பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவராக பாபர் அஷாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாபர் அஷாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்துவகை போட்டிகளினதும் தலைவராக செயற்பட்டுவந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தின் பின்னர் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
>> 2ஆவது T20i போட்டியில் வென்றது இலங்கை மகளிர் அணி
T20 உலகக்கிண்ணத்தின் போது பாகிஸ்தான் அணி வெளிப்படுத்திய மோசமான பிரகாசிப்புகளின் காரணமாக தன்னுடைய பதவியிலிருந்து விலகியிருந்தார்.
பாபர் அஷாம் தலைவர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து T20I போட்டிகளுக்கான தலைவராக சஹீன் அப்ரிடி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக ஷான் மசூட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சஹீன் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் T20I தலைவராக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடியதுடன், குறித்த தொடரில் 4-1 என பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சுபர் லீக்கில் லாஹூர் கெலண்டர்ஸ் அணியின் தலைவராக இவர் செயற்பட்டதுடன், 10 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே இந்த அணி வெற்றிபெற்றது.
இதன்காரணமாக அணியின் தலைவர் பதவியிலிருந்து சஹீன் அப்ரிடி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பாபர் அஷாம் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<