T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுக்காக, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய போட்டியில் தென்னாபிரிக்க அணியினை அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
>> சுபர் 12 சுற்று குழு 1 அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?
T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றின் முதல் போட்டியாக குழு 1 இல் காணப்படும் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான போட்டி அமைந்திருந்தது.
அபுதாபி நகரில ஆரம்பமாகியிருந்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கினார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி தொடக்கம் முதலே தடுமாற்றம் காட்டி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் எய்டன் மார்க்ரம் 36 பந்துகளில் 3 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 40 ஓட்டங்களைப் பெற்றார்.
WATCH – நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு எப்படி?
மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் மிச்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வூட் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 119 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களுடன் அடைந்தது.
அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் 34 பந்துகளில் பெளண்டரி ஒன்றுடன் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதேநேரம் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் என்ட்ரிஜ் நோர்கியே 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.
போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணிக்கா சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்திய ஜோஸ் ஹேசல்வூட் தெரிவாகினார்.
போட்டியின் சுருக்கம்
தென்னாபிரிக்கா – 118/9 (20) எய்டன் மார்க்ரம் 40(36), ஜோஸ் ஹேசல்வூட் 19/2(4), அடம் ஷம்பா 21/2(4), மிச்சல் ஸ்டார்க் 32/2(4)
அவுஸ்திரேலியா – 121/5 (19.4) ஸ்டீவ் ஸ்மித் 35(34), என்ட்ரிஜ் நோர்கியே 21/2(4)
முடிவு – அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Temba Bavuma | b Glenn Maxwell | 12 | 7 | 0 | 0 | 171.43 |
Quinton de Kock | b Josh Hazlewood, | 7 | 12 | 0 | 0 | 58.33 |
Rassie van der Dussen | c Matthew Wade b Josh Hazlewood, | 2 | 10 | 0 | 0 | 20.00 |
Aiden Markram | c Glenn Maxwell b Mitchell Starc | 40 | 36 | 1 | 0 | 111.11 |
Heinrich Klaasen | c Steve Smith b Pat Cummins | 13 | 13 | 0 | 0 | 100.00 |
David Miller | lbw b Adam Zampa | 16 | 18 | 0 | 0 | 88.89 |
Dwaine Pretorius | c Matthew Wade b Adam Zampa | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Keshav Maharaj | run out () | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Kagiso Rabada | not out | 19 | 23 | 0 | 0 | 82.61 |
Anrich Nortje | c Aaron Finch b Mitchell Starc | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Tabraiz Shamsi | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 6 (b 2 , lb 3 , nb 0, w 1, pen 0) |
Total | 118/9 (20 Overs, RR: 5.9) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Starc | 4 | 0 | 32 | 2 | 8.00 | |
Glenn Maxwell | 4 | 0 | 24 | 1 | 6.00 | |
Josh Hazlewood, | 4 | 1 | 19 | 2 | 4.75 | |
Pat Cummins | 4 | 0 | 17 | 1 | 4.25 | |
Adam Zampa | 4 | 0 | 21 | 2 | 5.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Aaron Finch | c Kagiso Rabada b Anrich Nortje | 0 | 5 | 0 | 0 | 0.00 |
David Warner | c Heinrich Klaasen b Kagiso Rabada | 14 | 15 | 0 | 0 | 93.33 |
Mitchell Starc | c Rassie van der Dussen b Keshav Maharaj | 11 | 17 | 0 | 0 | 64.71 |
Steve Smith | c Aiden Markram b Anrich Nortje | 35 | 34 | 0 | 0 | 102.94 |
Glenn Maxwell | b Tabraiz Shamsi | 18 | 21 | 0 | 0 | 85.71 |
Marcus Stoinis | not out | 24 | 16 | 0 | 0 | 150.00 |
Matthew Wade | not out | 15 | 10 | 0 | 0 | 150.00 |
Extras | 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0) |
Total | 121/5 (19.4 Overs, RR: 6.15) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kagiso Rabada | 4 | 0 | 28 | 1 | 7.00 | |
Anrich Nortje | 4 | 0 | 21 | 2 | 5.25 | |
Keshav Maharaj | 4 | 0 | 23 | 1 | 5.75 | |
Tabraiz Shamsi | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Dwaine Pretorius | 3.4 | 0 | 26 | 0 | 7.65 |