Home Tamil ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரை நிறைவு செய்த அவுஸ்திரேலியா

ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரை நிறைவு செய்த அவுஸ்திரேலியா

417
Australia tour of Sri Lanka 2022 - 5th ODI - Match

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 2-3 என நிறைவு செய்ய, இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

>> அவுஸ்திரேலிய அணியில் மேலும் ஒரு வீரருக்கு உபாதை

முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தப் போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தினேஷ் சந்திமால், தனுஷ்க குணத்திலக்க மற்றும் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுஷான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட தனன்ஞய டி சில்வா (சுகவீனம்), வனிந்து ஹஸரங்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இந்த ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகள் நிறைவடைந்து தொடரினை இலங்கை 3-1 எனக் கைப்பற்றிய நிலையில், தொடரின் இறுதிப் போட்டியில் ஆறுதல் வெற்றியொன்றினை எதிர்பார்த்து அவுஸ்திரேலிய அணி களமிறங்கியிருந்தது. இப்போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் ஜோஸ் இங்கிலிஸ் சர்வதேச அறிமுகம் பெற, ட்ராவிஸ் ஹெட்டிற்கு உபாதை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை முதல் பதினொருவர்

தனுஷ்க குணத்திலக்க, சரித் அசலன்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட்காப்பாளர்), துனித் வெல்லாலகே, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க (அணித்தலைவர்), ஜெப்ரி வண்டர்செய், சாமிக்க கருணாரட்ன, ப்ரமோத் மதுஷான், மஹீஷ் தீக்ஷன

அவுஸ்திரேலிய முதல் பதினொருவர்

ஆரோன் பின்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், மிஷெல் மார்ஷ், மார்னஸ் லபுசேனே, அலெக்ஸ் கெரி (விக்கெட் காப்பாளர்), ஜோஸ் இங்கீலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கெமருன் கிரீன், பேட் கம்மின்ஸ், மெதிவ் குஹ்னமேன், ஜோஸ் ஹேசல்வூட்

பின்னர் நாணய சுழற்சி முடிவுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். தொடர்ந்த ஆட்டத்தில் பெதும் நிஸ்ஸங்க இலகுவான பிடியெடுப்பு ஒன்றினை கொடுத்து இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக 2 ஓட்டங்களுடன் ஜோஸ் ஹேசல்வூடின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெதும் நிஸ்ஸங்கவினை அடுத்து தனுஷ்க குணத்திலக்கவும் தனது விக்கெட்டினை 8 ஓட்டங்கள் எடுத்தவாறு ஹேசல்வூடிற்கு கொடுத்தார்.

இதனையடுத்து இலங்கை அணியின் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் அவுஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சுக்கு தடுமாறத் தொடங்கி அடுத்தடுத்து தமது விக்கெட்டுக்களைக் பறிகொடுக்கத் தொடங்கினர். இன்றைய போட்டியில் வாய்ப்பினைப் பெற்ற தினேஷ் சந்திமால் 6 ஓட்டங்களை எடுக்க, சரித் அசலங்கவும் ஏமாற்றம் தந்து 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். சரித் அசலங்கவின் பின்னர் ஒரு சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றிருந்த குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களுடன் தனது விக்கெட்டினை கிளன் மெக்ஸ்வெலிடம் பறிகொடுத்தார். குசல் மெண்டிஸின் பின்னர் களம் வந்த துனித் வெலால்கே (4) இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க (1) ஆகியோரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தனர். இதனால், இலங்கை அணி ஒரு கட்டத்தில் 62 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றது.

>> இலங்கைக்கு டேவிட் வோர்னர் விடுக்கும் எச்சரிக்கை

இந்த நிலையில் இலங்கை அணியின் 8ஆம் விக்கெட்டுக்காக ஜெப்ரி வண்டர்செய் உடன் ஜோடி சேர்ந்த சாமிக்க கருணாரட்ன பொறுப்பாக ஆடி பொறுமையான முறையில் ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். எனினும் 4 ஓட்டங்கள் பெற்றிருந்த ஜெப்ரி வன்டர்செய் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து செல்ல, இலங்கை அணி மீண்டும் 85 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அதனையடுத்து புதிய வீரராக வந்த ப்ரமோத் மதுஷானுடன் இணைந்து 9ஆவது விக்கெட்டுக்காக சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கிய சாமிக்க கருணாரட்ன ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய கன்னி அரைச்சதத்தினையும் பதிவு செய்தார்.

