ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் சம்பியனாக காணப்படும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தினைப் பெற்றிருக்கின்றது.
>>தேசிய சுபர் லீக்கின் சம்பியனாக மகுடம் சூடிய காலி அணி<<
கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் தடவையாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றிருந்த பேட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 124 புள்ளிகளுடன் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றிருக்கின்றது.
இதேவேளை ஏற்கனவே டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலாம் இடத்தில் காணப்பட்ட இந்திய அணியானது தற்போது 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்குச் சென்றிருப்பதோடு, இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றது.
அதேநேரம் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் தென்னாபிரிக்கா (103), நியூசிலாந்து (96), பாகிஸ்தான் (89), இலங்கை (83), மேற்கிந்திய தீவுகள் (82) மற்றும் பங்களாதேஷ் (53) ஆகிய அணிகள் நான்காவது இடத்தில் இருந்து ஒன்பதாவது வரையிலான இடங்களை முறையே தக்க வைத்திருக்கின்றன.
ஒருநாள் அணிகளின் தரவரிசையினை நோக்கும் போது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இங்கிலாந்து (95) மற்றும் மற்றும் (93) இலங்கை ஆகிய அணிகள் முறையே ஆறாம், ஏழாம் இடங்களில் இரண்டு தரநிலைப் புள்ளிகள் வித்தியாசத்தில் காணப்படுகின்றன.
டெஸ்டில் தமது முதல் இடத்தினைப் பறிகொடுத்த போதிலும் ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
டெஸ்ட் அணிகளின் தரவரிசை
ஒருநாள் அணிகளின் தரவரிசை
T20I அணிகளின் தரவரிசை
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<