இளையோர் டெஸ்ட் முதல் நாளில் இலங்கை இளையோர் அணி ஆதிக்கம்

356

இலங்கை 19 வயதின் கீழ் மற்றும் அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான இளையோர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணியை சுழலில் மிரட்டிய ரொஹான் சன்ஜய ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்த, இன்றைய ஆட்டநேர முடிவில் தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதின் கீழ் அணி ஆட்டமிழப்பின்றி 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

நாளை (10) அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன்….

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒற்றை இளையோர் டெஸ்ட் என்பவற்றில் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வருகின்றது.

இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றதுடன், இதில் 2-1 என அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான ஒற்றை இளையோர் டெஸ்ட் போட்டி இன்று (10) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய இளையோர் கிரிக்கெட் அணியின் தலைவர் பெக்ஸ்டர் ஜே ஹோல்ட் முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

Photo Album – Australia U19 Team Tour to Sri Lanka 2019 | 3 Day Match | Day 1

இன்று ஆரம்பமாகிய போட்டியில் இறுதி 11 பேர்கொண்ட இலங்கை அணியில் மருதானை ஸாஹிரா கல்லூரியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் மொஹமட் சமாஸ் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

சமாஸ் ஏற்கனவே கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் இளையோர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில், இறுதியாக நிறைவடைந்த அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணியுடனான ஒருநாள் தொடரிலும் விளையாடியிருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த வருடம் நடைபெற்ற இந்திய இளையோர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை இளையோர் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட யாழ். மத்திய கல்லூரியின் மணிக்கட்டு சுழல் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த், இன்று ஆரம்பமாகிய பங்களாதேஷ் இளையோர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இறுதி பதினொருவர் அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.

இதேநேரம், நிபுன் தனன்ஞய தலைமையிலான இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியில், கண்டி திருத்துவ கல்லூரியின் ருவின் பீரிஸ், மாத்தறை புனித செர்வேஷியஸ் கல்லூரியின் சிஹான் கழிந்து மற்றும் காலி றிச்மண்ட் கல்லூரியின் தவீஷ அபிசேக் ஆகியோர் இளையோர் டெஸ்ட் போட்டிகளில் முதற்தடவையாக விளையாடும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டனர்.  

இதேவேளை, அவுஸ்திரேலிய இளையோர் அணியில் இடம்பெற்ற பதினொரு வீரர்களும், இப்போட்டியில் தமது டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கு சேம் பென்னிங் மற்றும் கொரி ஹன்டர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஸ்ரான்லி கல்லூரியை இன்னிங்ஸால் வீழ்தியது யாழ். இந்துக் கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் பிரிவு III இற்கான சிங்கர்……

இதில், சேம் பென்னிங்கின் (7) விக்கெட்டை, இலங்கை இளையோர் அணிக்காக தனது கன்னிப் போட்டியில் விளையாடியிருந்த வேகப்பந்து வீச்சாளர் ருவின் பீரிஸ் கைப்பற்றினார்.

இதனையடுத்து கொரி ஹன்டருடன் ஜோடி சேர்ந்த கீகன் ஓட்ஸ் இரண்டாவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கை கொடுத்தார். எனினும், இந்த இணைப்பாட்டத்தை மதிய இடைவேளைக்குப் பிறகு இலங்கை இளையோர் அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ரொஹான் சன்ஜய தகர்த்தார்.

இவர்களில் கீகன் ஓட்ஸ் 27 ஓட்டங்களுடனும், அரைச்சதம் கடந்த கொரி ஹன்டர் 71 ஓட்டங்களுடனும், புதிய வீரராக வந்த ஒலிவர் டேவிஸ் 13 ஓட்டங்களுடனும் ரொஹான் சன்ஜயவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வேகமாக ஓய்வறை திரும்பினர்.

தொடர்ந்து வந்த லக்லன் ஹேர்ன் 13 ஓட்டங்களுடன் வியாஸ்காந்தின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அந்த அணி 151 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அணித் தலைவர் பெக்ஸ்டர் ஜே ஹோல்ட் மற்றும் ஜெர்ரோட் ப்ரீமேன் ஆகியோர் மிகவும் நிதானமாக ஆடினர். ஒரு பக்கம் ப்ரீமேன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றொரு பக்கம் ஹோல்ட் அரைச்சதம் கடந்தார்.

இவர்களில் ஹோல்ட் 60 ஓட்டங்களை பெற்ற நிலையில் சந்துன் மெண்டிஸின் பந்துவீச்சிலும், ப்ரீமேன் 36 ஓட்டங்களைப் பெற்று ரொஹான் சன்ஜயவின் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து எதிராக சாதனை படைத்த திசர பெரேரா தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும்….

இதனையடுத்து வந்த பின்வரிசை வீரர்களும் இலங்கையின் சுழல் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாற, அவ்வணி 9 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அவுஸ்திரேலிய இளையோர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கொரி ஹன்டர் 71 ஓட்டங்களையும், பெக்ஸ்டர் ஜே ஹோல்ட் 60 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தனர்.

இதேநேரம், இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக ரொஹான் சன்ஜய, 94 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், ருவின் பீரிஸ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்ற, வியாஸ்காந்த் மற்றும் சந்துன் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இளையோர் அணி, போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது விக்கெட் இழப்பின்றி 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை இளையோர் அணியின் துடுப்பாட்டத்தில் கமில் மிஷார 15 ஓட்டங்களுடனும், தவீஷ அபிஷேக் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<