பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷ் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவுசெய்துள்ள 18 பேர் கொண்ட வீரர்கள் பட்டியிலில் அவிஷ்க பெர்னாண்டோ இடம்பெற்றிருந்தார்.
IPL ஐ நடத்த இங்கிலாந்து கவுண்டி அணிகள் ஆர்வம்
குழாத்தில் இடம்பெற்றிருந்த போதும், உபாதையிலிருந்து அவிஷ்க பெர்னாண்டோ முழுமையாக குணமடையாத நிலையில், அவரால் இலங்கை கிரிக்கெட் சபையின் உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவிஷ்க பெர்னாண்டோ, இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தார். எனினும், உபாதை காரணமாக, இந்த தொடருக்கான 2 கிலோ மீற்றர் உடற்தகுதி பரிசோதனையில், பங்கேற்றிருக்கவில்லை. இந்தநிலையில், உடற்தகுதி காரணமாக, பங்களாதேஷ் தொடரையும் இவர் தவறவிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்க, 8 நிமிடங்கள் மற்றும் 35 செக்கன்களில் 2 கிலோமீற்றர் தூரத்தை நிறைவுசெய்ய வேண்டும். இவ்வாறு உடற்தகுதியை நிரூபிக்க தவறும் பட்சத்தில் வீரர்கள் அணியில் இணைக்கப்படமாட்டர்.
இலங்கை கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…