கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 15 ஓட்டங்களால், மேற்கிந்திய தீவுகள் அணியினை தோற்கடித்துள்ளது.
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் லீக் மோதல்களில் ஒன்றாக அமைந்த இந்த ஆட்டம் நொட்டிங்கம் நகரில் வியாழக்கிழமை (6) ஆரம்பமானது.
டி வில்லியர்ஸின் மீள்வருகையை மறுத்த தென்னாபிரிக்கா?
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற….
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹொல்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய அணிக்காக வழங்கினார்.
உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியினை பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இப்போட்டியில் ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது. அந்தவகையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடிய துடுப்பாட்ட வீரரான டர்ரன் பிராவோவிற்கு பதிலாக ஈவின் லூயிஸ் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி – கிறிஸ் கெயில், சாய் ஹோப், ஈவின் லூயிஸ், சிம்ரோன் ஹெட்மேயர், நிகோலஸ் பூரான், அன்ரூ ரஸல், ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), கார்லோஸ் ப்ராத்வைட், ஏஷ்லி நேர்ஸ், செல்டோன் கொல்ட்ரல், ஒசானே தோமஸ்
முஸ்பிகுர் ரஹீமில் குற்றம் பிடிக்கும் நோக்குடன் இல்லை: மொர்தஸா
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எட்டாவது மோதலாக…
இதேநேரம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலகு வெற்றியுடன் உலகக் கிண்ண பயணத்தினை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, எந்தவித மாற்றங்களுமின்றி களமிறங்கியது.
அவுஸ்திரேலிய அணி – ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கோல்டர்–நைல், பேட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் ஷம்பா
இதனை அடுத்து போட்டியின் துடுப்பாட்டத்தை நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக அவுஸ்திரேலிய அணி ஆரம்பித்தது. அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த அதன் தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தினை வழங்க தவறியிருந்தனர். இவர்களில் பின்ச் 6 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டமிழக்க, வோர்னர் 3 ஓட்டங்களை மட்டும் பெற்று வெளியேறியிருந்தார்.
இதன் பின்னர் புதிய துடுப்பாட்ட வீரர்களாக வந்த உஸ்மான் கவாஜா, கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரும் சிறப்பாக செயற்பட தவறினர். இதில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 13 ஓட்டங்களையும் பெற கிளேன் மெக்ஸ்வெல் ஓட்டமேதுமின்றி ஓய்வறை நடந்திருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது வெற்றி
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் எட்டாவது மோதலாக……
இப்படியாக அவுஸ்திரேலிய அணி தமது முக்கிய துடுப்பாட்ட வீரர்களை இழந்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் 79 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்காக ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் தமது இணைப்பாட்டம் மூலம் கைகொடுத்தனர்.
இவர்கள் இருவரும் அவுஸ்திரேலிய அணியின் 6ஆம் விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு, அவுஸ்திரேலிய அணியின் 6ஆம் விக்கெட்டாக அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களுடன் தனது தரப்பிற்கு பெறுமதி சேர்த்த வண்ணம் ஆட்டமிழந்தார்.
கேரியின் விக்கெட்டினை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் புதிய துடுப்பாட்ட வீரராக வந்த கோல்டர்–நைல் உடன் சேர்ந்து தனது தரப்பினை பலப்படுத்தினார். தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித், கோல்டர்–நைல் உடன் இணைந்து 102 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவின் 7ஆம் விக்கெட்டுக்காக பகிர்ந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்கும் போது ஒருநாள் போட்டிகளில் பெற்ற 19ஆவது அரைச்சதத்தோடு 7 பெளண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்மித்தின் விக்கெட்டின் பின்னர் கோல்டர்–நைல் அதிரடியான துடுப்பாட்டம் மூலம் அவுஸ்திரேலிய அணியின் ஓட்டங்களை அதிகரித்தார். கோல்டர்-நைலின் அதிரடியோடு அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 288 ஓட்டங்களை குவித்து கொண்டது.
ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி
உலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய…..
இப்போட்டியின் மூலம் தனது கன்னி ஒருநாள் அரைச்சதத்தினை பெற்ற கோல்டர்-நைல் வெறும் 60 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 92 ஓட்டங்கள் குவித்து தனது சிறந்த ஒருநாள் இன்னிங்ஸை பதிவு செய்திருந்தார்.
இதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பாக கார்லோஸ் ப்ராத்வைட் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்க்க, அன்ட்ரூ ரசல், செல்டோன் கொல்ட்ரல் மற்றும் ஒசானே தோமஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 289 ஓட்டங்களை அடைய மேற்கிந்திய தீவுகள் அணி, தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.
அவுஸ்திரேலிய அணி போல் மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஈவின் லூயிஸ் ஆகியோரும் ஏமாற்றம் தந்தனர். ஈவின் லூயிஸ் ஒரு ஓட்டத்தினை மட்டும் பெற்று ஆட்டமிழக்க, கிறிஸ் கெயில் 21 ஓட்டங்களுடன் பிரகாசிக்க தவறினார்.
மனதை தயார் நிலைப்படுத்தி பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயார் – குசல் பெரேரா
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மனதை தயார்படுத்திக்…….
பின்னர் சாய் ஹோப், நிகோலஸ் பூரான் ஜோடி மேற்கிந்திய தீவுகளின் வெற்றி இலக்கு எட்டும் பயணத்தினை தொடர்ந்தது. இந்த ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் (68) ஒன்றை பகிர்ந்தது. தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்திற்கு பங்களிப்புச் செய்த நிகோலஸ் பூரான் 36 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களை பெற்ற வண்ணம் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சாய் ஹோப் மற்றும் அணித்தலைவர் ஜேசன் ஹொல்டர் ஆகியோர் அரைச்சதங்கள் பூர்த்தி செய்து மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியின் வெற்றி இலக்கினை நெருங்க உதவி செய்திருந்தனர்.
எனினும், மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்த காரணத்தினால் சாய் ஹோப், ஜேசன் ஹொல்டர் ஆகியோரின் அரைச்சதங்களுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை.
பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?
நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11வது லீக்………..
முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று, போட்டியில் தோல்வியினை தழுவியது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் சாய் ஹோப், தனது 11ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 7 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை குவித்திருக்க, ஜேசன் ஹொல்டர் அவரின் 9ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 57 பந்துகளில் 7 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக மிச்செல் ஸ்டார்க் 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்து, 5ஆவது தடவையாக ஐந்து விக்கெட்டுக்களை ஒருநாள் போட்டி ஒன்றில் கைப்பற்றியிருந்தார். இதேநேரம், பேட் கம்மின்ஸூம் 2 விக்கெட்டுக்களுடன் அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் வெற்றியினை பாராட்டும் கிரிக்கெட் பிரபலங்கள்
போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் கோல்டர்–நைல் தெரிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் மூலம் இரண்டு வெற்றிகளுடன் உலகக் கிண்ணத் தொடரில் முன்னேறும் அவுஸ்திரேலிய அணி தமது அடுத்த மோதலில், இந்திய அணியினை ஓவல் மைதானத்தில் வைத்து வரும் ஞாயிற்றுக்கிழமை (9) சந்திக்கின்றது.
மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் அணி, தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் எதிர்வரும் திங்கட்கிழமை (10) தென்னாபிரிக்க அணியினை செளத்எம்ப்டன் நகரில் வைத்து சந்திக்கின்றது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
David Warner | c Shimron Hetmyer b Sheldon Cottrell, | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Aaron Finch | c Shai Hope b Oshane Thomas | 6 | 10 | 0 | 0 | 60.00 |
Usman Khawaja | c Shai Hope b Andre Russell | 13 | 16 | 2 | 0 | 81.25 |
Steve Smith | c Sheldon Cottrell, b Oshane Thomas | 73 | 103 | 7 | 0 | 70.87 |
Glenn Maxwell | c Shai Hope b Sheldon Cottrell, | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Marcus Stoinis | c Nicholas Pooran b Jason Holder | 19 | 23 | 4 | 0 | 82.61 |
Alex Carey | c Shai Hope b Andre Russell | 45 | 55 | 7 | 0 | 81.82 |
Nathan Coulter-Nile | c Jason Holder b Carlos Brathwaite | 92 | 60 | 8 | 4 | 153.33 |
Pat Cummins | c Sheldon Cottrell, b Carlos Brathwaite | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Mitchell Starc | c Jason Holder b Carlos Brathwaite | 8 | 9 | 1 | 0 | 88.89 |
Adam Zampa | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 27 (b 1 , lb 1 , nb 1, w 24, pen 0) |
Total | 288/10 (49 Overs, RR: 5.88) |
Fall of Wickets | 1-15 (2.2) Aaron Finch, 2-26 (3.6) David Warner, 3-36 (6.6) Usman Khawaja, 4-79 (16.1) Marcus Stoinis, 5-147 (30.5) Alex Carey, 6-249 (44.2) Steve Smith, 7-268 (46.1) Pat Cummins, 8-284 (48.2) Nathan Coulter-Nile, 9-288 (48.6) Mitchell Starc, 10-39 (704) Glenn Maxwell, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Oshane Thomas | 10 | 0 | 63 | 2 | 6.30 | |
Sheldon Cottrell, | 9 | 0 | 56 | 2 | 6.22 | |
Andre Russell | 8 | 0 | 41 | 2 | 5.12 | |
Carlos Brathwaite | 10 | 0 | 67 | 3 | 6.70 | |
Jason Holder | 7 | 2 | 28 | 1 | 4.00 | |
Ashley Nurse | 5 | 0 | 31 | 0 | 6.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chris Gayle | lbw b Mitchell Starc | 21 | 17 | 4 | 0 | 123.53 |
Evin Lewis | c Steve Smith b Pat Cummins | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Shai Hope | c Usman Khawaja b Pat Cummins | 68 | 105 | 7 | 0 | 64.76 |
Nicholas Pooran | c Aaron Finch b Adam Zampa | 40 | 36 | 5 | 1 | 111.11 |
Shimron Hetmyer | run out () | 21 | 28 | 3 | 0 | 75.00 |
Jason Holder | c Adam Zampa b Mitchell Starc | 51 | 57 | 7 | 1 | 89.47 |
Andre Russell | c Glenn Maxwell b Mitchell Starc | 15 | 11 | 2 | 1 | 136.36 |
Carlos Brathwaite | c Aaron Finch b Mitchell Starc | 16 | 17 | 1 | 1 | 94.12 |
Ashley Nurse | not out | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Sheldon Cottrell, | b Mitchell Starc | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Oshane Thomas | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 20 (b 0 , lb 9 , nb 0, w 11, pen 0) |
Total | 257/9 (49 Overs, RR: 5.24) |
Fall of Wickets | 1-7 (1.4) Evin Lewis, 2-31 (4.5) Chris Gayle, 3-99 (19.1) Nicholas Pooran, 4-149 (27.2) Shimron Hetmyer, 5-190 (34.6) Shai Hope, 6-216 (38.5) Andre Russell, 7-252 (45.3) Carlos Brathwaite, 8-252 (45.6) Ashley Nurse, 9-256 (47.3) Sheldon Cottrell,, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Starc | 10 | 0 | 46 | 5 | 4.60 | |
Pat Cummins | 10 | 3 | 41 | 2 | 4.10 | |
Nathan Coulter-Nile | 9.1 | 0 | 54 | 0 | 5.93 | |
Glenn Maxwell | 6 | 1 | 31 | 0 | 5.17 | |
Adam Zampa | 10 | 0 | 58 | 1 | 5.80 | |
Marcus Stoinis | 4 | 0 | 18 | 0 | 4.50 |
முடிவு – அவுஸ்திரேலிய அணி 15 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<