அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணிக்காக தினேஷ் சந்திமால் சதமடித்து அசத்தியதுடன், கமிந்து மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் அரைச்சதங்களை பதிவுசெய்து அணிக்கு வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
அதன்படி இலங்கை அணியானது இன்றைய ஆட்டநேர நிறைவில் தினேஷ் சந்திமால் சதமடித்து களத்தில் நிற்க, 6 விக்கெட்டுகளை இழந்து 431 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
>> திமுத் – மெண்டிஸின் இணைப்பாட்டத்தின் மூலம் பலமடைந்த இலங்கை!
இலங்கை அணியானது இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது 184 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கியதுடன், 180 ஓட்டங்கள் பின்னடைவிலிருந்து ஆட்டத்தை தொடர்ந்தது.
மூன்றாவது நாள் ஆரம்பத்தை பொருத்தவரை இலங்கை அணிக்கு சிறப்பாக அமையவில்லை. குசல் மெண்டிஸ் நேற்றைய தினம் 84 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் மேலதிகமாக ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று, 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
நெதன் லையோனின் பந்துவீச்சில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்து தன்னுடைய சதத்தை இன்றைய தினம் தவறவிட்டதுடன், திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டிருந்தார்.
குசல் மெண்டிஸின் ஆட்டமிழப்பை தொடர்ந்து அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இணைப்பாட்டமொன்றை பகிரத்தொடங்கினர். இவர்கள் இருவரும் மதியபோசன இடைவேளைவரை விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் ஓட்டங்களை குவிக்க இலங்கை அணி 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து ஆரம்பித்த இந்தப்போட்டியில் மெதிவ்ஸ் தன்னுடைய அரைச்சதத்தை பதிவுசெய்த போதும் மிச்சல் ஸ்டார்க்கின் ஓவரில், மார்னஸ் லபுசேங்கிடம் பிடிகொடுத்து 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் 83 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்ததுடன் இலங்கை அணி 269 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
மெதிவ்ஸின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமாலுடன் இணைந்து பலமான இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினார். இவர்கள் இருவரும் ஓட்டவேகத்தையும் சற்று அதிகரிக்க, எந்தவித அழுத்தங்களும் இன்றி இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது.
சந்திமால் தன்னுடைய அரைச்சதத்தை பதிவுசெய்துக்கொள்ள மறுமுனையில் கமிந்து மெண்டிஸ் சிறந்த பங்களிப்பை வழங்கினார். தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் போட்டியில் மழைக்குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டு தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது. இதன்போது இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து ஆரம்பித்த இன்றைய நாள் ஆட்டநேரத்தின் இறுதிப்பகுதியில் தினேஷ் சந்திமால் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாட, கமிந்து மெண்டிஸ் தன்னுடைய அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் அரைச்சதத்தை பதிவுசெய்தார். கமிந்து மெண்டிஸின் அரைச்சதத்தை தொடர்ந்து தினேஷ் சந்திமால் தன்னுடைய 13வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார்.
இவர்கள் இருவரும் மிகச்சிறப்பாக ஆடி 133 ஓட்டங்களை 5வது விக்கெட்டுக்காக பகிர்ந்தபோதும், கமிந்து மெண்டிஸ் 63 ஓட்டங்களுடன் மிச்சல் ஸ்வெப்சனுடைய பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல 5 ஓட்டங்களுடன் லையோனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகளை இழந்தபோதும், தினேஷ் சந்திமால் இன்றைய ஆட்டநேர இறுதிவரை களத்தில் நின்று 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ரமேஷ் மெண்டிஸ் 7 ஓட்டங்களை பெற்றுள்ளார். பந்துவீச்சில் நெதன் லையோன், மிச்சல் ஸ்வெப்சன் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இலங்கை அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 431 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 67 ஓட்டங்களால் முன்னிலையும் பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி அவர்களுடைய முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Usman Khawaja | b Ramesh Mendis | 37 | 77 | 4 | 0 | 48.05 |
