis 1 0 15 0 15.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka run out (Mehidy Hasan) 192 307 20 1 62.54
Sangeeth Cooray c Nurul Hasan b Rishad Hossain 89 188 12 0 47.34
Kamindu Mendis not out 67 134 6 0 50.00
Ashan Priyanjan not out 5 14 0 0 35.71


Extras 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0)
Total 357/2 (107 Overs, RR: 3.34)
Fall of Wickets 1-219 (62.3) Sangeeth Cooray, 2-351 (103.4) Pathum Nissanka,

Bowling O M R W Econ
Ebadat Hossain 21 2 60 0 2.86
Mehidy Hasan 37 5 118 0 3.19
Salauddin Sakil 22 4 79 0 3.59
Rishad Hossain 23 2 78 1 3.39
Mohammad Mithun 1 0 8 0 8.00
Mominul Haque 3 0 12 0 4.00



மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…