Home Tamil மெக்ஸ்வெலின் ஆட்டத்தோடு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெற்றி

மெக்ஸ்வெலின் ஆட்டத்தோடு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெற்றி

394

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கிளன் மெக்ஸ்வெலின் அதிரடி ஆட்டத்தோடு 2 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு  செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி. கிரிக்கெட் அணி T20I தொடரின் பின்னர் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. அதன்படி இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (14) கண்டியில் ஆரம்பமாகியது.

ஒருநாள் தொடரிலும் சாதிக்குமா இலங்கை கிரிக்கெட் அணி?

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணிக்காக 19 வயது நிரம்பிய சகலதுறைவீரரான துனித் வெலால்கேவிற்கு, சர்வதேச அறிமுகம் வழங்கப்பட்டிருக்க ஆஸி. அணியில் பெட் கம்மின்ஸ், மார்னஸ் லபச்சேனே ஆகியோர் இணைந்திருந்தனர்.

இலங்கை குழாம்

தனுஷ்க குணத்திலக்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், துனித் வெலால்கே, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன

ஆஸி. குழாம்

ஆரோன் பிஞ்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபச்சேனே, அலெக்ஸ் கெரி (விக்கெட் காப்பாளர்), மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அஸ்டன் ஏகார், பெட் கம்மின்ஸ், ஜை றிச்சர்ட்சன், ஜோஷ் ஹேசல்வூட்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணத்திலக்க ஜோடி மிகவும் அழகிய ஆரம்பத்தினை வழங்கியது.

அதன்படி இரண்டு வீரர்களும் அரைச்சதம் விளாச இலங்கை அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 115 ஓட்டங்கள் பெறப்பட்டது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ரன் அவுட்டில் ஆட்டமிழந்த தனுஷ்க குணத்திலக்க தன்னுடைய 11ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 53 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

குணத்திலக்கவின் பின்னர் அஸ்டன் ஏகாரின் பந்துவீச்சில் இலங்கை அணியின் இரண்டாவது விக்கெட்டாக பெதும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்தார். பெதும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்கும் போது அவரின் 3ஆவது அரைச்சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதனையடுத்து புதிய துடுப்பாட்டவீரராக களம் வந்த தனன்ஞய டி சில்வா வெறும் 7 ஓட்டங்களுடன் வெளியேற, குசல் மெண்டிஸ் மற்றும் சரித் அசலன்க ஆகியோர் பொறுமையான முறையில் இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினர்.

77 ஓட்டங்கள் வரை நீடித்த சரித் அசலன்க – குசல் மெண்டிஸ் ஜோடியின் இணைப்பாட்டம் சரித் அசலன்கவின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. இலங்கை அணியின் 4ஆம் விக்கெட்டாக ஜை ரிச்சர்ட்ஸனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த சரித் அசலன்க 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அதனையடுத்து அதிரடியாக ஆடத்தொடங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் புதிய துடுப்பாட்டவீரர் வனிந்து ஹஸரங்க ஆகியோரின் அபார ஆட்டத்தோடு இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை எடுத்தது.

>>இலங்கை – இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்றதோடு தன்னுடைய 18ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் வனிந்து ஹஸரங்க, ஜை ரிச்சர்ட்ஸனின் 49ஆவது ஓவரில் 5 தொடர் பௌண்டரிகள் அடங்கலாக மொத்தம் 6 பௌண்டரிகள் உடன் 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் பெற்றார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் அஸ்டன் ஏகார் மற்றும் மார்னஸ் லபச்சேனே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 301 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆரம்பத்தில் மகீஷ் தீக்ஷன நெருக்கடி உருவாக்கினார். அந்தவகையில் மகீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தமது முதல் விக்கெட்டாக டேவிட் வோர்னரின் விக்கெட்டினை அவர் ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் பறிகொடுத்தது.

இதன் பின்னர் அணித்தலைவர் ஆரோன் பின்ச் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த ஸ்டீவ் ஸ்மித்தும் தனது ஆட்டத்தின் மூலம் ஆஸி. அணிக்கு பெறுமதி சேர்த்தார்.

