Home Tamil இலங்கை A அணியின் வெற்றியைப் பறித்த நயிம், மிதுனின் துடுப்பாட்டம்

இலங்கை A அணியின் வெற்றியைப் பறித்த நயிம், மிதுனின் துடுப்பாட்டம்

185

இலங்கை A மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கமிந்து மெண்டிஸ், பிரியமால் பெரேரா ஆகிய இருவரும் பெற்றுக் கொண்ட அரைச் சதத்துக்கு மொஹமட் நயிம் மற்றும் மொஹமட் மிதுன் ஆகியோர் அரைச் சதமடித்து பதிலடி கொடுக்க பங்களாதேஷ் A அணி ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் 2ஆவது போட்டி இன்று (10) கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

அஷான் பிரியஞ்சன் சகலதுறையிலும் அசத்த இலங்கை A அணிக்கு இலகு வெற்றி

பங்களாதேஷ் A அணியுடன் நடைபெற்ற……

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் A அணியின் தலைவர் மொஹமட் மிதுன் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன்படி, துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை A அணி, தமது முதல் விக்கெட்டினை 28 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்க (15) அபூ ஹைதரின் பந்து வீச்சில் சுன்சமுல் இஸ்லாமிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

மறுபுறத்தில் இருந்த லஹிரு உதார 23 ஓட்டங்களுடனும், முதலாவது போட்டியில் அரைச் சதமடித்த அணித் தலைவர் அஷான் பிரயஞ்சன் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.

பின்னர் கமிந்து மெண்டிஸுடன் பிரியமால் பெரேரா இணைந்தார். இருவரும் 4ஆவது விக்கெட்டுக்காக நிதானமாக ஆடி 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதில் அரைச் சதமடித்த கமிந்து மெண்டிஸ் 61 ஓட்டங்களை எடுத்திருந்தபோது ஆபிப் ஹொசைனின் பந்துவீச்சில் ஆரிபுல் ஹக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

Photos – Bangladesh A tour of Sri Lanka 2019 | 2nd Unofficial ODI

மறுமுனையில் கமிந்து மெண்டிஸுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த பிரியமால் பெரேராவும் அரைச் சதமடித்த நிலையில் 52 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவ்விரண்டு வீரர்களினதும் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டதையடுத்து, தொடர்ந்து பின்வரிசை வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை A அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை எடுத்தது.

பங்களாதேஷ் A அணியின் பந்துவீச்சு சார்பாக அபூ ஹைதர், இபாதத் ஹொசைன் மற்றும் சுன்சமுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து, 227 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் A அணி களமிறங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சயிப் ஹஸன் மற்றும் மொஹமட் நயிம் ஆகியோர் களமிறங்கினர். சய்ப் ஹஸன் 5 ஓட்டங்களுடன் ஷிரான் பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த இளம் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு……

தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹஸன், சயிப் ஹஸனுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களை பெற்று அணியை வலுப்படுத்தினார். நஜ்முல் ஹஸன் 21 ஓட்டங்களை பெற்றிருந்த போது  சாமிக்க கருணாரத்னவின் பந்து வீச்சில் லஹிரு உதாரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும், 3ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சயிப் ஹஸன் மற்றும் ஆபிப் ஹொசைன் ஆகியோர் நிதானமான இணைப்பாட்டம் (63) ஒன்றினை வழங்கி பங்களாதேஷ் A அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆபிப் ஹொசைன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல, அடுத்து வந்து சற்று நிதானமாக விளையாடிய நூருல் ஹஸன் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஆரம்ப துடுப்பாட்ட மொஹமட் நயிம் மற்றும் அணித் தலைவர் மொஹமட் மிதுன் ஆகியோர் அரைச் சதமடித்து கைகொடுக்க, பங்களாதேஷ் A அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ஓட்டங்களை பெற்று த்ரில் வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் A அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய மொஹமட் நயிம் 68 ஓட்டங்களையும், மொஹமட் மிதுன் 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை A அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, சாமிக்க கருணாரத்ன மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதன்படி, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை பெற்றது.

T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் கடமையாற்றவுள்ள இலங்கை நடுவர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம்…..

