கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியை 36 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (9) ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செயதார்.
இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை
வேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் விரல் உபாதை ஒன்றினை..
தமது முதல் உலகக் கிண்ண போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இப்போட்டியில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளாமல் களமிறங்கியது.
இந்திய அணி – சிக்கர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி (அணித்தலைவர்), லோக்கேஷ் ராகுல், மஹேந்திர சிங் டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவ்னேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா
இதேநேரம் உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் என தாம் விளையாடிய இரண்டு அணிகளுக்கு எதிராகவும் வெற்றியினை சுவைத்த அவுஸ்திரேலிய அணியும் இப்போட்டியில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
அவுஸ்திரேலிய அணி – ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கோல்டர்-நைல், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் சம்பா
பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் வெற்றி பெற்றோம் – கேன் வில்லியம்சன்
ஆப்கானிஸ்தான் அணியில் உலகின் முன்னணி வீரர்கள் விளையாடியிருந்தாலும், தமது…
இதன் பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இந்திய அணி துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது. இந்திய அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சிக்கர் தவான் ஆகியோர் உறுதியான ஆரம்பத்தை வழங்கினர்.
இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் அரைச்சதங்களை பூர்த்தி செய்ததோடு, இந்திய அணியின் முதல் விக்கெட்டுக்காக 127 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது.
தொடர்ந்து கோல்டர்-நைலின் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்த ரோஹித் சர்மா இந்திய அணியின் முதல் விக்கெட்டாக வெளியேறினார். தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் சதம் பெற்ற சர்மா, இப்போட்டியில் தனது 42 ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 70 பந்துகளில் 57 ஓட்டங்களை குவித்திருந்தார்.
மறுமுனையில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவான் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியுடன் இணைந்து தனது தரப்பினை பலப்படுத்தினார். பின்னர் இப்போட்டியில் தன்னுடைய 17 ஆவது ஒருநாள் சதத்தினை பதிவு செய்த சிக்கர் தவான், இந்திய அணியின் இரண்டாம் விக்கெட்டாக மிச்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும் போது 109 பந்துகளில் 16 பெளண்டரிகள் அடங்கலாக 117 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்துக்கு ஹெட்ரிக் வெற்றி
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான…
தவானை அடுத்து இந்திய அணிக்கு அதன் தலைவர் விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா மற்றும் மஹேந்திர சிங் டோனி ஆகியோர் அதிரடியோடு ஓட்டங்களை விரைவாக அதிகரித்தனர்.
இவர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியோடு 50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பாக விராட் கோஹ்லி அவரது 50ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 77 பந்துகளில் 4 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 82 ஓட்டங்களை பெற்றார். அதேநேரம், ஹர்திக் பாண்டியா வெறும் 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் உடன் 48 ஓட்டங்களை குவித்ததோடு, மஹேந்திர சிங் டோனி 14 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றார்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்ற பெட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க் மற்றும் கோல்டர்-நைல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
>> ஜேசன் ரோயின் அபார துடுப்பாட்டத்தோடு இங்கிலாந்து அணிக்கு வெற்றி
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 353 ஓட்டங்களை அடைய அவுஸ்திரேலிய அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
மிகப் பெரிய இலக்கு ஒன்றினை எட்ட நினைத்த அவுஸ்திரேலிய அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் ஆகியோர் மூலம் மெதுவான ஆரம்பமே கிடைத்தது.
பின்னர் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக அதன் தலைவர் ஆரோன் பின்ச், 36 ஓட்டங்களுடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
ஆரோன் பின்ச்சினை அடுத்து ஆட்டமிழந்த ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் ஒருநாள் போட்டிகளில் தான் பதிவு செய்த 19ஆவது அரைச்சதத்தோடு 84 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்றார்.
இவர்கள் இருவரினையும் அடுத்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக நிதானமான முறையில் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர்.
இரு வீரர்களும் 69 ஓட்டங்கள் வரையில் இந்த இணைப்பாட்டத்திற்காக பெற்றதோடு, இந்த இணைப்பாட்டத்திற்குள் ஸ்டீவ் ஸ்மித் தனது 21ஆவது ஒருநாள் அரைச்சதத்தினை பூர்த்தி செய்தார்.
>> இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக விளையாடவுள்ள ஜப்பான்
தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியின் மூன்றாம் விக்கெட்டாக உஸ்மான் கவாஜா 39 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்றவாறு ஆட்டமிழந்தார்.
கவாஜாவினை அடுத்து ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டும் பறிபோனது. ஸ்டீவ் ஸ்மித் 70 பந்துகளில் 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 69 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
ஸ்மித்தின் விக்கெட்டுக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணி தமது மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களை தொடர்ச்சியாக இழந்தது.
எனினும், அவுஸ்திரேலிய அணியின் பின்வரிசையில் துடுப்பாடிய அலெக்ஸ் கேரி அதிரடியான துடுப்பாட்டம் மூலம் வெற்றி இலக்கினை அடைய போராடினார். எனினும் அவரது துடுப்பாட்டம் வீணானது.
