இலங்கை A கிரிக்கெட் அணிக்கும், பங்களாதேஷ் A கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற மூன்று நாட்கள் கொண்ட முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (30) நிறைவுக்கு வந்தது.
இதில் இலங்கை A கிரிக்கெட் அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய சங்கீத் குரே சதமடித்து அசத்த, கமிந்து மெண்டிஸ் அரைச் சதமடித்து கைகொடுத்தார்.
இலங்கைக்கு A அணிக்கு எதிராக சதத்ததை தவறவிட்ட ஜஹ்ருல், மிதுன்
இலங்கை A அணியுடனான………..
இவர்களது பங்களிப்புடன் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்ற இலங்கை A கிரிக்கெட் அணி, இன்றைய ஆட்டநேர முடிவின் போது 2 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களைப் பெற்று நிதானமாக விளையாடி வருகிறது.
உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் A அணி, இலங்கை A அணியுடன் மூன்று நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.
Photos: Bangladesh ‘A’ tour of Sri Lanka 2019 | 1st Unofficial Test – Day 2
இந்நிலையில், இரு அணிகளுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று (29) ஹம்பாந்தொட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி, போட்டியின் முதல் நாள் நிறைவில் மொஹமட் மிதுன், ஜஹ்ருல் இஸ்லாம் மற்றும் சத்மான் இஸ்லாம் ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 270 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் வராத வீரர்கள் இலங்கை அணியில் தமது இடத்தை இழக்கலாம்
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில்………
அந்த அணியின் துடுப்பாட்டத்திற்காக சௌமிய சர்கார் 8 ஓட்டங்களையும், மெஹெடி ஹசன் 7 ஓட்டங்களையும் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் நின்றனர்.
இந்நிலையில், போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் (30) பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. ஏழாவது விக்கெட்டுக்காக சௌமிய சர்கார் மற்றும் மெஹெடி ஹசன் ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ஓட்டங்களை சேர்த்தனர். இதில் சௌமிய சர்கார் 24 ஓட்டங்களை எடுத்து அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் வெளியேறினார்.
இறுதியில் மெஹெடி ஹசனின் அரைச் சதத்தின் (57) உதவியோடு பங்களாதேஷ் A அணி 120.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 360 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை A கிரிக்கெட் அணிக்காக பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A கிரிக்கெட் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 17 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க (14) இபாதத் ஹொசைனின் பந்துவீச்சில், எல்பிடப்லியு முறையில் ஆட்டமிழந்தார்.
இலங்கையுடனான T20 தொடரில் அஸ்டன் டேர்னர் ஆடுவதில் சந்தேகம்
தற்போது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட்………….
இதனை அடுத்து சங்கீத் குரேவுடன் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் 2ஆவது விக்கெட்டுக்காக 165 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து வலுச்சேர்த்தனர். எனினும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கீத் குரோ சதம் கடந்த நிலையில் 104 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது இலங்கை A கிரிக்கெட் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
கமிந்து மெண்டிஸ் அரைச் சதத்தினைக் கடந்து 79 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் அஷான் பிரியன்ஞன் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
பங்களாதேஷ் A அணியின் பந்துவீச்சில், இபாதத் ஹொசைன், சௌமிய சர்கார் மற்றும் மெஹெடி ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர். நாளை போட்டியின் மூன்றாவதும், இறுதியுமான நாளாகும்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jahurul Islam | lbw b Vishwa Fernando | 90 | 210 | 8 | 0 | 42.86 |
Shadman Islam | st Manoj Sarathchandra b Ashan Priyanjan | 53 | 112 | 8 | 0 | 47.32 |
