இலங்கை முன்னாள் வீரரான அசங்க குருசிங்க, அவுஸ்திரேலியாவின் கிங்ஸ்டன் ஹோதோர்ன் கழகத்தின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முக்கிய வீரராக செயற்பட்ட 53 வயதான அசங்க குருசிங்க, தரம் 3 பயிற்றுநர் சான்றிதழைக் கொண்டுள்ளதுடன், இதற்கு முன் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஆலோசக பிராந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் சாத்தியமில்லை
அதேநேரம், 1996 உலகக் கிண்ணத்தை வென்ற சில மாதங்களில் இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் அவுஸ்திரேலியாவின் நோர்த் மெல்பேர்ன் அணிக்காக விளையாடியிருந்தார்.
இதுஇவ்வாறிருக்க, சுமார் 20 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த அசங்க குருசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார்.
இதனையடுத்து, 2017 முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட அவர், அப்பதவியை இராஜினாமா செய்ததன் பிறகு தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும், ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உயர் செயற்றிறன் மத்திய நிலையத்தின் முகாமையாளராகவும் பணியாற்றியிருந்தார்.
இந்த நிலையில், அவருடைய பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும் அதை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நீட்டிக்கவில்லை. இதன்காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே, அவுஸ்திரேலியாவின் கிங்ஸ்டன் ஹோதோர்ன் கழகத்தின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பில் கிங்ஸ்டன் ஹோதோர்ன் கிரிக்கெட் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எமது அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரரான அசங்க குருசிங்க பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்பதை அறிவிப்பதில் எமது கழகம் மகிழ்ச்சிய அடைகிறது.
எமது வீரர்களுக்கு அவரிடம் இருந்து சிறந்த கற்கை அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்
இலங்கை அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதங்கள், 8 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 2452 ஓட்டங்களையும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 22 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 3902 ஓட்டங்களையும் அவர் குவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அணியின் பகுதிநேர பந்துவீச்சாளராக செயற்பட்ட அவர், டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுக்களையும், ஒருநாள் போட்டிகளில் 26 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…