சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையில் அம்பாந்தோட்டையில் நடைபெற்று வந்த மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர்களான சங்கீத் குரே மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதமடித்து அசத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இலங்கைக்கு A அணிக்கு எதிராக சதத்ததை தவறவிட்ட ஜஹ்ருல், மிதுன்
இலங்கை A அணியுடனான…………..
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் A அணி, இலங்கை A அணியுடன் மூன்று நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (29) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் A அணி, மொஹமட் மிதுன் (92), ஜஹ்ருல் இஸ்லாம் (90), மெஹெடி ஹசன் மிராஸ் (57) மற்றும் சத்மான் இஸ்லாம் (53) ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 360 ஓட்டங்களை எடுத்தது.
இதேவேளை, இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி, போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை எடுத்தது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சங்கீத் குரே சதம் கடந்து 104 ஓட்டங்களைக் குவித்து, கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும், அணித் தலைவர் அஷான் பிரியன்ஜன் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இது இவ்வாறிருக்க, போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய தினம் (01) இலங்கை A அணி தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.
போட்டியின் ஆரம்பத்திலே அணித் தலைவர் அஷான் பிரியன்ஜன் 37 ஓட்டங்களுடனும், அஷேன் பண்டார 2 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன்பிறகு கமிந்து மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த பிரியமால் பெரேரா பங்களாதேஷ் A அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர்.
சங்கீத், கமிந்து அபாரம் ஆட்டம்: வலுவான நிலையில் இலங்கை A அணி
இலங்கை A கிரிக்கெட் அணிக்கும்………..
நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 5ஆவது விக்கெட்டுக்காக 94 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, 3ஆவது இலக்கத்தில் களமிறங்கி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தினார்.
எனினும், வேகமாக துடுப்பாடி அரைச் சதம் கடந்த பிரியமால் பெரேரா 75 பந்துகளில் 61 ஓட்டங்களை எடுத்து மெஹெடி ஹசனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ரமேஷ் மெண்டிஸ் கமிந்து மெண்டிஸுடன் இணைந்து அரைச்சத (53) இணைப்பாட்டமொன்றை முன்னெடுத்து அணிக்கு வலுச்சேர்க்க, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரமேஷ் மெண்டிஸ் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இலங்கை A அணிக்காக துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொடுத்த கமிந்து மெண்டிஸ் 169 ஓட்டங்களை எடுத்த நிலையில் மொஹமட் மிதுனின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் 3ஆவது நாள் ஆட்டத்துக்காக ஒரு ஓவர் மாத்திரம் எஞ்சியிருக்க, இலங்கை A அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 450 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பின்னர் 90 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த பங்களாதேஷ் A அணி ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக்கொள்ள போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுக்கு வந்தது. இதனால், போட்டி சமநிலை அடைந்தது.
Photos: Bangladesh A tour of Sri Lanka 2019 – 1st Unofficial Test
ThePapare.com | Sithija De Silva | 1/10/2019 Editing and re-using images without permission of ThePapare.com……..
