தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் இணைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையில் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.
>> இங்கிலாந்து19 வயதின் கீழ் மகளிர் அணியில் யாழ். வீராங்கனை
ஆரம்பத்தில் இந்திய அணியில் மொஹமட் சமி இணைக்கப்பட்டிருந்த போதும், அவருடைய உடற்தகுதியை கருத்திற்கொண்டு தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியிருந்த ஆவேஷ் கான் 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் அறிமுகமாகியிருந்த ஆவேஷ் கான் முதன்முறையாக டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். ஆவேஷ் கான் உள்ளூரில் நடைபெற்ற 38 முதற்தர போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை குவித்துள்ளார்.
சுற்றுலா இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய குழாம்
ரோஹித் சர்மா (தலைவர்), யசஷ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோஹ்லி, கே.எல்.ராஹுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், சர்துல் தாகூர், மொஹமட் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கே.எஸ். பாரத், அபிமன்யு ஈஸ்வரன், ஆவேஷ் கான்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<