Home Tamil அசத்தல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை ஆரம்பம் செய்த இலங்கை அணி

அசத்தல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை ஆரம்பம் செய்த இலங்கை அணி

Australia tour of Sri Lanka 2025 

5
Australia tour of Sri Lanka 2025 

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 49 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இலங்கை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

>>சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் ஜஸ்பிரிட் பும்ரா

இன்று (12) கொழும்பு ஆர். பிரேமாதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.

தொடர்ந்த போட்டியில் இலங்கை அணிக்காக ஆரம்ப வீரர்களாக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க ஆகிய களம் வந்தனர்.

இலங்கை அணிக்கு இந்த வீரர்களால் சிறந்த ஆரம்பம் அமையாத நிலையில் ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர். எனினும் இந்த தருணத்தில் சரித் அசலன்க – துனித் வெல்லாலகே ஜோடி நிதானமாக ஆடி இலங்கை தரப்பிற்கு நம்பிக்கை கொடுத்தது.

எனினும் துனித் வெல்லாலகே ஒரு சிறந்த பிடியெடுப்புடன் 30 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். இந்த தருணத்தில் தனியொருவராக போராடிய சரித் அசலன்க எஷான் மலிங்கவுடன் இணைந்து ஒன்பதாம் விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதோடு, சதமும் விளாசினார். இதனால் இலங்கை அணியானது 46 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்கள் பெற்றது.

இலங்கைத் தரப்பில் சரித் அசலன்க தன்னுடைய மூன்றாவது ஒருநாள் சதத்துடன் 126 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 14 பெளண்டரிகள் அடங்கலாக 126 பந்துகளில் 127 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஷோன் எப்போட் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஸ்பென்சர் ஜோன்சன், ஆரோன் ஹார்டி மற்றும் நதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 215 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியானது இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 33.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அலெக்ஸ் கெரி 41 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சில் அதிகபட்சமாக மகீஷ் தீக்ஸன 4 விக்கெட்டுக்களை சாய்க்க, அசித பெர்னாண்டோ மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலன்க தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
214/10 (46)

Australia
165/10 (33.5)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Alex Carey b Spencer Johnson 4 5 1 0 80.00
Avishka Fernando c Steve Smith b Aaron Hardie 1 4 0 0 25.00
Kusal Mendis c Matthew Short b Aaron Hardie 19 17 4 0 111.76
Kamindu Mendis c Fraser McGurk b Spencer Johnson 5 8 1 0 62.50
Charith Asalanka c Jake Fraser McGurk b Sean Abbott 127 126 14 5 100.79
Janith Liyanage  c Steve Smith b Sean Abbott 11 29 0 0 37.93
Dunith Wellalage c Steve Smith b Matthew Short 30 34 2 1 88.24
Wanindu Hasaranga b Nathan Ellis 7 14 0 0 50.00
Maheesh Theekshana c Alex Carey b Nathan Ellis 2 11 0 0 18.18
Eshan Malinga not out 1 26 0 0 3.85
Asitha Fernando c Alex Carey b Sean Abbott 0 3 0 0 0.00


Extras 7 (b 0 , lb 2 , nb 1, w 4, pen 0)
Total 214/10 (46 Overs, RR: 4.65)
Bowling O M R W Econ
PSP Handscomb 7 0 44 2 6.29
Aaron Hardie 6 0 13 2 2.17
Shaun Marsh 9 0 61 3 6.78
Nathan Ellis 9 2 23 2 2.56
Adam Zampa 6 0 32 0 5.33
Matthew Short 9 0 39 1 4.33


Batsmen R B 4s 6s SR
Matthew Short lbw b Asitha Fernando 0 2 0 0 0.00
Jake Fraser McGurk c & b Asitha Fernando 2 9 0 0 22.22
Cooper Connolly lbw b Maheesh Theekshana 3 16 0 0 18.75
Steve Smith b Dunith Wellalage 12 17 3 0 70.59
Marnus Labuschagne lbw b Maheesh Theekshana 15 27 1 0 55.56
Alex Carey c Pathum Nissanka b Charith Asalanka 41 38 5 1 107.89
Aaron Hardie lbw b Wanindu Hasaranga 32 37 3 0 86.49
Sean Abbott c & b Maheesh Theekshana 20 23 3 0 86.96
Nathan Ellis b Dunith Wellalage 0 3 0 0 0.00
Adam Zampa not out 20 29 2 0 68.97
Spencer Johnson lbw b Maheesh Theekshana 0 2 0 0 0.00


Extras 20 (b 0 , lb 5 , nb 0, w 15, pen 0)
Total 165/10 (33.5 Overs, RR: 4.88)
Bowling O M R W Econ
Asitha Fernando 5 1 23 2 4.60
Eshan Malinga 4 0 12 0 3.00
Maheesh Theekshana 9.5 1 40 4 4.21
Dunith Wellalage 7 0 33 2 4.71
Wanindu Hasaranga 6 0 47 1 7.83
Charith Asalanka 2 0 5 1 2.50



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<