Home Tamil ஹஸரங்கவின் சகலதுறை ஆட்டத்துடன் ஜப்னாவை வீழ்த்திய பி லவ் கண்டி

ஹஸரங்கவின் சகலதுறை ஆட்டத்துடன் ஜப்னாவை வீழ்த்திய பி லவ் கண்டி

389
LPL @ Kandy (5th Aug 2023)

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று சனிக்கிழமை (05) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நடப்பு சம்பியன்களான ஜப்னா கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பி லவ் கண்டி அணி வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பி லவ் கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

சந்திமால், முஜிப் அதிரடியில் பி-லவ் கண்டி அணிக்கு முதல் வெற்றி

அதன்படி களமிறங்கிய பி லவ் கண்டி அணிக்கு ஆரம்ப ஓவர்களை அஞ்செலோ மெதிவ்ஸ் வீசியிருந்தார். குறிப்பாக கடந்த காலங்களாக உபாதை காரணமாக ஓவர்களை வீசாமலிருந்த இவர் கடந்த இரண்டு போட்டிகளில் பந்துவீச்சை ஆரம்பித்திருந்தார்.

எனினும் இந்தப் போட்டியில் பந்துவீசி ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் சரித் அசலங்க ஆகியோரின் விக்கெட்டுகளையும் தன்னுடைய முதல் இரண்டு ஓவர்களில் வீழ்த்தி சிறந்த ஆரம்பத்தை கொடுத்தார்.

மெதிவ்ஸின் சிறந்த பந்துவீச்சு ஆரம்பத்தை பயன்படுத்திய பி லவ் கண்டி அணி தொடர்ச்சியாக ஜப்னா அணிக்கு ஓட்டங்களை குவிக்கவிடாமல் நெருக்கடியை கொடுத்தது. இதற்கிடையில் தடுமாற்றமான இன்னிங்ஸ்களுடன் தவ்ஹித் ஹிரிடோய் (22), டேவிட் மில்லர் (21) மற்றும் பிரியமல் பெரேரா (22) ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்று விக்கெட்டினை பறிகொடுத்தனர்.

ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிராக மத்திய ஓவர்களை வீசிய வனிந்து ஹஸரங்க மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் ஒரு பக்கம் விக்கெட்டுகளை சாய்க்க ஒரு கட்டத்தில் 86 ஓட்டங்களுக்கு ஜப்னா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை எட்டுவதற்கு போராடியது.

எனினும் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே இறுதிவரை களத்தில் நின்று 27 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் ஜப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. கண்டி அணி சார்பில் நுவான் பிரதீப் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பி லவ் கண்டி அணி ஆரம்பத்தில் தினேஷ் சந்திமால் மற்றும் பக்ஹர் ஷமானின் பொறுமையான துடுப்பாட்டங்களுடன் முன்னேறியது. இதில் சந்திமால் சந்திமால் 22 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து சந்திமாலின் இடத்தை நிரப்புவதற்காக அணித்தலைவர் வனிந்து ஹஸரங்க களமிறங்கினார். தன்னுடைய துடுப்பாட்ட இடத்தை முன்னேற்றிக்கொண்டு களமிறங்கிய இவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பக்ஹர் ஷமான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல உதவினார்.

எனினும் அற்புதமான இன்னிங்ஸை ஆடிய வனிந்து ஹஸரங்க வெறும் 22 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றார். எனவே வெறும் 13 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து பி லவ் கண்டி அணி வெற்றியை பதிவுசெய்தது.

கொழும்பில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்த பி லவ் கண்டி அணி, பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ஜப்னா கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

Result


B-Love Kandy
118/2 (13)

Jaffna Kings
117/9 (20)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Dushmantha Chameera b Angelo Mathews 0 5 0 0 0.00
Charith Asalanka c Dinesh Chandimal b Angelo Mathews 5 6 1 0 83.33
Towhid Hridoy c Dushmantha Chameera b Wanindu Hasaranga 19 22 3 0 86.36
David Miller c Sahan Arachchige b Isuru Udana 21 22 3 0 95.45
Priyamal Perera c Wanindu Hasaranga b Nuwan Pradeep  22 22 1 1 100.00
Thisara Perera c Wanindu Hasaranga b Nuwan Pradeep  2 3 0 0 66.67
Dunith Wellalage not out 38 27 6 1 140.74
Vijayakanth Viyaskanth lbw b Nuwan Pradeep  0 1 0 0 0.00
Maheesh Theekshana b Wanindu Hasaranga 0 4 0 0 0.00
Nuwan Thushara lbw b Wanindu Hasaranga 0 1 0 0 0.00
Nandre Burger not out 6 7 1 0 85.71


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 117/9 (20 Overs, RR: 5.85)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 8 2 4.00
Mujeeb ur Rahman 4 0 23 0 5.75
Dushmantha Chameera 4 0 23 0 5.75
Wanindu Hasaranga 4 0 9 3 2.25
Isuru Udana 2 0 17 1 8.50
Nuwan Pradeep  4 0 36 3 9.00


Batsmen R B 4s 6s SR
Fakhar Zaman c David Miller b Maheesh Theekshana 42 39 2 2 107.69
Dinesh Chandimal b Nandre Burger 22 16 3 0 137.50
Wanindu Hasaranga not out 52 22 5 3 236.36
Sahan Arachchige not out 1 1 0 0 100.00


Extras 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 118/2 (13 Overs, RR: 9.08)
Bowling O M R W Econ
Thisara Perera 3 0 23 0 7.67
Maheesh Theekshana 4 0 35 1 8.75
Nuwan Thushara 2 0 12 0 6.00
Nandre Burger 2 0 17 1 8.50
Vijayakanth Viyaskanth 1 0 13 0 13.00
Dunith Wellalage 1 0 17 0 17.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<