Home Tamil இரண்டாவது T20I போட்டியில் போராடி வென்ற அவுஸ்திரேலியா!

இரண்டாவது T20I போட்டியில் போராடி வென்ற அவுஸ்திரேலியா!

Australia tour of Sri Lanka 2022

303

இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் அவுஸ்திரேலிய அணி போராட்டத்துக்கு மத்தியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. முதலாவது T20I போட்டியில் இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும், இந்தப்போட்டியில் 7 ஓட்டங்களுக்குள் முதலிரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன.

>>கீரினின் சதத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய A அணி வெற்றி

பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேற, குசல் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்க ஆகியோர் இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தனர்.

மூன்றாவது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை இவர்கள் இருவரும் பகிர்ந்த போதும், சரித் அசலங்க 39 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஓட்டங்களை பெற்றிருந்த வீரர்கள் இவ்வாறு விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேற, 14.1 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 90/4 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும், முதல் போட்டியை போன்று வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடிய பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் ஷானக ஆகியோரும் ஓட்டங்களை குவிக்க தடுமாறியிருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 28 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணி பெற்றுக்கொண்டது. எனவே, 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

முதல் T20I போட்டியை விட குறைந்த ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் வேகமாக ஓட்டக்குவிப்பை ஆரம்பித்து வெற்றிலக்கை இலகுவாக்கினர்.

மறுமுனையில் வனிந்து ஹஸரங்க அணியின் 3வது ஓவரில் அறிமுகம் செய்யப்பட்டதுடன் ஆரோன் பின்ச்சின் விக்கெட்டினை கைப்பற்றினார். அதனைத்தொடர்ந்து மிச்சல் மார்ஷின் விக்கெட்டினை கைப்பற்றினார். விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும் அவுஸ்திரேலிய அணி வேகமாக ஓட்டங்களை குவித்தது.

தொடர்ந்து தங்களுடைய முதல் 6 ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் உட்பட 3 விக்கெட்டுகளை அவுஸ்திரேலிய அணி இழந்தபோதும் 63 ஓட்டங்களை குவித்தது. எனவே, வெற்றியிலக்கை நோக்கிய அவுஸ்திரேலிய அணியின் பயணம் இலகுவாக இருந்தது.

துரதிஷ்டவசமாக வேகமாக துடுப்பெடுத்தாடிய டேவிட் வோர்னர் 10 பந்துகளில் 21 ஓட்டங்களை பெற்ற ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க போட்டி சூடுபிடித்தது. தொடர்ந்து வருகைத்தந்த மார்கஸ் ஸ்டொயிஸ் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி பக்கம் சற்று அழுத்தமிருந்தது.

பின்னர் மெதிவ் வேட் மற்றும் கிளேன் மெக்ஸ்வேல் ஆகியோர் இணைந்து 6வது விக்கெட்டுக்காக மற்றுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பி இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுக்க வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சில் மெக்ஸ்வேல் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்த பந்தில் அஸ்டன் ஏகார் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி தங்களுடைய 7வது விக்கெட்டையும் இழந்தது.

எனினும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த மெதிவ் வேட் பின்வரிசை வீரர்களுடன் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். மெதிவ் வேட் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஜெய் ரிச்சட்சன் 9 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க அதிகபட்சமாக 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை இந்தப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட T20I தொடரை 2-0 என வெற்றிக்கொண்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20I போட்டி எதிர்வரும் 11ம் திகதி கண்டி – பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Result


Sri Lanka
124/9 (20)

Australia
126/7 (17.5)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Mitchell Marsh b Jhye Richardson 3 6 0 0 50.00
Dhanushka Gunathilake c Mitchell Marsh b Glenn Maxwell 4 4 1 0 100.00
Charith Asalanka c Aaron Finch b Glenn Maxwell 39 33 2 2 118.18
Kusal Mendis hit-wicket b Jhye Richardson 36 36 2 1 100.00
Bhanuka Rajapaksa c Josh Hazlewood, b Kane Richardson 13 11 1 0 118.18
Dasun Shanaka c Aaron Finch b Kane Richardson 14 17 2 0 82.35
Wanidu Hasaranga c David Warner b Jhye Richardson 12 8 2 0 150.00
Chamika Karunaratne c Ashton Agar b Kane Richardson 0 2 0 0 0.00
Dushmantha Chameera c Ashton Agar b Kane Richardson 0 1 0 0 0.00
Maheesh Theekshana not out 1 1 0 0 100.00
Nuwan Thushara not out 2 1 0 0 200.00


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 124/9 (20 Overs, RR: 6.2)
Bowling O M R W Econ
Glenn Maxwell 3 0 18 2 6.00
Josh Hazlewood, 4 1 16 0 4.00
Jhye Richardson 4 0 26 3 6.50
Kane Richardson 4 0 30 4 7.50
Ashton Agar 4 0 27 0 6.75
Mitchell Marsh 1 0 7 0 7.00


Batsmen R B 4s 6s SR
Aaron Finch c Danushka Gunathilaka b Wanidu Hasaranga 24 13 4 0 184.62
David Warner run out () 21 10 3 1 210.00
Mitchell Marsh lbw b Wanidu Hasaranga 11 7 2 0 157.14
Steve Smith lbw b Nuwan Thushara 5 4 1 0 125.00
Glenn Maxwell c Danushka Gunathilaka b Wanidu Hasaranga 19 19 0 0 100.00
Marcus Stoinis c Charith Asalanka b Dushmantha Chameera 9 7 0 1 128.57
Matthew Wade not out 26 26 2 0 100.00
Ashton Agar b Wanidu Hasaranga 0 1 0 0 0.00
Jhye Richardson not out 9 20 0 0 45.00


Extras 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0)
Total 126/7 (17.5 Overs, RR: 7.07)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 4 0 29 0 7.25
Dushmantha Chameera 4 0 31 0 7.75
Wanidu Hasaranga 4 0 33 4 8.25
Nuwan Thushara 2 0 18 1 9.00
Charith Asalanka 3 0 7 0 2.33
Dhanushka Gunathilake 0.5 0 8 0 16.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<