Home Tamil வனிந்துவின் அதிரடிப் பந்துவீச்சில் ஜப்னாவை வெளியேற்றிய கண்டி

வனிந்துவின் அதிரடிப் பந்துவீச்சில் ஜப்னாவை வெளியேற்றிய கண்டி

Lanka Premier League 2023

238

பி–லவ் கண்டி மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற LPL T20 தொடரின் எலிமினேட்டர் போட்டியில், பி-லவ் கண்டி அணியானது வனிந்து ஹஸரங்கவின் அதிரடிப்பந்துவீச்சோடு 61 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் பி-லவ் கண்டி அணி தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் கோல் டைடன்ஸ் அணியுடன் மோதும் வாய்ப்பினைப் பெற, மூன்று தடவைகள் LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ் அணி முதல் தடவையாக தொடரின் இறுதிப் போட்டி ஒன்றுக்கு  தெரிவாகாமல் தொடரில் இருந்து வெளியேறுகின்றது.

முதன்முறையாக LPL இறுதிப்போட்டியில் தம்புள்ள ஓரா!

ஜப்னா கிங்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகள் இடையிலான எலிமினேட்டர் போட்டி முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் முதலில் பி-லவ் கண்டி அணியினை துடுப்பாடப் பணித்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பி-லவ் கண்டி அணியானது மொஹமட் ஹரிஸ், தினேஷ் சந்திமால் ஆகியோரது சிறந்த துடுப்பாட்டங்களோடு 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்கள் எடுத்தது. கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மொஹமட் ஹரிஸ் 49 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் பெற்றார். தினேஷ் சந்திமால் 24 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் ஜப்னா கிங்ஸ் பந்துவீச்சில் நுவான் துஷார 4 விக்கெட்டுக்களையும், மகீஷ் தீக்ஷன மற்றும் அசேல குணரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 189 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணியானது ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. எனினும் அவ்வணிக்கு ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டத்தினை உருவாக்கிய சொஹைப் மலிக், டேவிட் மில்லர் ஜோடி நம்பிக்கை கொடுத்த போதும் வனிந்து ஹஸரங்கவின் அபார பந்துவீச்சினால் இந்த இணைப்பாட்டம் தகர்க்கப்பட்டு மீண்டும் ஜப்னா கிங்ஸ் தடுமாறத் தொடங்கியது. இறுதியில் 17.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த ஜப்னா கிங்ஸ் 127 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சொஹைப் மலிக் 23 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 31 ஓட்டங்கள் பெற்றதோடு, டேவிட் மில்லர் 26 ஓட்டங்களை எடுத்தார். இதேநேரம் இரு வீரர்களும் 52 ஓட்டங்களை ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தனர்.

பி-லவ் கண்டி அணியின் பந்துவீச்சில் அதன் தலைவர் வனிந்து ஹஸரங்க வெறும் 09 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பு வெற்றியை உறுதி செய்ததோடு, அது LPL போட்டிகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதி சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகவும் மாறியது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் வனிந்து ஹஸரங்க தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


B-Love Kandy
188/8 (20)

Jaffna Kings
127/10 (17.2)

Batsmen R B 4s 6s SR
Mohammad Haris st Rahmanullah Gurbaz b Maheesh Theekshana 79 7 8 4 999.99
Fakhar Zaman b Nuwan Thushara 0 2 0 0 0.00
Dinesh Chandimal lbw b Asela Gunaratne 41 24 6 1 170.83
Wanindu Hasaranga b Asela Gunaratne 19 11 0 2 172.73
Kamindu Mendis b Maheesh Theekshana 17 13 1 0 130.77
Asif Ali c David Miller b Nuwan Thushara 15 13 0 1 115.38
Angelo Mathews c Thisara Perera b Nuwan Thushara 7 5 1 0 140.00
Sahan Arachchige not out 1 1 0 0 100.00
Isuru Udana c Dunith Wellalage b Nuwan Thushara 2 2 0 0 100.00


Extras 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 188/8 (20 Overs, RR: 9.4)
Bowling O M R W Econ
Nuwan Thushara 4 0 40 4 10.00
Maheesh Theekshana 4 0 37 2 9.25
Dilshan Madushanka 4 0 43 0 10.75
Dunith Wellalage 4 0 25 0 6.25
Asela Gunaratne 4 0 41 2 10.25


Batsmen R B 4s 6s SR
Chris Lynn lbw b Wanindu Hasaranga 19 19 3 0 100.00
Charith Asalanka c Asif Ali b Mujeeb ur Rahman 1 6 0 0 16.67
Rahmanullah Gurbaz run out (Mohammad Haris) 19 10 1 2 190.00
Dunith Wellalage c Kamindu Mendis b Wanindu Hasaranga 3 5 0 0 60.00
Shoaib Malik c Angelo Mathews b Nuwan Pradeep  31 23 3 1 134.78
David Miller b Wanindu Hasaranga 26 20 0 2 130.00
Asela Gunaratne lbw b Wanindu Hasaranga 0 2 0 0 0.00
Thisara Perera b Sahan Arachchige 0 4 0 0 0.00
Maheesh Theekshana c Sahan Arachchige b Wanindu Hasaranga 15 14 3 0 107.14
Dilshan Madushanka not out 0 1 0 0 0.00
Nuwan Thushara c Lahiru Madushanka b Wanindu Hasaranga 0 1 0 0 0.00


Extras 13 (b 0 , lb 1 , nb 1, w 11, pen 0)
Total 127/10 (17.2 Overs, RR: 7.33)
Bowling O M R W Econ
Angelo Mathews 3 0 23 0 7.67
Mujeeb ur Rahman 4 0 45 1 11.25
Isuru Udana 1 0 2 0 2.00
Wanindu Hasaranga 3.2 0 9 6 2.81
Sahan Arachchige 3 0 23 1 7.67
Nuwan Pradeep  3 0 24 1 8.00