Najmul Hossain | b Ramesh Mendis | 4 | 21 | 0 | 0 | 19.05 |
Mominul Haque | c Malinda Pushpakumara b Ramesh Mendis | 11 | 21 | 1 | 0 | 52.38 |
Mohammad Mithun | run out (Ashen Bandara) | 92 | 120 | 10 | 3 | 76.67 |
Soumya Sarkar | c Kamindu Mendis b Asitha Fernando | 24 | 38 | 3 | 0 | 63.16 |
Nurul Hasan | c Ramesh Mendis b Asitha Fernando | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Mehidy Hasan | st Manoj Sarathchandra b Ramesh Mendis | 57 | 114 | 7 | 0 | 50.00 |
Mehedi Hasan Rana | c Kamindu Mendis b Malinda Pushpakumara | 8 | 19 | 2 | 0 | 42.11 |
Abu Jayed | not out | 8 | 48 | 0 | 0 | 16.67 |
Ebadat Hossain | b Asitha Fernando | 7 | 14 | 0 | 1 | 50.00 |
Extras | 5 (b 0 , lb 4 , nb 0, w 1, pen 0) |
Total | 360/10 (120.1 Overs, RR: 3) |
Fall of Wickets | 1-90 (32.6) Shadman Islam, 2-102 (38.2) Najmul Hossain, 3-116 (44.2) Mominul Haque, 4-253 (80.2) Mohammad Mithun, 5-257 (81.2) Jahurul Islam, 6-260 (82.6) Nurul Hasan, 7-309 (96.1) Soumya Sarkar, 8-318 (101.3) Mehedi Hasan Rana, 9-348 (112.6) Mehidy Hasan, 10-360 (120.1) Ebadat Hossain, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 16 | 0 | 79 | 1 | 4.94 | |
Asitha Fernando | 23.1 | 3 | 59 | 3 | 2.55 | |
Malinda Pushpakumara | 35 | 5 | 94 | 1 | 2.69 | |
Ramesh Mendis | 23 | 6 | 57 | 3 | 2.48 | |
Ashan Priyanjan | 12 | 1 | 34 | 1 | 2.83 | |
Kamindu Mendis | 6 | 0 | 15 | 0 | 2.50 | |
Ashen Bandara | 5 | 0 | 18 | 0 | 3.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Ebadat Hossain | 14 | 24 | 3 | 0 | 58.33 |
Sangeeth Cooray | c Soumya Sarkar b Mehidy Hasan | 104 | 151 | 15 | 0 | 68.87 |
Kamindu Mendis | b Mohammad Mithun | 169 | 282 | 9 | 0 | 59.93 |
Ashan Priyanjan | lbw b Mehidy Hasan | 37 | 56 | 6 | 0 | 66.07 |
Ashen Bandara | run out (Mehidy Hasan) | 2 | 12 | 0 | 0 | 16.67 |
Priyamal Perera | c Mohammad Mithun b Mehidy Hasan | 61 | 75 | 9 | 0 | 81.33 |
Ramesh Mendis | lbw b Mehidy Hasan | 21 | 32 | 3 | 1 | 65.62 |
Manoj Sarathchandra | lbw b Mohammad Mithun | 12 | 38 | 1 | 0 | 31.58 |
Malinda Pushpakumara | st Nurul Hasan b Mehidy Hasan | 15 | 36 | 2 | 0 | 41.67 |
Vishwa Fernando | c Mohammad Mithun b Mehidy Hasan | 4 | 15 | 1 | 0 | 26.67 |
Asitha Fernando | not out | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 0 , lb 8 , nb 0, w 3, pen 0) |
Total | 450/10 (121.1 Overs, RR: 3.71) |
Fall of Wickets | 1-17 (5.5) Pathum Nissanka, 2-182 (48.5) Sangeeth Cooray, 3-261 (67.5) Ashan Priyanjan, 4-269 (70.6) Ashen Bandara, 5-363 (92.2) Priyamal Perera, 6-416 (103.2) Ramesh Mendis, 7-422 (106.6) Kamindu Mendis, 8-433 (114.4) Manoj Sarathchandra, 9-450 (119.4) Vishwa Fernando, 10-450 (121.1) Malinda Pushpakumara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Abu Jayed | 12 | 0 | 48 | 0 | 4.00 | |
Ebadat Hossain | 20 | 1 | 82 | 1 | 4.10 | |
Mehedi Hasan Rana | 21 | 3 | 88 | 1 | 4.19 | |
Mehidy Hasan | 46.1 | 9 | 150 | 5 | 3.25 | |
Mohammad Mithun | 14 | 3 | 34 | 2 | 2.43 | |
Soumya Sarkar | 4 | 1 | 14 | 0 | 3.50 | |
Mominul Haque | 3 | 0 | 16 | 0 | 5.33 | |
Najmul Hossain | 1 | 0 | 10 | 0 | 10.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jahurul Islam | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Shadman Islam | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 1/0 (1 Overs, RR: 1) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 1 | 0 | 1 | 0 | 1.00 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<