அவுஸ்திரேலியாவின் புதிய ஒருநாள், T20I குழாம்கள் அறிவிப்பு

13
Australian squads announced for England ODI and Scotland T20I series

அவுஸ்திரேலியாவின் புதிய ஒருநாள் மற்றும் T20I குழாம்கள் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து தொடர்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.  

ஐக்கிய இராச்சியத்திற்கு செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியானது அங்கே ஓருநாள் மற்றும் T20I தொடர்களில் ஆடவிருக்கின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ஸ்கொட்லாந்து அணியுடன் செப்டம்பர் 4 தொடக்கம் 7 வரையில் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் இடம்பெறுகின்றது 

>>இலகு வெற்றியுடன் பிளே ஒப் சுற்றில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி<<

குறிப்பிட்ட தொடரின் இங்கிலாந்து அணியுடன் அவுஸ்திரேலிய அணியானது மூன்று போட்டிகள் T20I தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆடவிருக்கின்றது. குறிப்பிட்ட தொடர்களில் செப்டம்பர் 11 தொடக்கம் 15 வரை T20I தொடரும், அதன் பின்னர் செப்டம்பர் 19 தொடக்கம் 29 வரை ஒருநாள் தொடரும் நடைபெறுகின்றது 

அதன்படி இந்த சுற்றுப்பயணங்களில் நடைபெறும் T20I மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான அவுஸ்திரேலிய அணியின் குழாம்களே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் T20I உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து, T20I போட்டிகளில் ஓய்வினை அறிவித்த டேவிட் வோர்னரின் இடத்தினை ஜேக் பிரஸர்மெக்கேர்க் நிரப்பியிருக்கின்றார் 

அத்துடன் 20 வயது நிரம்பிய சகலதுறைவீரரான கூப்பர் கோன்னோலிக்கும் அவுஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. கூப்பர் இறுதியாக நடைபெற்ற பிக் பேஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கோச்சர்ஸ் அணி சம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற வீரர்களான அஷ்டன் ஏகார் மற்றும் மெதிவ் வேட் ஆகியோருக்கு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து தொடர்களில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ஜோஸ் இங்கிலீஷ் அணியின் விக்கெட்காப்பாளராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது 

மறுமுனையில் தனது குழந்தையின் பிறப்புக் கருதி அவுஸ்திரேலிய T20I அணியில் இணைக்கப்படாத மெதிவ் சோர்ட் இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டிகளில் ஆஸி. அணியில் இணைய எதிர்பார்க்கப்படுகின்றது 

அவுஸ்திரேலிய T20I குழாம்

மிச்சல் மார்ஷ் (தலைவர்), ஷேவியர் பார்ட்லெட், கூப்பர் கொன்னோலி, டிம் டேவிட், நதன் எல்லிஸ், ஜேக் பிரஸர்மெக்கேர்க், கெமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்பென்சர் ஜோன்சன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அடம் ஷம்பா 

இங்கிலாந்து ஒருநாள் குழாம்

மிச்சல் மார்ஷ் (தலைவர்), சீன் அப்போட், அலெக்ஸ் கெரி, கெமரூன் கீரின், நதன் எல்லிஸ், ஜேக் பிரஸர்மெக்கேர்க், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹேசல்வூட், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், மார்னஸ் லபச்சேனே, கிளன் மெக்ஸ்வேல், மெதிவ் ஷோர்ட், ஸ்டீவன் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், அடம் ஷம்பா 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<