நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஆடவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அஷார் மஹ்மூட் செயற்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாபிரிக்கா வேகப் புயல்
அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த T20I தொடரின் போட்டிகள் லாஹூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த T20I தொடரிலேயே முன்னாள் சகலதுறைவீரரான அஷார் மஹ்மூட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
அதேநேரம் குறிப்பிட்ட T20I தொடரில் அணியின் சிரேஷ்ட முகாமையாளராக வஹாப் ரியாஸ் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, மொஹமட் யூசுப் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், சயீட் அஜ்மல் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
அஷார் மஹ்மூட் கடந்த 2019ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினை கொண்டிருப்பதோடு, பாகிஸ்தான் சுபர் லீக் தொடரிலும் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<