பாகிஸ்தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் பாபர் அசாம்

Pakistan Cricket

1368

அனைத்துவகைப் போட்டிகளுக்குமான பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் குறிப்பிட்டுள்ளார். 

>> பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய மோர்கல்

X சமூக ஊடக வலைதளம் வாயிலாக தான் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதனை உறுதிப்படுத்தியிருக்கும் பாபர் அசாம், அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவது கடினமான முடிவு என்கிற போதிலும் இதுவே முடிவினை எடுக்க சரியான தருணம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேநேரம் அணித்தலைவராக இல்லாத போதிலும் பாகிஸ்தான் அணிக்காக தொடர்ந்து மூவகைப் போட்டிகளிலும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ள பாபர் அசாம், புதிய அணித்தலைவர் ஒருவருக்கு தன்னால் முடிந்த ஆதரவு அனைத்தினையும் வழங்க விருப்பம் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கின்றார் 

பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தி இருந்ததும் அவ்வணி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகாமல் வெளியேறியதும் பல விமர்சனங்கள் உருவாக காரணமாகியிருக்கின்றது. இவ்வாறாக விடயங்கள் இருக்கும் நிலையில் அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளரான மோர்னே மோர்கல் பதவி விலகியிருந்தார். இதனை அடுத்து பாபர் அசாமும் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வழிநடாத்த தொடங்கிய பாபர் அசாம் அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு அணியின் டெஸ்ட் தலைவராகவும் பொறுப்பேற்று, பாகிஸ்தானை மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் வழிநடாத்த தொடங்கியிருந்தார்

>> சம்பியன்ஷ் கிண்ண வாய்ப்பை இழந்தமை தொடர்பில் கூறும் மஹேல

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தரப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியதோடு, அதே ஆண்டில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பினையும் பெற்றிருந்தது. எனினும் குறிப்பிட்ட தொடர்களில் அவ்வணியினால் சம்பியன் பட்டம் வெல்வதற்கு முடியாமல் போயிருந்தது.

இதேநேரம் பாபர் அசாம் இல்லாத நிலையில் சஹீன் அப்ரிடி பாகிஸ்தான் அணியினை T20I போட்டிகளிலும், ஷான் மசூத் பாகிஸ்தானை டெஸ்ட் போட்டிகளிலும் வழிநடாத்துவார்கள் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<