ஐ.பி.எல் விளையாட கோஹ்லியை ஸ்லெட்ஜிங் செய்ய அஞ்சும் ஆஸி வீரர்கள்

130
Virat Kohli

ஐ.பி.எல் ஒப்பந்தங்களை பாதுகாத்து அந்தத் தொடரில் விளையாடுவதற்காக விராத் கோஹ்லி மற்றும் இந்திய அணி வீரர்களை வாக்குவாதம் (ஸ்லெட்ஜிங்) செய்வதற்கு அவுஸ்திரேலிய அணி வீரர்கள் அஞ்சுவதாக அந்த அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.   

அவுஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது எதிரணி வீரர்களுடன்  மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள். குறிப்பாக, ஆஷஸ் தொடரின்போதும், இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போதும் இந்த ஸ்லெட்ஜிங் அதிக அளவில் இருக்கும்.  

இலங்கை T20I அணிக்கான எதிர்கால திட்டத்தை கூறும் மிக்கி ஆர்தர்!

T20I அணியை பொருத்தவரை, தங்களுடைய அணியின்

இந்திய வீரர்களை சீண்டியே ஆட்டமிழக்கச் செய்கின்ற யுக்தியை கடைபிடிப்பார்கள். ஆனால், விராட் கோஹ்லி இந்திய அணியின் தலைவராகப் பதவி ஏற்றபிறகு, கோஹ்லி அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இணையாக வார்த்தைப்போரில் ஈடுபட்டாலும், அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதில்லை

இறுதியாக, இந்தியாவுக்கு எதிராக 2க்கு 1 என டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இழந்தது. இந்தத் தொடரில் போட்டித் தடை காரணமாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் கிரிக்கெட் உலகின் பணக்கார லீக்கான .பி.எல் ஒப்பந்தத்துக்காகவே தற்போதைய அவுஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று அந்த அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  

அவுஸ்திரேலியாவின் பிக் ஸ்போர்ட்ஸ் பிரேக்பெஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், விளையாட்டின் நிதியைப் பொறுத்தவரை சர்வதேச மற்றும் உள்ளூர் அளவில் .பி.எல் எத்தகைய சக்தி வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

அவுஸ்திரேலியா, மற்ற அணிகள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அவர்களுக்கு உண்டான குணத்தில் இருந்து மாறுபட்டு இந்தியாவுக்கு சாதகமாக மாறிவிடுகின்றன

கோஹ்லி அல்லது மற்ற இந்திய அணி வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய பயப்படுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டியுள்ளது

கோஹ்லி தன்னை பெங்களூர் அணிக்காக எடுக்க வேண்டும், அதன்மூலம் ஆறு வாரங்களில் ஒரு மில்லியன் டொலர் பெறலாம் என அந்த வீரர்கள் விரும்புகிறாரக்ள். இதன்மூலம் அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் இருந்து விலகி சாதுவான நிலைக்கு மாறிவிட்டார்கள் என்று உணர்கிறேன்” என்றார்.

இலங்கை வீரர்களின் உடற்தகுதி பேணப்படுகிறதா?

உலகளாவிய ரீதியில் தீவிரம் காட்டிவரும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) காரணமாக

மேலும் “இதனால், அவுஸ்திரேலிய அணி வீரர்கள் கடினமாக தன்மையிலிருந்து, தற்போது மென்மையாக மாறியுள்ளனர்” என்று கிளார்க் கூறினார்.

இதேவேளை, இவ்வருடத்துக்கான .பி.எல் ஏலத்தில் பெட் கம்மின்ஸை 15.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிளென் மெக்ஸ்வெல்லை 10.5 கோடிக்கு கிங்ஸ் லெவன் பன்ஞாப் அணியும், நெதன் கோல்டர் நைல்லை 8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் அதிகபட்ச விலைக்கு ஒப்பந்தம் செய்திருந்தன.  

மேலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆரொன் பின்ஞ்ச், கேன் றிச்சர்ட்ஸன், அலெக் கேரி, மிட்செல் மார்ஷ், ஜோஸ் ஹெசில்வூட், அன்ட்ரூ டை, கிறிஸ் க்ரீன், ஜோஸ் ப்லிப்பி உள்ளிட்ட வீரர்கள் இம்முறை .பி.எல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட அவுஸ்திரேலிய அணி வீரர்களாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க