இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இலங்கை ஏ அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான அவிஷ்க குணவர்தன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் தான் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
ஐசிசியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அவிஷ்க குணவர்தன
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) சார்பாக………
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சார்ஜாவில் நடைபெற்ற டி-10 கிரிக்கெட் லீக் போட்டியினை காரணம் காட்டி சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் சபைக்கு அதிகாரம் கோர முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் வேறு நோக்கங்களுக்காகவும், நேர்மையற்ற எண்ணங்களாலும் தூண்டப்பட்டமை எனவும் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐ.சிசியினால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தனிப்பட்ட வீரர் ஒருவர் மூலமாக ஐ.சி.சியிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகும் எனவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T10 தொடரின் போது ஆட்டநிர்ணயம் செய்வது தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் நுவான் சொய்ஸா மற்றும் ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன ஆகியோர் மீது ஐசிசி கடந்த மே மாதம் குற்றம் சுமத்தியிருந்தது.
அவிஷ்க குணவர்தன, சொய்ஸா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) சார்பாக……..
இந்த நிலையில், ஐ.சி.சியினால் முன்வைக்கப்பட்ட குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை, அவரை இலங்கை ஏ அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன் பின்னணியில் தான் தன்னிடம் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில், அவிஷ்க குணவர்தன மேன்முறையீடு செய்ய நடடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<