David Warner | b Kasun Rajitha | 5 | 13 | 1 | 0 | 38.46 |
Marnus Labuschagne | st Niroshan Dickwella b Prabath Jayasuriya | 104 | 156 | 12 | 0 | 66.67 |
Steve Smith | not out | 145 | 227 | 16 | 0 | 63.88 |
Travis Head | b Prabath Jayasuriya | 12 | 36 | 0 | 0 | 33.33 |
Cameron Green | lbw b Prabath Jayasuriya | 4 | 14 | 0 | 0 | 28.57 |
Alex Carey | c Ramesh Mendis b Prabath Jayasuriya | 28 | 61 | 4 | 0 | 45.90 |
Mitchell Starc | c Kusal Mendis b Prabath Jayasuriya | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Pat Cummins | lbw b Kasun Rajitha | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Nathan Lyon | lbw b Prabath Jayasuriya | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Mitchell Swepson | lbw b Maheesh Theekshana | 3 | 14 | 0 | 0 | 21.43 |
Extras | 15 (b 5 , lb 6 , nb 3, w 1, pen 0) |
Total | 364/10 (110 Overs, RR: 3.31) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 25 | 4 | 70 | 2 | 2.80 | |
Ramesh Mendis | 33 | 1 | 117 | 1 | 3.55 | |
Maheesh Theekshana | 16 | 2 | 48 | 1 | 3.00 | |
Prabath Jayasuriya | 36 | 3 | 118 | 6 | 3.28 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Mitchell Starc b Cameron Green | 6 | 25 | 0 | 0 | 24.00 |
Dimuth Karunaratne | lbw b Mitchell Swepson | 86 | 165 | 10 | 0 | 52.12 |
Kusal Mendis | lbw b Nathan Lyon | 85 | 161 | 9 | 0 | 52.80 |
Angelo Mathews | c Marnus Labuschagne b Mitchell Starc | 52 | 117 | 4 | 0 | 44.44 |
Dinesh Chandimal | not out | 206 | 326 | 16 | 5 | 63.19 |
Kamindu Mendis | b Mitchell Swepson | 61 | 137 | 7 | 0 | 44.53 |
Niroshan Dickwella | c Pat Cummins b Nathan Lyon | 5 | 13 | 0 | 0 | 38.46 |
Ramesh Mendis | lbw b Mitchell Starc | 29 | 98 | 0 | 0 | 29.59 |
Maheesh Theekshana | b Pat Cummins | 10 | 27 | 2 | 0 | 37.04 |
Prabath Jayasuriya | b Mitchell Starc | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Kasun Rajitha | lbw b Mitchell Swepson | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Extras | 14 (b 4 , lb 6 , nb 1, w 3, pen 0) |
Total | 554/10 (180 Overs, RR: 3.08) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Starc | 29 | 3 | 89 | 4 | 3.07 | |
Pat Cummins | 30 | 5 | 95 | 1 | 3.17 | |
Nathan Lyon | 64 | 5 | 194 | 2 | 3.03 | |
Cameron Green | 6 | 0 | 20 | 0 | 3.33 | |
Mitchell Swepson | 37 | 2 | 100 | 3 | 2.70 | |
Travis Head | 8 | 0 | 27 | 0 | 3.38 | |
Marnus Labuschagne | 6 | 0 | 16 | 0 | 2.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
David Warner | lbw b Ramesh Mendis | 24 | 44 | 4 | 0 | 54.55 |
Usman Khawaja | c Oshada Fernando b Prabath Jayasuriya | 29 | 47 | 4 | 0 | 61.70 |
Marnus Labuschagne | lbw b Prabath Jayasuriya | 32 | 59 | 3 | 0 | 54.24 |
Steve Smith | lbw b Prabath Jayasuriya | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Travis Head | b Ramesh Mendis | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Cameron Green | st Niroshan Dickwella b Prabath Jayasuriya | 23 | 32 | 2 | 0 | 71.88 |
Alex Carey | not out | 16 | 28 | 0 | 0 | 57.14 |
Mitchell Starc | c Prabath Jayasuriya b Kusal Mendis | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Pat Cummins | lbw b Maheesh Theekshana | 16 | 18 | 1 | 0 | 88.89 |
Nathan Lyon | lbw b Maheesh Theekshana | 5 | 3 | 1 | 0 | 166.67 |
Mitchell Swepson | b Prabath Jayasuriya | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Extras | 1 (b 1 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 151/10 (41 Overs, RR: 3.68) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 5 | 1 | 16 | 0 | 3.20 | |
Maheesh Theekshana | 5 | 0 | 28 | 2 | 5.60 | |
Ramesh Mendis | 15 | 2 | 47 | 2 | 3.13 | |
Prabath Jayasuriya | 16 | 2 | 59 | 6 | 3.69 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<