Home Tamil டேவிட் வோர்னரின் அபார துடுப்பாட்டத்தோடு அவுஸ்திரேலிய அணி வெற்றி

டேவிட் வோர்னரின் அபார துடுப்பாட்டத்தோடு அவுஸ்திரேலிய அணி வெற்றி

295
Image Courtesy - ICC

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 26ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியினை அவுஸ்திரேலியா 48 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடர் இந்தியாவில் நடைபெறாது – பி.சி.சி.ஐ

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடர் நடாத்த……

நொட்டிங்கம் நகரில் நேற்று (20) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்து கொண்டார்.

இந்த உலகக் கிண்ண தொடரின் தமது கடைசி மோதலில் இலங்கை அணியினை தோற்கடித்த அவுஸ்திரேலியா இப்போட்டியில் மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது. அந்தவகையில், மார்கஸ் ஸ்டோனிஸ், அடம் சம்பா மற்றும் கோல்டர்-நைல் ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாட ஷோன் மார்ஷ், கேன் றிச்சர்ட்ஸன் மற்றும் ஜேசன் பெஹ்ரேன்ட்ரோப் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய அணி – டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், கிளேன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கோல்டர்-நைல், பெட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் சம்பா

இதேநேரம், தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்த பங்களாதேஷ் அணியும் இப்போட்டிக்காக இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி, ருபெல் ஹொசைன், சபீர் ரஹ்மான் ஆகியோர் மொஹமட் சயீபுத்தின், மொசாதிக் ஹொசைன் ஆகியோருக்கு பதிலாக பங்களாதேஷ் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால், செளம்யா சர்க்கர், சகீப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம், லிடன் தாஸ், மஹ்மதுல்லா, சப்பீர் ரஹ்மான், மெஹிதி ஹஸன், மஷ்ரபி மொர்தஸா, ருபெல் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான்

சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் நோக்கில் இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய 6வது லீக்…..

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணிக்கு அதன் தலைவர் ஆரோன் பின்ச், டேவிட் வோர்னர் ஜோடி 121 ஓட்டங்கள் பகிர்ந்து சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தை வழங்கியது. பின்னர் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த ஆரோன் பின்ச் அவரின் 24ஆவது அரைச்சதத்தோடு 51 பந்துகளில் 5 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 53 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

தொடர்ந்து டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா ஆகியோர் வழங்கிய அதிரடியான துடுப்பாட்டம் காரணமாக அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட டேவிட் வோர்னர் அவரின் 12ஆவது ஒருநாள் சதத்துடன் 147 பந்துகளில் 14 பெளண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 166 ஓட்டங்களை பெற்றதோடு, உஸ்மான் கவாஜா அவரின் 11ஆவது ஒருநாள்  அரைச்சதத்துடன் 72 பந்துகளில் 10 பெளண்டரிகளுடன் 89 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதோடு, கிளேன் மெக்ஸ்வெலும் 10 பந்துகளில் 32 ஓட்டங்கள் பெற்று அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து வைத்துள்ளோம் – ருமேஷ் ரத்னாயக்க

இலங்கை கிரிக்கெட் அணி, தம்முடைய ஆறாவது உலகக்……

இதேநேரம் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் செளம்யா சர்க்கர் 3 விக்கெட்டுகளை சாய்க்க, முஸ்தபிசுர் ரஹ்மானும் ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான மிகவும் கடினமான 382 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பங்களாதேஷ் அணி பதிலுக்கு துடுப்பாடியது.

எனினும், பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது. பங்களாதேஷ் அணி இப்போட்டியில் பெற்ற 333 ஓட்டங்கள் அவர்கள் ஒருநாள் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும்.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை போராடிய முஸ்பிகுர் ரஹீம் அவரின் 7ஆவது ஒருநாள் சதத்தோடு 97 பந்துகளில் 9 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 102 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேநேரம், மஹ்மதுல்லா அவரின் 21ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு எதிராக அவிஷ்க குணவர்தன வழக்கு

இவர்களோடு தமிம் இக்பால் அவரின் 47ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 62 ஓட்டங்கள் பெற்றும், சகீப் அல் ஹசன் 41 ஓட்டங்கள் பெற்றும் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்காக முயற்சி செய்திருந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் மிச்செல் ஸ்டார்க், கோல்டர்-நைல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணி சார்பில் பிரமாண்ட சதம் ஒன்றினைப் பெற்ற டேவிட் வோர்னர் தெரிவாகினார்.

