அரையிறுதிக்கு சென்ற போதிலும் கவனமாக இருப்போம்: ஸ்டார்க்

253
© Getty Images

இங்கிலாந்து அணியினை நேற்று (26) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் தோற்கடித்துள்ள அவுஸ்திரேலியா, இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகிய முதல் அணியாக மாறியிருக்கின்றது. 

உலகக் கிண்ண அரையிறுதிக்கு முதல் அணியாக தடம்பதித்த அவுஸ்திரேலியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 32 ஆவது லீக் போட்டியில் அவுஸ்திரேலிய ……….

அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது தொடர்பில் மிகவும் எதிர்பார்ப்புக்களோடு இருப்பதாக வேகப் பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் தெரிவித்திருக்கின்றார்.  

மிச்செல் ஸ்டார்க், இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்ததோடு, இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுகளை (19) கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகிய போதிலும், எஞ்சியுள்ள நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி சிறந்த முடிவுகளை பெற முயற்சி செய்யும் என இங்கிலாந்துஅவுஸ்திரேலிய அணிகள் இடையிலான போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மிச்செல் ஸ்டார்க் குறிப்பிட்டிருந்தார்

சனத்தின் சாதனையை சமப்படுத்திய சகிப் அல் ஹசன்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ….

இதில் மிச்செல் ஸ்டார்க், நியூசிலாந்துக்கு எதிரான தமது அடுத்த உலகக் கிண்ண பற்றி கருத்துக்களை வெளியிட்ட போது, அரையிறுதி சுற்றுக்கு முன்னர் மிகவும் அதிகமான கிரிக்கெட் விளையாட்டு ஆடப்பட வேண்டி உள்ளது. இதேநேரம், எங்களுக்கு இன்னும் இரண்டு முக்கியமான போட்டிகள் இருக்கின்றன. ஆனால், உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி விளையாடப்படவுள்ள இந்த லோர்ட்ஸ் மைதானத்தில் ஆடுவது அதிக நம்பிக்கையினை தருகின்றது.” என்றார்

எங்களுக்கு அடுத்த போட்டி நியூசிலாந்து அணியுடன் இருக்கின்றது. இப்போட்டி மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் (நியூசிலாந்து அணியினர்) மிக அற்புதமான கிரிக்கெட் விளையாட்டினை விளையாடி வருகின்றனர். உண்மையை சொல்லப் போனால் அவர்கள் வேறு விதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களை பற்றி யாரும் அதிகம் பேசாது போனாலும், அவர்கள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுகின்றனர்.”

ஆக, அவர்கள் மிகவும் வலிமையான ஒரு தரப்பினை கொண்டிருக்கின்றனர், கேன் வில்லியம்சன் அவர்களின் துருப்புச் சீட்டு வீரராக காணப்படுகின்றார். அவர்களிடம் ஸ்விங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்களும் காணப்படுகின்றனர். எனவே, இது அடுத்த பெரிய மோதலாக  இருக்க போகின்றது. நாம் அரையிறுதி சுற்றுக்கான எமது வாய்ப்பினை உறுதி செய்த போதிலும், தொடரின் இறுதிப் போட்டிகளை நெருங்குவதால் சிறந்த முடிவுகளுடனேயே (புள்ளி அட்டவணையில்) ஒரு உயர் இடத்தினை பெற விரும்புகின்றோம்.”

ஆப்கானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ள பங்களாதேஷ்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 31…..

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணியுடன் மோதும் உலகக் கிண்ண லீக் போட்டி, அவுஸ்திரேலியாஇங்கிலாந்து அணிகள் விளையாடிய இதே லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (29) இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை பெறவும், இங்கிலாந்து அணியினை வீழ்த்த மற்றுமொரு காரணமாகவும் இருந்த ஜேசன் பெஹ்ரென்டோர்ப்பின் பந்துவீச்சு குறித்தும் மிச்செல் ஸ்டார்க் குறிப்பிட்டார்

 டோர்ப் மிகச் சிறந்த முறையிலும் அழகான முறையிலும் பந்துவீசியிருந்தார். இதனால், அவர் பெற்ற ஐந்து விக்கெட்டுகளுக்கு அவர் தகுதியானவர் தான்அதோடு, இவர் குறித்த விக்கெட்டுகளை இங்கிலாந்து அணிக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் பெற்றது பெரிய விடயமாக உள்ளது. நான் மிச்செல் ஜோன்சனுடன் இணைந்து கடந்த காலங்களில் பந்துவீசியது போன்ற அனுபவம் (பெஹ்ரேன்டோர்ப் மூலம்) இப்போட்டியிலும் கிடைத்தது. இப்போட்டி உங்களுக்கு இரண்டு இடதுகை (வேகப்)பந்துவீச்சாளர்களுடன் விளையாட முடியும் என்பதை கேள்வி ஒன்றுடன் உணர்த்தியுள்ளது.”  

ஜேசன் பெஹ்ரென்ட்ரோப் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்து ஒருநாள் போட்டிகளில் தனது மிகச் சிறந்த பந்துவீச்சு பெறுதியினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்திலிருந்து முழுமையாக வெளியேறும் அதிரடி வீரர் அன்ரூ ரசல்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ………

அதோடு மிச்செல் ஸ்டார்க், இங்கிலாந்து அணிக்காக துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட பென் ஸ்டோக்ஸினை யோக்கர் பந்து ஒன்றின் மூலம் ஆட்டமிழக்கச் செய்தது தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கையாக இருந்த ஸ்டோக்ஸ் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 89 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 அவர் (ஸ்டோக்ஸ்) சிறந்த வீரர், அதோடு அவர்களின் (இங்கிலாந்து அணியின்) சிறந்த துடுப்பாட்ட வீரரும் கூட. அவர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தை வெற்றிக்கு கிட்டவாக அழைத்து வந்திருந்தார். எனவே, அவர் துடுப்பாடும் போது எங்களுக்கு ஓய்வு இருக்காது என்பது தெரியும். இந்நிலையில் அதிஷ்டவசமாக நானே அவரின் விக்கெட்டினை கைப்பற்றினேன்.” என்றார்

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<