கால்பந்தாட்ட உலகில் இன்னுமொரு வீரர் ஓய்வு

364
Austria captain Fuchs retires from international football

15ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் குழு “எப்” பிரிவில், ஆஸ்திரியா அணி விளையாடியது. லீக் சுற்றில் ஹங்கேரி மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோல்வி அடைந்தது. போர்த்துக்கலுக்கு எதிரான போட்டியை சமனிலை செய்தது. இதனால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், 30 வயதான ஆஸ்திரியா அணியின் கேப்டனும், லீசெஸ்டர் நகர தடுப்பாட்டக்காரருமான பியுச் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு தொடர்பாக அவர் தனது முகநூலில் (facebook) கூறியுள்ளதாவது :-

ஐஸ்லாந்து அணிக்கு எதிரான போட்டி தான் என்னுடைய கடைசிப் போட்டியாகும். தேசிய அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடியது பெருமையாக உள்ளது. எல்லாவற்றையும் நாட்டுப் பற்றுடன் செய்தேன்.

ஆஸ்திரியா அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற கோபா கால்பந்து இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்