தொடர்ந்து இலங்கை அணியின் 9ஆது விக்கெட் இணைப்பாட்டம் ப்ரமோத் மதுஷானின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. கெமரூன் கீரினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ப்ரமோத் மதுஷான் 15 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, 9ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 58 ஓட்டங்கள் பெறப்பட்டது.

இறுதியில் இலங்கை அணிக்காக அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்கள் பெற முயன்ற சாமிக்க கருணாரட்னவின் விக்கெட் பறிபோக, இலங்கை அணி 43.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 160 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சாமிக்க கருணாரட்ன 75 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 75 ஓட்டங்கள் பெற்றிருக்க, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் பெட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வூட் மற்றும் மெதிவ் குஹ்னமேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 161 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்கள் காரணமாக ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்டது. இதில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஆரோன் பின்ச் ஓட்டமேதுமின்றியும், டேவிட் வோனர் 10 ஓட்டங்களுடனும் ஓய்வறை நடந்தனர்.

தொடர்ந்து புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த ஜோஷ் இங்கிலிஸ், மிச்சல் மார்ஷ் ஆகியோரும் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத நிலையில் அவுஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு கை கொடுத்த அலெக்ஸ் கேரி மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் பொறுமையாக துடுப்பாடி அவுஸ்திரேலிய அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அவுஸ்திரேலிய அணி போட்டியின் வெற்றி இலக்கினை 39.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களுடன் அடைந்தது.

>> MCA சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டியில் ஜோன் கீல்ஸ், MODE அணிகள்

அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்த அலெக்ஸ் கேரி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 45 ஓட்டங்கள் எடுத்திருக்க, மார்னஸ் லபுஷேன் 31 ஓட்டங்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சாமிக்க கருணாரட்ன அவரது துடுப்பாட்டத்திற்காகப் பெற்றுக்கொள்ள, தொடர் நாயகன் விருது இலங்கை அணியின் குசல் மெண்டிஸிற்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
160/10 (43.1)

Australia
164/6 (39.3)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Aaron Finch b Josh Hazlewood 8 14 1 0 57.14
Pathum Nissanka c Alex Carey b Josh Hazlewood 2 4 0 0 50.00
Kusal Mendis hit-wicket b Glenn Maxwell 26 40 3 0 65.00
Dinesh Chandimal c Aaron Finch b Pat Cummins 6 11 1 0 54.55
Charith Asalanka run out (-Select-) 14 27 1 0 51.85
Dasun Shanaka b Matthew Kuhemann 1 3 0 0 33.33
Dunith Wellalage c Pat Cummins b Matthew Kuhemann 4 2 1 0 200.00
Chamika Karunaratne c Alex Carey b Pat Cummins 75 75 8 2 100.00
Jeffery Vandersay run out () 4 23 0 0 17.39
pramod madushan c & b Cameron Green 15 52 2 0 28.85
Maheesh Theekshana not out 2 8 0 0 25.00


Extras 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 160/10 (43.1 Overs, RR: 3.71)
Bowling O M R W Econ
Josh Hazlewood 7 3 20 2 2.86
Glenn Maxwell 10 0 38 1 3.80
Matthew Kuhemann 10 2 26 2 2.60
Pat Cummins 6.1 1 22 2 3.61
Mitchell Marsh 1 0 3 0 3.00
Marnus Labuschagne 7 1 36 0 5.14
Cameron Green 2 0 13 1 6.50


Batsmen R B 4s 6s SR
David Warner c Danushka Gunathilaka b Dunith Wellalage 10 8 2 0 125.00
Aaron Finch c Charith Asalanka b Maheesh Theekshana 0 3 0 0 0.00
Mitchell Marsh c Pathum Nissanka b pramod madushan 24 50 3 0 48.00
Josh Inglis c Pathum Nissanka b Maheesh Theekshana 5 10 1 0 50.00
Marnus Labuschagne lbw b Dunith Wellalage 31 58 2 0 53.45
Alex Carey not out 45 65 1 0 69.23
Glenn Maxwell b Dunith Wellalage 16 17 2 0 94.12
Cameron Green not out 25 26 2 1 96.15


Extras 8 (b 0 , lb 0 , nb 0, w 8, pen 0)
Total 164/6 (39.3 Overs, RR: 4.15)
Bowling O M R W Econ
Chamika Karunaratne 3 0 19 0 6.33
Maheesh Theekshana 10 1 26 2 2.60
Dunith Wellalage 10 0 42 3 4.20
Jeffery Vandersay 9.3 0 46 0 4.95
pramod madushan 3 0 13 1 4.33
Charith Asalanka 4 0 18 0 4.50



முடிவு – அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<