லங்கா பிரிமீயர் லீக் (LPL) 2023 தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் பி-லவ் கண்டி அணியானது கோல் டைடன்ஸ் அணியினை 34 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.
அத்துடன் இப்போட்டியில் வெற்றி பெற்ற பி–லவ் கண்டி அணி LPL தொடரின் இறுதிப் போட்டியில் தம்புள்ளை ஓரா அணியுடன் நாளை (19) மோதுகின்றது.
>> மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவது தொடர்பில் குசல் பெரேரா!
LPL தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இப்போட்டியில் ஆடும் வாய்ப்பினை முதல் குவாலிபையர் போட்டியில் தம்புள்ளை ஓராவிடம் தோல்வியடைந்த கோல் டைடன்ஸ் அணியும், எலிமினேட்டர் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்த்திய பி–லவ் கண்டி அணியும் பெற்றிருந்தன.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பி–லவ் கண்டி அணியானது முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது. இதன்படி முதலில் ஆடிய பி–லவ் கண்டி அணி லஹிரு குமார, கசுன் ராஜிதவின் வேகத்தில் தடுமாற்றம் ஒன்றை காண்பிக்க 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் இந்த தருணத்தில் அவ்வணிக்கு கை கொடுத்த தினேஷ் சந்திமால், வனிந்து ஹஸரங்க ஜோடி 72 ஓட்டங்களை நான்காம் விக்கெட்டுக்காக பகிர்ந்தனர்.
பி–லவ் கண்டி அணியின் நான்காம் விக்கெட்டாக ஆட்டமிழந்த அதன் தலைவர் வனிந்து ஹஸரங்க வெறும் 30 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் பெற்றார்.
பின்னர் தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரது துடுப்பாடிய உதவிகளோடு பி–லவ் கண்டி அணியானது 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்தது.
பி–லவ் கண்டி அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினேஷ் சந்திமால் 37 பந்துகளுக்கு 38 ஓட்டங்கள் எடுத்ததோடு, அஞ்செலோ மெதிவ்ஸ் 17 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்கள் எடுத்தார்.
கோல் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் சோனால் தினுஷ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 158 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கோல் டைடன்ஸ் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்ற போதிலும் தொடர்ச்சியாக பறிகொடுத்த விக்கெட்டுக்களினால் வெற்றி இலக்கை நெருங்க முடியாமல் போனதோடு 8 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
>> அவுஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறும் பிரபல வீரர்கள்
கோல் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சோனால் தினுஷ 28 ஓட்டங்களை எடுத்திருக்க, வனிந்து ஹஸரங்க, சதுரங்க டி சில்வா மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து பி–லவ் கண்டி அணியின் வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக பி–லவ் கண்டி அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்த வனிந்து ஹஸரங்க தெரிவாகினார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mohammad Haris | c Kasun Rajitha b Lahiru Kumara | 7 | 7 | 1 | 0 | 100.00 |
Thanuka Dabare | c Najibullah Zadran b Lahiru Kumara | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Dinesh Chandimal | c Lasith Croospulle b Sonal Dinusha | 38 | 37 | 3 | 1 | 102.70 |
Sahan Arachchige | st Sohan de Livera b Shakib Al Hasan | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Wanindu Hasaranga | c Kasun Rajitha b Sonal Dinusha | 48 | 30 | 3 | 4 | 160.00 |
Angelo Mathews | run out (Sohan de Livera) | 24 | 17 | 2 | 1 | 141.18 |
Asif Ali | c Dasun Shanaka b Kasun Rajitha | 10 | 11 | 0 | 1 | 90.91 |
Chaturanga de Silva | not out | 15 | 6 | 1 | 1 | 250.00 |
Lahiru Madushanka | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 9 (b 0 , lb 0 , nb 1, w 8, pen 0) |
Total | 157/7 (20 Overs, RR: 7.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
Lahiru Kumara | 4 | 0 | 21 | 2 | 5.25 | |
Shakib Al Hasan | 4 | 0 | 24 | 1 | 6.00 | |
Tabraiz Shamsi | 2 | 0 | 22 | 0 | 11.00 | |
Seekkuge Prasanna | 2 | 0 | 19 | 0 | 9.50 | |
Dasun Shanaka | 1 | 0 | 12 | 0 | 12.00 | |
Sonal Dinusha | 3 | 0 | 32 | 2 | 10.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Liton Das | b Chaturanga de Silva | 25 | 19 | 4 | 0 | 131.58 |
Lasith Croospulle | c Lahiru Madushanka b Chaturanga de Silva | 14 | 13 | 1 | 0 | 107.69 |
Sohan de Livera | c Mohammad Hasnain b Mujeeb ur Rahman | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Shakib Al Hasan | c Mohammad Haris b Sahan Arachchige | 17 | 15 | 2 | 0 | 113.33 |
Sonal Dinusha | c Dinesh Chandimal b Mohammad Hasnain | 28 | 32 | 0 | 1 | 87.50 |
Dasun Shanaka | c Dinesh Chandimal b Wanindu Hasaranga | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Najibullah Zadran | c Mujeeb ur Rahman b Mohammad Hasnain | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Seekkuge Prasanna | c Angelo Mathews b Wanindu Hasaranga | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Kasun Rajitha | not out | 10 | 14 | 1 | 0 | 71.43 |
Lahiru Kumara | not out | 10 | 8 | 0 | 1 | 125.00 |
Extras | 12 (b 0 , lb 3 , nb 0, w 9, pen 0) |
Total | 123/8 (20 Overs, RR: 6.15) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Angelo Mathews | 3 | 0 | 31 | 0 | 10.33 | |
Mujeeb ur Rahman | 3 | 0 | 29 | 1 | 9.67 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 21 | 2 | 5.25 | |
Chaturanga de Silva | 4 | 0 | 16 | 2 | 4.00 | |
Sahan Arachchige | 2 | 0 | 10 | 1 | 5.00 | |
Mohammad Hasnain | 3 | 0 | 8 | 2 | 2.67 | |
Lahiru Madushanka | 1 | 0 | 5 | 0 | 5.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<