இப்போட்டியோடு, இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது ஐந்தாவது வெற்றியினை பதிவு செய்துள்ள அவுஸ்திரேலிய அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இங்கிலாந்து அணியினை லண்டனில் வைத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) எதிர்கொள்கின்றது.

மறுமுனையில் பங்களாதேஷ் அணி, தமது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் எதிர்வரும் திங்கட்கிழமை (24) செளத்தம்ப்டன் நகரில் வைத்து விளையாடவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<

போட்டியின் சுருக்கம்

Upcoming


Australia
381/5 (50)

Bangladesh
333/7 (50)

Batsmen R B 4s 6s SR
David Warner c Rubel Hossain b Soumya Sarkar 166 147 14 5 112.93
Aaron Finch c Rubel Hossain b Soumya Sarkar 53 52 5 1 101.92
Usman Khawaja c Mushfiqur Rahim b Soumya Sarkar 89 72 10 0 123.61
Usman Khawaja run out () 32 10 2 3 320.00
Marcus Stoinis not out 17 11 2 0 154.55
Steve Smith lbw b Mustafizur Rahman 1 2 0 0 50.00
 Alex Carey not out 11 8 1 0 137.50


Extras 12 (b 1 , lb 5 , nb 1, w 5, pen 0)
Total 381/5 (50 Overs, RR: 7.62)
Fall of Wickets 1-121 (20.5) Aaron Finch, 2-353 (20.5) Usman Khawaja, 3-313 (44.2) David Warner, 4-352 (46.2) Usman Khawaja, 5-354 (47.1) Steve Smith,

Bowling O M R W Econ
Mashrafe Mortaza 8 0 56 0 7.00
Mustafizur Rahman 9 69 0 1 0.00
Shakib Al Hasan (vc) 6 0 50 0 8.33
Rubel Hossain 9 0 83 3 9.22
Mehidy Hasan Miraz 10 0 59 1 5.90
Soumya Sarkar 8 0 58 0 7.25


Batsmen R B 4s 6s SR
Tamim Iqbal b Mitchell Starc 62 74 6 0 83.78
Soumya Sarkar run out () 10 8 2 0 125.00
Shakib Al Hasan (vc) c David Warner b Marcus Stoinis 41 41 4 0 100.00
Mushfiqur Rahim not out 102 97 9 1 105.15
Liton Das lbw b Adam Zampa 20 17 3 0 117.65
Mahmudullah c Pat Cummins b Nathan Coulter-Nile 69 50 5 3 138.00
Sabbir Rahaman b Nathan Coulter-Nile 0 1 0 0 0.00
Mehidy Hasan Miraz c David Warner b Mitchell Starc 6 7 0 0 85.71
Mashrafe Mortaza not out 6 5 1 0 120.00


Extras 17 (b 4 , lb 4 , nb 0, w 9, pen 0)
Total 333/7 (50 Overs, RR: 6.66)
Fall of Wickets 1-23 (3.5) Soumya Sarkar, 2-102 (18.1) Shakib Al Hasan (vc), 3-144 (24.1) Tamim Iqbal, 4-175 (29.2) Liton Das, 5-302 (45.3) Mahmudullah, 6-302 (45.4) Sabbir Rahaman, 7-323 (48.2) Mehidy Hasan Miraz,

Bowling O M R W Econ
Mitchell Starc 10 0 41 2 4.10
Pat Cummins 10 1 65 0 6.50
Glenn Maxwell 3 0 25 0 8.33
Nathan Coulter-Nile 10 0 58 2 5.80
Marcus Stoinis 8 0 54 2 6.75
Adam Zampa 9 0 68 1 7.56



முடிவு – அவுஸ்திரேலிய அணி 48 ஓட்டங்களால் வெற்றி