பங்களாதேஷ் A அணிக்காக துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் பிரகாசித்த மெஹெடி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் மிதுன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி இதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jahurul Islam | lbw b Vishwa Fernando | 90 | 210 | 8 | 0 | 42.86 |
Shadman Islam | st Manoj Sarathchandra b Ashan Priyanjan | 53 | 112 | 8 | 0 | 47.32 |
Najmul Hossain | b Ramesh Mendis | 4 | 21 | 0 | 0 | 19.05 |
Mominul Haque | c Malinda Pushpakumara b Ramesh Mendis | 11 | 21 | 1 | 0 | 52.38 |
Mohammad Mithun | run out (Ashen Bandara) | 92 | 120 | 10 | 3 | 76.67 |
Soumya Sarkar | c Kamindu Mendis b Asitha Fernando | 24 | 38 | 3 | 0 | 63.16 |
Nurul Hasan | c Ramesh Mendis b Asitha Fernando | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Mehidy Hasan | st Manoj Sarathchandra b Ramesh Mendis | 57 | 114 | 7 | 0 | 50.00 |
Mehedi Hasan Rana | c Kamindu Mendis b Malinda Pushpakumara | 8 | 19 | 2 | 0 | 42.11 |
Abu Jayed | not out | 8 | 48 | 0 | 0 | 16.67 |
Ebadat Hossain | b Asitha Fernando | 7 | 14 | 0 | 1 | 50.00 |
Extras | 5 (b 0 , lb 4 , nb 0, w 1, pen 0) |
Total | 360/10 (120.1 Overs, RR: 3) |
Fall of Wickets | 1-90 (32.6) Shadman Islam, 2-102 (38.2) Najmul Hossain, 3-116 (44.2) Mominul Haque, 4-253 (80.2) Mohammad Mithun, 5-257 (81.2) Jahurul Islam, 6-260 (82.6) Nurul Hasan, 7-309 (96.1) Soumya Sarkar, 8-318 (101.3) Mehedi Hasan Rana, 9-348 (112.6) Mehidy Hasan, 10-360 (120.1) Ebadat Hossain, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 16 | 0 | 79 | 1 | 4.94 | |
Asitha Fernando | 23.1 | 3 | 59 | 3 | 2.55 | |
Malinda Pushpakumara | 35 | 5 | 94 | 1 | 2.69 | |
Ramesh Mendis | 23 | 6 | 57 | 3 | 2.48 | |
Ashan Priyanjan | 12 | 1 | 34 | 1 | 2.83 | |
Kamindu Mendis | 6 | 0 | 15 | 0 | 2.50 | |
Ashen Bandara | 5 | 0 | 18 | 0 | 3.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Ebadat Hossain | 14 | 24 | 3 | 0 | 58.33 |
Sangeeth Cooray | c Soumya Sarkar b Mehidy Hasan | 104 | 151 | 15 | 0 | 68.87 |
Kamindu Mendis | b Mohammad Mithun | 169 | 282 | 9 | 0 | 59.93 |
Ashan Priyanjan | lbw b Mehidy Hasan | 37 | 56 | 6 | 0 | 66.07 |
Ashen Bandara | run out (Mehidy Hasan) | 2 | 12 | 0 | 0 | 16.67 |
Priyamal Perera | c Mohammad Mithun b Mehidy Hasan | 61 | 75 | 9 | 0 | 81.33 |
Ramesh Mendis | lbw b Mehidy Hasan | 21 | 32 | 3 | 1 | 65.62 |
Manoj Sarathchandra | lbw b Mohammad Mithun | 12 | 38 | 1 | 0 | 31.58 |
Malinda Pushpakumara | st Nurul Hasan b Mehidy Hasan | 15 | 36 | 2 | 0 | 41.67 |
Vishwa Fernando | c Mohammad Mithun b Mehidy Hasan | 4 | 15 | 1 | 0 | 26.67 |
Asitha Fernando | not out | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 0 , lb 8 , nb 0, w 3, pen 0) |
Total | 450/10 (121.1 Overs, RR: 3.71) |
Fall of Wickets | 1-17 (5.5) Pathum Nissanka, 2-182 (48.5) Sangeeth Cooray, 3-261 (67.5) Ashan Priyanjan, 4-269 (70.6) Ashen Bandara, 5-363 (92.2) Priyamal Perera, 6-416 (103.2) Ramesh Mendis, 7-422 (106.6) Kamindu Mendis, 8-433 (114.4) Manoj Sarathchandra, 9-450 (119.4) Vishwa Fernando, 10-450 (121.1) Malinda Pushpakumara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Abu Jayed | 12 | 0 | 48 | 0 | 4.00 | |
Ebadat Hossain | 20 | 1 | 82 | 1 | 4.10 | |
Mehedi Hasan Rana | 21 | 3 | 88 | 1 | 4.19 | |
Mehidy Hasan | 46.1 | 9 | 150 | 5 | 3.25 | |
Mohammad Mithun | 14 | 3 | 34 | 2 | 2.43 | |
Soumya Sarkar | 4 | 1 | 14 | 0 | 3.50 | |
Mominul Haque | 3 | 0 | 16 | 0 | 5.33 | |
Najmul Hossain | 1 | 0 | 10 | 0 | 10.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jahurul Islam | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Shadman Islam | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 1/0 (1 Overs, RR: 1) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 1 | 0 | 1 | 0 | 1.00 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<