இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறும் அவிஷ்க பெர்னாண்டோ

Sri Lanka tour of England 2021

325

இங்கிலாந்து அணிக்கு எதிரான முழுமையான தொடரையும் உபாதை காரணமாக, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ தவறவிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடி வருகின்றது. இதில், இரண்டு T20I போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், தொடரை 2-0 என இலங்கை அணி இழந்துள்ளது.

இலங்கை அணிக்கெதிரான தொடரை தவறவிடும் ஜோஸ் பட்லர்

குறித்த இந்த தொடரின் மூன்றாவது T20I போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில், அவிஷ்க பெர்னாண்டோ உபாதைக்குள்ளாகியுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், அவிஷ்க பெர்னாண்டோவுக்கு ஏற்பட்டுள்ள உபாதை தொடர்பிலான முழுமையான தகவலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிடவில்லை. எனினும், குறித்த உபாதை காரணமாக ஐசிசி சுப்பர் லீக் தொடருக்கான மூன்று ஒருநாள் போட்டிகளையும் அவிஷ்க பெர்னாண்டோ தவறவிடவுள்ளார்.

அதேநேரம், அவிஷ்க பெர்னாண்டோவின் வெளியேற்றம் காரணமாக இன்று நடைபெறவுள்ள இறுதி T20I போட்டியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களி மாற்றம் ஏற்படவுள்ளது.

அவிஷ்க பெர்னாண்டோ உபாதை காரணமாக தொடரை தவறவிடவுள்ளதுடன், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் உபாதை காரணமாக T20I மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<