Home Tamil இலங்கைக்கு A அணிக்கு எதிராக சதத்ததை தவறவிட்ட ஜஹ்ருல், மிதுன்

இலங்கைக்கு A அணிக்கு எதிராக சதத்ததை தவறவிட்ட ஜஹ்ருல், மிதுன்

148
SLC

இலங்கை A  அணியுடனான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மொஹமட் மிதுன், ஜஹ்ருல் இஸ்லாம் மற்றும் சத்மான் இஸ்லாம் ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி வலுவடைந்துள்ளது. 

உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் A அணி, இலங்கை A அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட இருந்தது.  

சீரற்ற காலநிலையால் மாற்றம் செய்யப்பட்ட இலங்கை – பங்களாதேஷ் A தொடர்

சுற்றுலா பங்களாதேஷ் A அணிக்கும்…

இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி கடந்த 23ஆம் திகதி கட்டுநாயக்கவில் உள்ள எம்.சி.ஜி மைதானத்தில் ஆரம்பமாக இருந்தது

எனினும், போட்டியின் முதலிரண்டு நாட்களிலும் தொடர்ந்து பெய்த மழையினால் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மீள் திருத்தப்பட்ட போட்டி அட்டவணையின் பிரகாரம் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 நாட்கள் கொண்டதாக ஹம்பாந்தோட்டையில் நடாத்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது

இதன்படி, இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் A கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று (29) ஹம்பாந்தொட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற, பங்களாதேஷ் A அணியின் தலைவர் மொமினுல் ஹக் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பங்களாதேஷ் தரப்பிற்கு ஜஹ்ருல் இஸ்லாம் மற்றும் சத்மான் இஸ்லாம் ஜோடி அரைச்சத இணைப்பாட்டமொன்றைப் பெற்றுக் கொண்டனர்.

இருவரும் 50 ஓட்ட இணைப்பாட்டத்தைக் கடந்த நிலையில், சத்மான் இஸ்லாம் 53 ஓட்டங்களுடன் ஷான் பிரியன்ஜனின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 

தொடர்ந்து வந்த நஜ்முல் ஹொசைன் சான்டோ 4 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் மொமினுல் ஹக் 11 ஓட்டங்களுடனும் ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  

அடுத்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜஹ்ருல் இஸ்லாமுடன் மொஹமட் மிதுன் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 4ஆவது விக்கெட்டுக்கு 137 ஓட்டங்களை சேர்த்தனர்

இதில் 92 ஓட்டங்களை எடுத்த மொஹமட் மிதுன் அஷேன் பண்டாரவின் அபார களத்தடுப்பினால் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க, 90 ஓட்டங்களை எடுத்த ஜஹ்ருல் இஸ்லாம், விஷ் பெர்னாண்டோவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்

இலங்கை A – பங்களாதேஷ் A முதல் டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது

சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் மற்றும்….

தொடர்ந்து வந்த நூருல் ஹசன் ஒரு ஓட்டத்துடன் அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் பங்களாதேஷ் A அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்சுக்காக 85 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை எடுத்தது.

சௌமிய சர்கார் 8 ஓட்டங்களையும், மெஹெடி ஹசன் 7 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடுகளத்தில் இருந்தனர்.  

இலங்கைகிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களையும், ஷான் பிரியன்ஜன், விஷ் பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Result

Match drawn

Bangladesh A
360/10 (120.1) & 1/0 (1)

Sri Lanka A Team
450/10 (121.1)

Batsmen R B 4s 6s SR
Jahurul Islam lbw b Vishwa Fernando 90 210 8 0 42.86
Shadman Islam st Manoj Sarathchandra b Ashan Priyanjan 53 112 8 0 47.32
Najmul Hossain b Ramesh Mendis 4 21 0 0 19.05
Mominul Haque c Malinda Pushpakumara b Ramesh Mendis 11 21 1 0 52.38
Mohammad Mithun run out (Ashen Bandara) 92 120 10 3 76.67
Soumya Sarkar c Kamindu Mendis b Asitha Fernando 24 38 3 0 63.16
Nurul Hasan c Ramesh Mendis b Asitha Fernando 1 4 0 0 25.00
Mehidy Hasan st Manoj Sarathchandra b Ramesh Mendis 57 114 7 0 50.00
Mehedi Hasan Rana c Kamindu Mendis b Malinda Pushpakumara 8 19 2 0 42.11
Abu Jayed not out 8 48 0 0 16.67
Ebadat Hossain b Asitha Fernando 7 14 0 1 50.00


