இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணி ; போட்டி அட்டவணை வெளியானது!

Australia tour of Sri Lanka 2022

1642

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்துவகை போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 T20i போட்டிகளில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

>>கொழும்பு அணிக்காக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத்

ஜூன் மாதம் 7ஆம் திகதி T20i போட்டியுடன் இந்த தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், ஜூலை 12ஆம் திகதி டெஸ்ட் போட்டிகளுடன் தொடர் நிறைவுக்கு வருகின்றது. தொடரின் முதல் இரண்டு T20i போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபறெவுள்ளதுடன், இறுதி T20i போட்டி கண்டி-பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து முதலிரண்டு ஒருநாள் போட்டிகள் கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபறெவுள்ளன. இறுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், சுமார் 5 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • முதல் T20I – ஜூன் 7 (ஆர்.பிரேமதாஸ)
  • 2வது T20I – ஜூன் 8 (ஆர்.பிரேமதாஸ)
  • 3வது T20I – ஜூன் 11 (பல்லேகலை)
  • முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 14 (பல்லேகலை)
  • 2வதுஒருநாள் போட்டி- ஜூன் 16 (பல்லேகலை)
  • 3வது ஒருநாள் போட்டி- ஜூன் 19 (ஆர்.பிரேமதாஸ)
  • 4வது ஒருநாள் போட்டி – ஜூன் 21 (ஆர்.பிரேமதாஸ)
  • 5வது ஒருநாள் போட்டி – ஜூன் 24 (ஆர்.பிரேமதாஸ)
  • முதல் டெஸ்ட் – ஜூன் 29 – ஜூலை 4 (காலி)
  • 2வது டெஸ்ட் – ஜூலை 8 – ஜூலை 12 (காலி)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<