இலங்கை – அவுஸ்திரேலியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

Australia tour of Sri Lanka 2024

231
Australia tour of Sri Lanka 2024

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், அதனை தொடர்ந்து ஒரு போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரிலும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. 

>>ஜிம்பாப்வேயில் வரலாற்று டெஸ்ட் தொடரில் ஆடவுள்ள ஆப்கானிஸ்தான்!<<

குறித்த இந்த தொடருக்காக ஜனவரி மாதம் 20ம் திகதி இலங்கை வரவுள்ள அவுஸ்திரேலிய அணி 29ம் திகதி முதல் பெப்ரவரி 2ம் திகதிவரை முதல் டெஸ்ட் போட்டியிலும், பெப்ரவரி 6ம் திகதி முதல் 10ம் திகதிவரை இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்த இரண்டு டெஸ்ட்  போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. 

அதேநேரம் குறித்த இந்த டெஸ்ட் தொடரையடுத்து பெப்ரவரி 13ம் திகதி ஒருநாள் போட்டியொன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி நடைபெறவுள்ள மைதானம் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

போட்டி அட்டவணை 

  • முதல் டெஸ்ட்ஜனவரி 29 – பெப்ரவரி 2 (காலி) 
  • முதல் டெஸ்ட்பெப்ரவரி 6 – பெப்ரவரி 10 (காலி) 
  • ஒருநாள் போட்டிபெப்ரவரி 13 (மைதானம் அறிவிக்கப்படவில்லை) 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<