Extras 5 (b 0 , lb 4 , nb 0, w 1, pen 0)
Total 360/10 (120.1 Overs, RR: 3)
Fall of Wickets 1-90 (32.6) Shadman Islam, 2-102 (38.2) Najmul Hossain, 3-116 (44.2) Mominul Haque, 4-253 (80.2) Mohammad Mithun, 5-257 (81.2) Jahurul Islam, 6-260 (82.6) Nurul Hasan, 7-309 (96.1) Soumya Sarkar, 8-318 (101.3) Mehedi Hasan Rana, 9-348 (112.6) Mehidy Hasan, 10-360 (120.1) Ebadat Hossain,

Bowling O M R W Econ
Vishwa Fernando 16 0 79 1 4.94
Asitha Fernando 23.1 3 59 3 2.55
Malinda Pushpakumara 35 5 94 1 2.69
Ramesh Mendis 23 6 57 3 2.48
Ashan Priyanjan 12 1 34 1 2.83
Kamindu Mendis 6 0 15 0 2.50
Ashen Bandara 5 0 18 0 3.60
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Ebadat Hossain 14 24 3 0 58.33
Sangeeth Cooray c Soumya Sarkar b Mehidy Hasan 104 151 15 0 68.87
Kamindu Mendis b Mohammad Mithun 169 282 9 0 59.93
Ashan Priyanjan lbw b Mehidy Hasan 37 56 6 0 66.07
Ashen Bandara run out (Mehidy Hasan) 2 12 0 0 16.67
Priyamal Perera c Mohammad Mithun b Mehidy Hasan 61 75 9 0 81.33
Ramesh Mendis lbw b Mehidy Hasan 21 32 3 1 65.62
Manoj Sarathchandra lbw b Mohammad Mithun 12 38 1 0 31.58
Malinda Pushpakumara st Nurul Hasan b Mehidy Hasan 15 36 2 0 41.67
Vishwa Fernando c Mohammad Mithun b Mehidy Hasan 4 15 1 0 26.67
Asitha Fernando not out 0 6 0 0 0.00


Extras 11 (b 0 , lb 8 , nb 0, w 3, pen 0)
Total 450/10 (121.1 Overs, RR: 3.71)
Fall of Wickets 1-17 (5.5) Pathum Nissanka, 2-182 (48.5) Sangeeth Cooray, 3-261 (67.5) Ashan Priyanjan, 4-269 (70.6) Ashen Bandara, 5-363 (92.2) Priyamal Perera, 6-416 (103.2) Ramesh Mendis, 7-422 (106.6) Kamindu Mendis, 8-433 (114.4) Manoj Sarathchandra, 9-450 (119.4) Vishwa Fernando, 10-450 (121.1) Malinda Pushpakumara,

Bowling O M R W Econ
Abu Jayed 12 0 48 0 4.00
Ebadat Hossain 20 1 82 1 4.10
Mehedi Hasan Rana 21 3 88 1 4.19
Mehidy Hasan 46.1 9 150 5 3.25
Mohammad Mithun 14 3 34 2 2.43
Soumya Sarkar 4 1 14 0 3.50
Mominul Haque 3 0 16 0 5.33
Najmul Hossain 1 0 10 0 10.00


Batsmen R B 4s 6s SR
Jahurul Islam not out 1 2 0 0 50.00
Shadman Islam not out 0 4 0 0 0.00


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 1/0 (1 Overs, RR: 1)
Bowling O M R W Econ
Vishwa Fernando 1 0 1 0 1.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<