இது இவ்வாறிருக்க, இவ்விரு அணிகளுக்கும்  இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka A Team
226/9 (50)

Bangladesh A
227/9 (50)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Sunzamul Islam b Abu Hider 15 27 3 0 55.56
Lahiru Udara c Niam Sheikh b Ebadat Hossain 23 40 1 0 57.50
Kamindu Mendis c Ariful Haque b Afif Hossain 61 67 6 1 91.04
Ashan Priyanjan c Nurul Hasan b Saif Hassan 7 17 0 0 41.18
Priyamal Perera st Nurul Hasan b Sunzamul Islam 52 62 2 1 83.87
Ashen Bandara c Afif Hossain b Sunzamul Islam 18 25 2 0 72.00
Ramesh Mendis b Abu Hider 2 10 0 0 20.00
Ishan Jayaratne c Nurul Hasan b Ebadat Hossain 6 11 0 0 54.55
Chamika Karunarathne not out 25 27 1 0 92.59
Amila Aponso b Abu Jayed 3 11 0 0 27.27
Shiran Fernando not out 1 3 0 0 33.33


Extras 13 (b 1 , lb 3 , nb 0, w 9, pen 0)
Total 226/9 (50 Overs, RR: 4.52)
Fall of Wickets 1-28 (7.3) Pathum Nissanka, 2-63 (14.6) Lahiru Udara, 3-80 (19.5) Ashan Priyanjan, 4-158 (34.3) Kamindu Mendis, 5-172 (37.2) Priyamal Perera, 6-189 (40.6) Ramesh Mendis, 7-191 (41.3) Ashen Bandara, 8-207 (45.4) Ishan Jayaratne, 9-216 (48.4) Amila Aponso,

Bowling O M R W Econ
Abu Jayed 8 0 39 1 4.88
Abu Hider 10 1 42 2 4.20
Ebadat Hossain 10 0 46 2 4.60
Saif Hassan 10 0 39 1 3.90
Sunzamul Islam 10 0 43 2 4.30
Afif Hossain 2 0 13 1 6.50


Batsmen R B 4s 6s SR
Saif Hassan c Ashen Bandara b Shiran Fernando 5 15 0 0 33.33
Niam Sheikh c & b Ramesh Mendis 68 59 9 0 115.25
Najmul Hossain c Lahiru Udara b Chamika Karunarathne 21 39 1 0 53.85
Mohammad Mithun c Ashen Bandara b Ramesh Mendis 52 87 3 1 59.77
Afif Hossain c Chamika Karunarathne b Shiran Fernando 24 31 0 2 77.42
Nurul Hasan c Lahiru Udara b Chamika Karunarathne 25 43 3 0 58.14
Ariful Haque c Priyamal Perera b Ashan Priyanjan 7 11 0 0 63.64
Sunzamul Islam not out 11 9 1 0 122.22
Ebadat Hossain c Ramesh Mendis b Ashan Priyanjan 2 4 0 0 50.00
Abu Jayed c Chamika Karunarathne b Ramesh Mendis 1 3 0 0 33.33
Abu Hider not out 0 0 0 0 0.00


Extras 11 (b 1 , lb 1 , nb 1, w 8, pen 0)
Total 227/9 (50 Overs, RR: 4.54)
Fall of Wickets 1-15 (3.5) Saif Hassan, 2-74 (14.6) Najmul Hossain, 3-115 (25.3) Afif Hossain, 4-178 (40.3) Nurul Hasan, 5-190 (43.1) Mohammad Mithun, 6-209 (46.6) Ariful Haque, 7-211 (47.2) Niam Sheikh, 8-216 (48.4) Ebadat Hossain, 9-226 (49.5) Abu Jayed,

Bowling O M R W Econ
Ishan Jayaratne 8 0 41 0 5.12
Shiran Fernando 6 0 38 2 6.33
Ramesh Mendis 9 0 40 3 4.44
Chamika Karunarathne 7 0 35 2 5.00
Amila Aponso 10 2 32 0 3.20
Ashan Priyanjan 7 0 29 2 4.14
Kamindu Mendis 3 0 10 0 3.33



முடிவு – பங்களாதேஷ் A அணி ஒரு விக்கெட்டால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<