இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் T20I போட்டியில், அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.
எதிர்பார்ப்புமிக்க இந்த தொடரில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தை முழுயைாக சூழ்ந்த ரசிகர்களுக்கு மத்தியில் ஆரம்பித்த இந்தப்போட்டியில் மிகச்சிறந்த ஆரம்பத்தை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.
>>பலமான ஆஸி. அணியை சொந்த மண்ணில் வீழ்த்துமா இலங்கை?
அவுஸ்திரேலிய அணியின் பணிப்பின்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு தனுஷ்க குணதிலக்க வேகமான ஆரம்பத்தை கொடுத்ததுடன் மறுமுனையில் பெதும் நிஸ்ஸங்க நிதானமாக ஆடினார்.
தனுஷ்க குணதிலக்க 15 பந்துகளில் 26 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்ததுடன், பெதும் நிஸ்ஸங்கவுடன் ஜோடி சேர்ந்த சரித் அசலங்க மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தார். இரண்டாவது விக்கெட்டுக்காக இவர்கள் 61 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், 12 ஓவர் வீசும் போது இலங்கை அணி 100 ஓட்டத்தை கடந்தது.
எனினும் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்ற இலங்கை அணி பெதும் நிஸ்ஸங்கவின் (36 ஓட்டங்கள்) ஆட்டமிழப்பின் பின்னர் தங்களுடைய சிறந்த ஆரம்பத்தை வீணடிக்க தொடங்கியது. ஜோஸ் ஹெஷல்வூட் ஒரே ஓவரில் குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் ஷானக ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்ற இலங்கை அணியின் துடுப்பாட்டம் சரியத்தொடங்கியது.
இறுதியில் சரித் அசலங்க (38 ஓட்டங்கள்) மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரின் ரன்-அவுட்கள் அணிக்கு ஏமாற்றமாக அமைய, 19.3 ஓவர்கள் நிறைவில் வெறும் 128 ஓட்டங்களுக்கு இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இலங்கை அணி தங்களுடைய கடைசி 9 விக்கெட்டுகளையும் வெறும் 28 ஓட்டங்களுக்கு இழந்து அதிர்ச்சியளித்திருந்ததுடன் அணியின் பின்னடைவுக்கும் இதுவொரு மிக முக்கியமான காரணமாக மாறியது.
அவுஸ்திரேலிய அணிசார்பாக ஜோஸ் ஹெஷல்வூட் மீண்டுமொருமுறை இலங்கைக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்து 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சுற்கு சற்று தடுமாறினாலும், அதனைத்தொடர்ந்து டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கினர்.
இவர்கள் இருவரும் இலகுவாக ஓட்டங்களை குவிக்க அவுஸ்திரேலிய அணி விக்கெட்டிழப்பின்றி வெற்றியிலக்கை நெருங்கியது. இலங்கை அணியின் பந்துவீச்சில் டேவிட் வோர்னர் அரைச்சதம் கடந்து 55 ஓட்டங்களை பெற்றிருந்த போது, சாமிக்க கருணாரத்ன வீசிய பந்தில் பிடியெடுப்பொன்றை வழங்கியிருந்தாலும் பெதும் நிஸ்ஸங்க அதனை தவறிவிட்டிருந்தார்.
இதனைத்தவிர்த்து இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீரவுக்கு எதிராக சிறந்த யுக்திகளுடன் ஓட்டங்களை குவித்து அவுஸ்திரேலிய அணி அழுத்தம் கொடுத்திருந்தது. அதேநேரம், இலகுவான வெற்றியிலக்கு என்பதால், அழுத்தமின்றி அவுஸ்திரேலிய அணி ஓட்டங்களை குவித்தது. இதில், 11.4 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 101 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் ஆரம்பித்த இந்தப்போட்டியில் 28 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி எந்தவித தடுமாற்றமும் இன்றி, விக்கெட்டிழப்புமின்றி 14 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது. டேவிட் வோர்னர் 70 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் 61 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள, அவுஸ்திரேலிய அணி 36 பந்துகள் மீதமிருக்க வெற்றியை பதிவுசெய்துக்கொண்டது.
அதுமாத்திரமின்றி தொடரில் 1-0 என்ற முன்னிலையை அவுஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்டுள்ளதுடன், இரண்டாவது போட்டி நாளைய தினம் (08) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dhanushka Gunathilake | c Mitchell Marsh b Josh Hazlewood, | 26 | 15 | 3 | 1 | 173.33 |
Pathum Nissanka | b Mitchell Starc | 36 | 31 | 2 | 1 | 116.13 |
Charith Asalanka | run out () | 38 | 34 | 3 | 1 | 111.76 |
Kusal Mendis | c Ashton Agar b Josh Hazlewood, | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Bhanuka Rajapaksa | c Matthew Wade b Josh Hazlewood, | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Dasun Shanaka | lbw b Josh Hazlewood, | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Wanidu Hasaranga | c Aaron Finch b Mitchell Starc | 17 | 15 | 2 | 0 | 113.33 |
Chamika Karunaratne | run out (Steve Smith) | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Dushmantha Chameera | c David Warner b Mitchell Starc | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Maheesh Theekshana | c David Warner b Kane Richardson | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Nuwan Thushara | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 7 (b 0 , lb 0 , nb 0, w 7, pen 0) |
Total | 128/10 (19.3 Overs, RR: 6.56) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Starc | 4 | 0 | 26 | 3 | 6.50 | |
Josh Hazlewood, | 4 | 0 | 16 | 4 | 4.00 | |
Mitchell Marsh | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Glenn Maxwell | 2 | 0 | 18 | 0 | 9.00 | |
Kane Richardson | 3.3 | 0 | 22 | 1 | 6.67 | |
Ashton Agar | 4 | 0 | 25 | 0 | 6.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Aaron Finch | not out | 61 | 40 | 4 | 4 | 152.50 |
David Warner | not out | 70 | 44 | 9 | 0 | 159.09 |
Extras | 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 134/0 (14 Overs, RR: 9.57) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Maheesh Theekshana | 4 | 0 | 25 | 0 | 6.25 | |
Nuwan Thushara | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Dushmantha Chameera | 4 | 0 | 50 | 0 | 12.50 | |
Wanidu Hasaranga | 2 | 0 | 27 | 0 | 13.50 | |
Chamika Karunaratne | 2 | 0 | 13 | 0 | 6.50 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<