ஐபிஎல் தொடரில் கடந்த 16 ஆண்டுகளாக றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரில் விளையாடி வந்த RCB அணி இந்த முறை ‘றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’ என அதனை மாற்றியுள்ளது.
அதேபோல, அந்த அணி நிர்வாகம் புதிய ஜெர்ஸியையும், புதிய இலச்சினையும் அறிமுகம் செய்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் 2 நாட்களில் ஆரம்பமாக உள்ளது. இதன் முதலாவது போட்டியில்ல் நடப்பு சாம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் – றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரின் பெயரானது பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது முதல் பெங்களூர் அணியின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.
பெயர் மாற்றம் செய்யாத நிலையில் தான் 16 சீசன்களாக RCB அணி ஐபிஎல் சம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை என்று கூறப்பட்டது. எனினும், அண்மையில் நிறைவடைந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் ஆர்சிபி மகளிர் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி சரித்திரம் படைத்தது.
இந்த நிலையில் தான் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்றிருந்த அணியின் பெயரானது தற்போது றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று (19) நடைபெற்ற RCB Unbox நிகழ்ச்சியில் மகளிர் பிரீமியர் லீக்கில் RCB அணியின் தலைவர் ஸ்மிருதி மந்தனா, RCB ஆண்கள் அணியின் தலைவர் பாப் டூ பிளெசிஸ், விராட் கோலி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது RCB அணியின் புதிய இலச்சினை மற்றும் புதிய ஜெர்ஸியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
- லுங்கி இங்கிடி விலகல்; அதிரடி வீரரை அறிவித்த டெல்லி
- ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பிரபல இங்கிலாந்து வீரர்
- ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஷெமார் ஜோசப்
வழக்கமான RCB அணியின் கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஜெர்ஸி இல்லாமல் இந்தாண்டு சிவப்புடன் நீலம் கலந்த புதிய ஜேர்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமின்றி, றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வழக்கமாக பெங்களூருவில் நடைபெறுகின்ற ஏதாவது ஒரு போட்டியில் சுற்றுசுழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பச்சை நிற ஜெர்ஸி அனிந்து விளையாடி வருகிறது. அந்தவகையில் அந்த அணியின் Co Green ஜெர்சியை அணித்தலைவர் பாப் டூ பிளெசிஸ், விராட் கோலி ஆகியோர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.
இறுதியாக RCB அணியின் இலச்சினையையும் மாற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோவை RCB நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
எனவே RCB அணியின் பெயர், ஜெர்ஸி மாற்றினாலாவது ஐபிஎல் பட்டத்தை அந்த அணி வெல்லுமா என RCB ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<