பின்னர் 41 பந்துகளுக்கு 44 ஓட்டங்களைப் பெற்ற ஆரோன் பின்ச் வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, போட்டியில் மழையின் குறுக்கீடும் ஏற்பட்டு வெற்றி இலக்கு 44 ஓவர்களுக்கு 282 ஓட்டங்களாக மாற்றப்பட்டது. இதனையடுத்து  ஸ்டீவ் ஸ்மித் இன்றைய போட்டியில் அறிமுகமான துனித் வெலால்கேவின் விக்கெட்டாக மாறினார். ஸ்மித் ஆட்டமிழக்கும் போது தன்னுடைய 26ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 60 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் துனித் வெலால்கே ஆகியோர் நெருக்கடி ஏற்படுத்திய போதும் மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளேன் மெக்ஸ்வெலின் அதிரடியான துடுப்பாட்டத்தோடு அவுஸ்திரேலிய அணி போட்டியின் வெற்றி இலக்கினை 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களுடன் அடைந்தது.

அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்த கிளன் மெக்ஸ்வெல் தன்னுடைய 23ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 31 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 4 விக்கெட்டுக்களையும், துனித் வெலால்கே 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்க மகீஷ் தீக்ஷன மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டவீரரான கிளன் மெக்ஸ்வெல் தெரிவாகினார். இனி இரு அணிகளும் மோதுகின்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (16) நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka
300/7 (50)

Australia
282/8 (42.3)

Batsmen R B 4s 6s SR
Dhanushka Gunathilake run out (Marcus Stoinis) 55 53 7 0 103.77
Pathum Nissanka c Aaron Finch b Ashton Agar 56 68 6 1 82.35
Kusal Mendis not out 86 87 8 1 98.85
Akila Dananjaya c David Warner b Ashton Agar 7 17 0 0 41.18
Charith Asalanka c Aaron Finch b Jhye Richardson 37 42 4 0 88.10
Dasun Shanaka c David Warner b Marnus Labuschagne 6 7 1 0 85.71
Chamika Karunaratne c & b Marnus Labuschagne 7 7 1 0 100.00
Wanidu Hasaranga c Jhye Richardson b Josh Hazlewood, 37 19 6 0 194.74


Extras 9 (b 1 , lb 2 , nb 0, w 6, pen 0)
Total 300/7 (50 Overs, RR: 6)
Bowling O M R W Econ
Josh Hazlewood, 10 0 54 1 5.40
Glenn Maxwell 10 0 60 0 6.00
Pat Cummins 8 1 48 0 6.00
Jhye Richardson 8 0 64 1 8.00
Ashton Agar 10 0 49 2 4.90
Marcus Stoinis 1 0 3 0 3.00
Marnus Labuschagne 3 0 19 2 6.33


Batsmen R B 4s 6s SR
David Warner lbw b Maheesh Theekshana 0 3 0 0 0.00
Aaron Finch c Kusal Mendis b Wanidu Hasaranga 44 41 5 1 107.32
Steve Smith b Dunith Wellalage 53 60 5 0 88.33
Marnus Labuschagne c Dunith Wellalage b Dasun Shanaka 24 31 1 0 77.42
Marcus Stoinis b Wanidu Hasaranga 44 31 4 2 141.94
alex carey lbw b Wanidu Hasaranga 21 22 1 0 95.45
Glenn Maxwell not out 80 51 6 6 156.86
Pat Cummins b Wanidu Hasaranga 0 2 0 0 0.00
Ashton Agar lbw b Dunith Wellalage 3 11 0 0 27.27
Jhye Richardson not out 1 3 0 0 33.33


Extras 12 (b 6 , lb 1 , nb 0, w 5, pen 0)
Total 282/8 (42.3 Overs, RR: 6.64)
Bowling O M R W Econ
Dushmantha Chameera 7.3 0 60 0 8.22
Maheesh Theekshana 8 0 51 1 6.38
Chamika Karunaratne 4 0 16 0 4.00
Wanidu Hasaranga 9 0 58 4 6.44
Dunith Wellalage 7 0 49 2 7.00
Akila Dananjaya 3 0 14 0 4.67
Dasun Shanaka 4 0 27 1 6.75



முடிவு – அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<