T20I தரவரிசையில் பாபர் அசாமுக்கு முதலிடம்; திசர முன்னேற்றம்

3274

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) நேற்று (29) வெளியிட்டுள்ள சர்வதேச T20 போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் நான்கு இடங்கள் முன்னேறி, மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இதேநேரம், இலங்கை அணியில் திசர பெரேரா மாத்திரம் முன்னேற்றம் கண்டுள்ளார்.

மாற்றங்கள் ஏதுமின்றி நியூசிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையில் நாளை (31) ஆரம்பமாகவுள்ள T20 …….

பாகிஸ்தான்அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20I தொடர் மற்றும் இலங்கைஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I  தொடர் என்பன நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஐசிசி புதிய T20I  தரவரிசையை அறிவித்துள்ளது.  

இதன்படி, தொடரின் ஆரம்பத்தில் முதலிடத்திலிருந்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச், மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்தல்கள் காரணமாக இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். தொடர் ஆரம்பிக்கும் போது ஆரோன் பின்ச் 126 புள்ளிகள் வித்தியாசத்தில் துடுப்பாட்ட வரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தார். எனினும் அவர் தொடர் முடிவில் 52 புள்ளிகளை இழக்க, பாபர் அசாம் 79 புள்ளிகளை அதிகம் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச T20 போட்டிகளை பொருத்தவரை நிலையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின் முடிவில் (3 போட்டிகள்) இரண்டு அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 163 ஓட்டங்களை குவித்திருந்தார். அத்துடன், T20I போட்டிகளில் அதிக ஓட்ட சராசரி (56.56) கொண்ட வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் கிளேன் மெக்ஸ்வேல் (7), டி ஆர்சி ஷோர்ட் (11) ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளதுடன், பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பக்ஹர் ஷமான் 3 இடங்கள் பின்னடைவை சந்தித்து 5வது இடத்தில் உள்ளார்.

அணித் தலைவர் திசர பெரேரா போராடியும் இலங்கைக்கு தோல்வி

இலங்கை அணிக்கு எதிராக ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற டி20 ……….

புதிய T20I துடுப்பாட்ட வரிசையில், இலங்கை அணியின் துடுப்பாட்ட முன்னேற்றங்களை பொருத்தவரையில் திசர பெரேரா மாத்திரம் 5 இடங்கள் முன்னேறி 39வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளை, T20I துடுப்பாட்ட வரிசையில் இலங்கை அணி சார்பில் அதிகூடிய நிலையை குசல் பெரேரா (24) பிடித்துள்ளதுடன், இவரைத் தவிற தினேஷ் சந்திமால் (78), அஞ்செலோ மெதிவ்ஸ் (81) நிரோஷன் டிக்வெல்ல (84), உபுல் தரங்க (86) மற்றும் தசுன் சானக (89) ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்களை பொருத்தவரை, ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் 793 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ஏனைய முன்னேற்றங்களை பொருத்தவரை, இலங்கை அணிக்கு எதிரான T20I போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷீட் 4 இடங்கள் முன்னேற்றத்துடன் 5வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளை, அவுஸ்திரேலிய அணியின் பில்லி ஸ்டேன்லேக் 9 இடங்கள் முன்னேறி, 9வது இடத்தையும், பாகிஸ்தானின் இமாட் வசீம் 14 இடங்கள் முன்னேறி 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் வரிசையில் இலங்கையின் அகில தனன்ஜய (29), திசர பெரேரா (64) ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளதுடன், லக்ஷான் சந்தகன் 18 இடங்கள் முன்னேறி 98வது இடத்தை பிடித்துள்ளார். சகலதுறை வீரர்கள் வரிசையில் பெரிதான மாற்றங்கள் எதுவும் இடம்பெறாத நிலையில், கிளேன் மெக்ஸ்வேல் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்தார்.

ஐசிசியின் புதிய தரவரிசைப் பட்டியலின் படி, பாகிஸ்தான் அணி 136 புள்ளிகளுடம் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், இந்திய அணி 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், அவுஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் இலங்கை அணி 87 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<