அதன்படி அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 316 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பாக அலெக்ஸ் கேரி ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 2ஆவது அரைச்சதத்துடன், 35 பந்துகளில் 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 55 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதேநேரம் அலெக்ஸ் கேரி, இப்போட்டி மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெறப்பட்ட அதிவிரைவான அரைச்சதத்தினை 25 பந்துகளில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
>> இலங்கை A அணியின் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய இந்தியா
இதேநேரம் வெற்றி பெற்ற இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் புவ்னேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருக்க, யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் சிக்கர் தவான் தனது திறமையான துடுப்பாட்டத்திற்காக தெரிவானார்.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் தோல்வியினை சந்தித்துள்ள அவுஸ்திரேலிய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியினை புதன்கிழமை (12) டோன்டோன் நகரில் எதிர்கொள்கின்றது.
உலகக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த வெற்றியினை பெற்றுள்ள இந்திய அணி தமது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்வரும் வியாழக்கிழமை (13) நொட்டிங்ஹமில் எதிர்கொள்கின்றது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rohit Sharma | c Alex Carey b Nathan Coulter-Nile | 57 | 70 | 3 | 1 | 81.43 |
Shikhar Dhawan | c Nathan Lyon b Mitchell Starc | 117 | 103 | 16 | 0 | 113.59 |
Virat Kohli | c Pat Cummins b Marcus Stoinis | 82 | 77 | 4 | 2 | 106.49 |
Hardik Pandya | c Aaron Finch b Pat Cummins | 48 | 27 | 4 | 3 | 177.78 |
MS Dhoni | c & b Marcus Stoinis | 27 | 14 | 3 | 1 | 192.86 |
Lokesh Rahul | not out | 11 | 3 | 1 | 1 | 366.67 |
Kedar Jadhav | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 10 (b 0 , lb 3 , nb 0, w 7, pen 0) |
Total | 352/5 (50 Overs, RR: 7.04) |
Fall of Wickets | 1-127 (22.3) Rohit Sharma, 2-220 (36.6) Shikhar Dhawan, 3-301 (45.5) Hardik Pandya, 4-338 (49.1) MS Dhoni, 5-348 (49.5) Virat Kohli, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Pat Cummins | 10 | 0 | 55 | 1 | 5.50 | |
Mitchell Starc | 10 | 0 | 74 | 1 | 7.40 | |
Nathan Coulter-Nile | 10 | 1 | 63 | 1 | 6.30 | |
Glenn Maxwell | 7 | 0 | 45 | 0 | 6.43 | |
Adam Zampa | 6 | 0 | 50 | 0 | 8.33 | |
Marcus Stoinis | 7 | 0 | 62 | 2 | 8.86 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
David Warner | c Bhuvneshwar Kumar b Yuzvendra Chahal | 56 | 84 | 5 | 0 | 66.67 |
Aaron Finch | run out (Kedar Jadhav) | 36 | 35 | 3 | 1 | 102.86 |
Steve Smith | lbw b Bhuvneshwar Kumar | 69 | 70 | 5 | 1 | 98.57 |
Usman Khawaja | b Jasprit Bumrah | 42 | 39 | 4 | 1 | 107.69 |
Glenn Maxwell | c Ravindra Jadedja b Yuzvendra Chahal | 28 | 14 | 5 | 0 | 200.00 |
Marcus Stoinis | b Bhuvneshwar Kumar | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Alex Carey | not out | 55 | 35 | 5 | 1 | 157.14 |
Nathan Coulter-Nile | c Virat Kohli b Jasprit Bumrah | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Pat Cummins | c MS Dhoni b Jasprit Bumrah | 8 | 7 | 1 | 0 | 114.29 |
Mitchell Starc | run out (Bhuvneshwar Kumar) | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Adam Zampa | c Ravindra Jadedja b Bhuvneshwar Kumar | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Extras | 14 (b 3 , lb 3 , nb 1, w 7, pen 0) |
Total | 316/10 (50 Overs, RR: 6.32) |
Fall of Wickets | 1-61 (13.1) Aaron Finch, 2-133 (24.4) David Warner, 3-202 (36.4) Usman Khawaja, 4-238 (39.4) Steve Smith, 5-238 (39.6) Marcus Stoinis, 6-244 (40.4) Glenn Maxwell, 7-283 (44.5) Nathan Coulter-Nile, 8-300 (46.6) Pat Cummins, 9-313 (49.1) Mitchell Starc, 10-316 (49.6) Adam Zampa, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Bhuvneshwar Kumar | 10 | 0 | 50 | 3 | 5.00 | |
Jasprit Bumrah | 10 | 1 | 61 | 3 | 6.10 | |
Hardik Pandya | 10 | 0 | 68 | 0 | 6.80 | |
Kuldeep Yadav | 9 | 0 | 55 | 0 | 6.11 | |
Yuzvendra Chahal | 10 | 0 | 62 | 2 | 6.20 | |
Kedar Jadhav | 1 | 0 | 14 | 0 | 14.00 |
முடிவு – இந்திய அணி 36 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<