நொட்டிங்கம் நகரில் நேற்று (6) இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினை அவுஸ்திரேலியா 15 ஓட்டங்களால் தோற்கடித்திருந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இப்போட்டி மூலம் அவுஸ்திரேலியா இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது வெற்றியினை பதிவு செய்ததோடு, சில சிறப்பு அடைவு மட்டங்களையும் பெற்றது.
ஸ்மித், கோல்டர்-நைல் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு அவுஸ்திரேலிய அணி வெற்றி
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய ……..
ஸ்டார்க்கின் உலக சாதனை
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இப்போட்டியில் அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த பந்துவீச்சு பிரதியினை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தான் கைப்பற்றிய 150ஆவது விக்கெட்டினை பதிவு செய்த ஸ்டார்க், மிகவும் குறைவான ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்கிற உலக சாதனையினையும் பதிவு செய்திருந்தார்.
மிச்செல் ஸ்டார்க் இந்த சாதனையினை பதிவு செய்ய மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியுடன் சேர்த்து 77 ஒருநாள் போட்டிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், ஸ்டார்க்கிற்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் குறைவான போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளரான சக்லைன் முஸ்தாக் காணப்பட்டிருந்தார். முஸ்தாக், 150 விக்கெட்டுகளை கைப்பற்ற 78 போட்டிகளை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டி வில்லியர்ஸின் மீள்வருகையை மறுத்த தென்னாபிரிக்கா?
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து………
4 விக்கெட்டுகள் பறிபோன பின்னரும் அதிக ஓட்டங்கள் பதிவு செய்த அவுஸ்திரேலியா
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, ஒரு கட்டத்தில் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி மற்றும் நதன் கோல்டர்–நைல் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டம் காரணமாக அவுஸ்திரேலிய அணி 288 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இந்த மூன்று வீரர்களும் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த பின்னர் மேலதிகமாக 250 ஓட்டங்களை பெறுவதற்கு உதவினர். உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அணியொன்று 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த பின்னர் இவ்வாறு அதிக ஓட்டங்களை பதிவு செய்தது இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் பெறப்பட்ட சம்பவமாகவும் இது பதிவாகியது.
இதற்கு முன்னர் 1983ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த பின்னர் (9/4) மேலதிகமாக 257 ஓட்டங்களை குவித்ததே, உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் போட்டி ஒன்றில் 4 விக்கெட்டுகள் பறிபோனதன் பின்னர் அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட சம்பவமாக இருந்தது.
மனதை தயார் நிலைப்படுத்தி பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயார் – குசல் பெரேரா
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மனதை……..
பின்வரிசையில் ஜொலித்த கோல்டர்–நைலின் சாதனை
அவுஸ்திரேலிய அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் பின்வரிசையில் ஆடிய கோல்டர் நைல், அதிரடியான துடுப்பாட்டம் மூலம் 60 பந்துகளினை மாத்திரம் சந்தித்து 92 ஓட்டங்களை குவித்திருந்தார்.
கோல்டர்–நைல் இப்போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் 8ஆம் இலக்கத்திலோ அல்லது அதற்கு பின்னரோ துடுப்பாட வந்து அதிக ஓட்டங்கள் பெற்ற இரண்டாவது துடுப்பாட்ட வீரராக மாறினார்.
ஒருநாள் போட்டிகளில் 8ஆம் இலக்கத்திலோ அல்லது அதற்கு பின்னரோ துடுப்பாட வந்து அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கிறிஸ் வோக்ஸ் 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான போட்டி நடைபெற்ற இதே நொட்டிங்கம் மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 95 ஓட்டங்களை பெற்றதன் மூலமே இந்த அடைவுக்கு சொந்தக்காரராக மாறினார்.
அதோடு கோல்டர்–நைல் உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் 8ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராகவோ அல்லது அதற்கு பின்னரோ களம் வந்து அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் சாதனை படைத்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேய்க்வாட்டின் அபார சதத்தால் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய A அணிக்கு வெற்றி
அவுஸ்திரேலிய அணியின் 10ஆவது தொடர் வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணியினை தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி, குறித்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தாம் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிகளை பதிவு செய்திருக்கின்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் தடுமாற்றம் காட்டி வந்த அவுஸ்திரேலிய அணிக்கு இந்த தொடர் வெற்றிகள் அதிக உற்சாகத்தை கொடுத்திருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<