இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஒருநாள் போட்டிக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஒரேயொரு ஒருநாள் போட்டிக்கான மைதானம் அறிவிக்கப்படவில்லை.
2024 இல் இலங்கையின் விளையாட்டுத்துறையில் நடந்தவை!
எனினும் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி பெப்ரவரி 13ம் திகதி இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை முதல் போட்டி ஜனவரி 29 முதல் பெப்ரவரி 2ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது போட்டி பெப்ரவரி 6-10ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இதேவேளை இந்த தொடருக்கான அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் 20ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
போட்டி அட்டவணை
- முதல் டெஸ்ட் – ஜனவரி 29 – பெப்ரவரி 02 (காலி)
- இரண்டாவது டெஸ்ட் – பெப்ரவரி 6 – 10 (காலி)
- ஒருநாள் போட்டி – பெப்ரவரி 13 (ஹம்பாந்தோட்டை)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<