அடுத்த வாரம் பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரில் மோதும் அவுஸ்திரேலியா

376
Australia tour to bangladesh

பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இம்மாதம் 27 ஆம் திகதி டாக்கா நகரில்  ஆரம்பமாகும் போட்டியுடன் அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

இத்தொடரில் விளையாடுவதற்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியினர், கடந்த வெள்ளிக்கிழமை (18) பங்களாதேஷ் விஜயம் மேற்கொண்டனர்.  

இந்த டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் அணியின் தலைவராக முஷ்பிகுர் ரஹீம் செயற்படவுள்ளார். அதோடு சகல துறை ஆட்டக்காரர் நஸீர் ஹொசைன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சபியுல் இஸ்லாம் ஆகியோர் மீண்டும் பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இத்தொடரின் மூலம் விளையாடவுள்ளனர்.   

ஒரே நாளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்து மண்ணில் முதல் முறை நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில்…

இந்த சுற்றுப் பயணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் இணைக்கப்பட்டிருக்கும் துடுப்பாட்ட வீரரான  உஸ்மான் கவாஜா தனது வழமையான ஆட்டத்தினை பங்களாதேஷ் உடனான தொடரின் மூலம் மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதியாக, இந்திய அணியுடன் டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடியிருந்த அவுஸ்திரேலிய அணி, அத்தொடரினை  2-1 என பறிகொடுத்திருந்தது. அத்தோல்வியின் காரணமாக, டெஸ்ட் தரவரிசையில் நான்காம் இடத்தில் காணப்படும் அவுஸ்திரேலியவிற்கு மீண்டும் புள்ளிகளை அதிகரித்து முன்னிலை பெற இத்தொடர் வரப்பிரசாதமாக அமையும்.

எனினும் துடிப்பு மிக்க பங்களாதேஷ் அணியானது, தமது சொந்த மண்ணில் வைத்து பலமிக்க இங்கிலாந்து அணியினை கடந்த வருடம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வரலாற்று வெற்றி ஒன்றினைப் பதிவு செய்து இருந்ததுடன், இவ்வருட மார்ச் மாதத்தில் இலங்கை அணிக்கெதிராகவும் டெஸ்ட் போட்டியொன்றில் முதல் தடவையாக வெற்றிபெற்று சாதனை புரிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடரில் பங்கேற்வுள்ள இரு அணிக்களதும் குழாம்

பங்களாதேஷ்

முஷ்பிகுர் ரஹீம் (அணித் தலைவர்), தமிம் இக்பால், செளம்யா சர்க்கர், இம்ருல் கைஸ், சகிப் அல் ஹஸன், மெஹதி ஹஸன் மிராஸ், சப்பீர் ரஹ்மான், நஸீர் ஹொசைன், லில்டன் டாஸ், தஸ்கின் அஹமட், சபியுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், தய்ஜூல் இஸ்லாம், மொமினுல் ஹக்

அவுஸ்திரேலியா

ஸ்டீவ் ஸ்மித் (அணித் தலைவர்), டேவிட் வோர்னர், அஸ்டன் அகார், ஜேக்ஸ்சன் பேர்ட், ஹில்டன் கார்ட்விரைட், பேட் கம்மிண்ஸ், பீட்டர் ஹேன்ஸ்கொம்ப், ஜோஸ் ஹேசல்வூட், உஸ்மான் கவாஜா, நதன் லயன், கிளேன் மெக்ஸ்வெல், மெத்திவ் ரேன்சவ், மிச்செல் ஸ்வெப்சன், மெத்திவ் வேட்

போட்டி நேர அட்டவணை

முதல் டெஸ்ட்ஒகஸ்ட் 27ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரைடாக்கா

இரண்டாவது டெஸ்ட்செப்டெம்பர் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரைசிட்டகொங்க்