மொஹமட் சமாஸின் போராட்டம் வீண்; ஆஸி. இளையோரிடம் மீண்டும் வீழ்ந்த இலங்கை

790

அவுஸ்திரேலிய இளையோர் அணிக்கு எதிராக கொழும்பு பி. சரணவமுத்து மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மொஹமட் சமாஸ், சமிந்து விஜேசிங்க, சொனால் தினூஷ மற்றும் நிபுன் தனஞ்சயவின் அரைச்சதங்களையும் தாண்டி, அவுஸ்திரேலிய இளையோர் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய இளையோர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் ஒற்றை மூன்று நாள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை (03) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த திசர பெரேரா ; போராட்டம் வீண்

இலங்கை – நியூசிலாந்து அணிகள்…

இந்த நிலையில், பி. சரணவமுத்து மைதானத்தில் இன்று (05) நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட அணித் தலைவர் ஒலிவர் டேவிஸ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சேம் பென்னிங், கொரி ஹன்டர் களமிறங்கினர். சேம் பென்னிங் 7 ஓட்டங்களுடனும், கொரி ஹன்டர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய கீகன் ஓட்ஸ் மற்றும் அணித் தலைவர் ஒலிவர் டேவிஸ் ஜோடி பொறுப்பாக விளையாடி அரைச் சதம் குவித்தனர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த வேளை அணித் தலைவர் ஒலிவர் டேவிஸ் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வில் சதர்லண்ட் மற்றும் கீகன் ஓட்ஸ் ஆகியோர் அவுஸ்திரேலிய இளையோர் கிரிககெட் அணியினை பலப்படுத்தினர். அரைச்சதம் பூர்த்தி செய்த கீகன் ஓட்ஸ் 100 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்களைப் பெற்று ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

Photos: Australia U19 Team Tour to Sri Lanka 2019 – 2nd ODI

எவ்வாறாயினும், இறுதி ஓவர் வரை களத்தில் நின்ற வில் சதர்லெண்ட் அபாரமாக துடுப்பாடி சதமொன்றைப் பெற்றுக்கொடுக்க, அவுஸ்திரேலிய 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணிக்காக துடுப்பாட்டத்தில் அதிரடியான முறையில் செயற்பட்ட வில் சதர்லெண்ட் 91 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கலாக 115 ஓட்டங்களை விளாச, கீகன் ஓட்ஸ் 100 பந்துகளில் 95 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஒலிவர் டேவிஸ் 48 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இலங்கை இளையோர் அணியின் பந்துவீச்சு சார்பாக சமிந்து விஜேசிங்க 2 விக்கெட்டுக்களையும், ரொஹான் சன்ஜய ஓரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 305 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணிக்கு கமில் மிஷார மற்றும் நவோத் பரணவிதான ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இயென் கார்லயல் வீசிய முதல் பந்திலே நவோத் பரணவிதான போல்ட் ஆகி ஓய்வறை திரும்பினார்.

கமில் மிஷாரவின் சதம் வீண் : ஆஸி. இளையோருக்கு இலகு வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய 19…

இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 35 ஆக இருந்தபோது கமில் மிஷார 15 ஓட்டங்களுக்கு இயென் கார்லயலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் நிபுன் தனன்ஞய, மொஹமட் சமாஸுடன் இணைந்து பொறுப்பாகவும், அதிரடியாகவும் விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

இ;வ்விருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப்  பெற்றிருந்த வேளை, உபாதை காரணமாக மொஹமட் சமாஸ் 76 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

லியம் மார்ஷல் வீசிய 28ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் புதிய வீரராகக் களமிறங்கிய அவிஷ்க தரிந்து ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். அதனையடுத்து மார்ஷலின் மூன்றாவது பந்தில் அணித் தலைவர் நிபுன் தனன்ஞய ஆட்டமிழந்தார். அவர் 71 பந்துகளில் 54 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

அதன் பின்னர் 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சமிந்து விஜேசிங்க மற்றும் சொனால் தினூஷ மிகவும் நிதானமாக ஆடினர். அந்த வகையில் இரண்டு வீரர்களினாலும் 5ஆம் விக்கெட்டுக்காக 98 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தது. இந்த இணைப்பாட்டத்தின் காரணமாக இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை நெருங்கியது

எனினும், அரைச்சதம் குவித்து நம்பிக்கை கொடுத்த சமிந்து விஜேசிங்க 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்நிலையில், உபாதை காரணமாக ஓய்வறை திரும்பிய மொஹமட் சமாஸ் மீண்டும் துடுப்பாட களமிறங்கியிருந்தார். எனினும், அவரால் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. ஜோஸ் கான் வீசிய பந்தில் மார்ஷலிடம் பிடிகொடுத்து 79 ஓட்டங்களுடன் வந்த வேகத்தில் மீண்டும் ஓய்வறை திரும்பினார்.

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் அவுஸ்திரேலிய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை இளையோர் அணி 297 ஓட்டங்களை மட்டுமே பெற்று விறுவிறுப்பான போட்டியில் 7 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

ஹரீனின் புது வியூகம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக அமையுமா?

மேசன் தொழில் செய்பவருக்கு தச்சுத்…

எவ்வாறாயினும், இறுதிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க போராடிய சொனல் தினூஷ ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவரைத் தவிர மொஹமட் சமாஸ் 79 ஓட்டங்களையும், சமிந்து விஜேசிங்க 63 ஓட்டங்களையும், அணித் தலைவர் நிபுன் தனன்ஞய 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.  

அவுஸ்திரேலிய இளையோர் அணி சார்பில் இயென் கார்லயல் 60 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். லியெம் மார்ஷல் மற்றும் ஜெர்ரோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதையடுத்து, 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 அவுஸ்திரேலிய இளையோர் அணி முன்னிலை பெற்றுள்ளது. இது இவ்வாறிருக்க, இவ்விரு அணிகளுக்கும்  இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 07ஆம் திகதி பி. சரணவமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<