அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 21 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் புதுமுக வீரர்களான சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பிரமோத் மதுசான் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மூன்றாவது T20I போட்டியிலிருந்தும் நீக்கப்படும் ஸ்டார்க்!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாடிவரும் பெரும்பாளான வீரர்கள் ஒருநாள் குழாத்த்தில் இடம்பெற்றுள்ளதுடன், சில வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி நுவனிந்து பெர்னாண்டோ, கசுன் ராஜித, மதீஷ பதிரண மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறித்த வீரர்கள் ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலிய A அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடிய தனன்ஜய டி சில்வா அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளதுடன், தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, அசித பெர்னாண்டோ, ஜெப்ரி வெண்டர்சே ஆகிய அனுபவ வீரர்களும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அணியின் தலைவராக தசுன் ஷானக தொடர்ந்தும் செயற்பட்டுவரும் நிலையில், T20I குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிட்ட வீரர்களை தவிர்ந்த ஏனைய வீரர்கள் அனைவரும் ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 14ம் திகதி கண்டி-பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஒருநாள் குழாம்
தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, சாமிக்க கருணராத்ன, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, நுவான் துஷார, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, ஜெப்ரி வெண்டர்சே, லஹிரு மதுசங்க, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுசான்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<