ஒரே சதத்தில் 4 வீரர்களை பின்தள்ளி இரண்டாமிடம் பிடித்த ஆஸி. வீரர்

1313
Cricket Australia

T20I கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சதமடித்த வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மிட்செல் க்ளிங்கர் 8 சதங்களை விளாசி குறித்த பட்டியலில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.  

T20 லீக் தொடர்களில் ஒன்றான இங்கிலாந்தில் நடைபெறும் விட்டாலிட்டி ப்ளாஸ்ட் (Vitality Blast) லீக் தொடர் தற்சயம் நடைபெற்று வருகின்றது. இதன் குழுநிலை போட்டியில் நேற்று (29) கென்ட்பரியில் நடைபெற்ற ஆட்டத்தில் கிளாஸ்டர்ஷியர் மற்றும் கெண்ட் ஆகிய அணிகள் மோதின

தென்னாபிரிக்க தொடருக்கான டி20 குழாமிலும் டோனிக்கு இடமில்லை

இந்திய மற்றும் தென்னாபிரிக்க….

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கெண்ட் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிளாஸ்டர்ஷியர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை குவித்தது.

இதில் கிளாஸ்டர்ஷியர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய அணிக்காக T20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் க்ளிங்கர் இறுதிவரை ஆட்டமிழக்காது 65 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் சதம் கடந்து 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்

இவ்வாறு சதமடித்ததன் மூலம் T20 போட்டிகள் வரலாற்றில் அதிக சதமடித்தவர்கள் வரிசையில் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்லுக்கு அடுத்தாக இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் யாரும் எட்டாத அளவுக்கு 21 சதங்களுடன் காணப்படுகின்றார். குறித்த பட்டியலில் இலங்கை வீரர்கள் வரிசையில் 3 சதங்களுடன் சகலதுறை வீரர் தசுன் ஷானக்க 24ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.

1980ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பிறந்த 39 வயதாகும் மிட்செல் க்ளிங்கர் 1989/90ஆம் ஆண்டுகளில் முதல்தர போட்டியில் அறிமுகம் பெற்றார். அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு T20 போட்டி அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் அதில் அறிமுகம் பெற்றுக்கொண்டார்.  

2006ஆம் ஆண்டு T20 அறிமுகம் பெற்றுக்கொண்ட மிட்செல் க்ளிங்கர் நீண்ட கால இடைவெளியின் பின்னர் தனது 37ஆவது வயதில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரியில் அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய T20 சர்வதேச போட்டியில் முதல் முறையாக சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். குறித்த தொடரின் மூன்று போட்டிகளிலும் விளையாடியதே இவரின் இறுதி சர்வதேச போட்டியாக இதுவரையில் அமைந்திருக்கின்றது

அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், 2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வெளிநாட்டு, உள்நாட்டு லீக் தொடர்களில் ஆடிவந்த மிட்செல் க்ளிங்கர் 204 T20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இதில் 196 இன்னிங்ஸ்களில் 8 சதங்கள் மற்றும் 33 அரைச்சதங்களுடன் மொத்தமாக 5,897 ஓட்டங்களை குவித்துள்ளார்.  

ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராக மஹேல

இங்கிலாந்து கிரிக்கெட் சபை 2020ஆம் ஆண்டின்….

மிட்செல் க்ளிங்கர் 13 வருடகால டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் அவுஸ்திரேலியா, அடிலைட் ஸ்ட்ரைகேர்ஸ், கிளாஸ்டர்ஷியர், குல்னா டைடன்ஸ், கொச்சி டஸ்கஸ் கேர்ளா, பார்ல் ரொக்ஸ், சவுஸ் அவுஸ்திரேலியா, பேர்த் ஸ்கோர்சேர்ஸ், விக்டோரியா போன்ற 9 அணிகளுக்காக விளையாடியுள்ளார்

T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் பெற்றவர்கள் பட்டியல். (முதல் 10 இடங்கள்

  1. கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) 376 இன்னிங்ஸ் – 21 சதங்கள்
  2. மிட்செல் க்ளிங்கர் (அவுஸ்திரேலியா) 196 இன்னிங்ஸ் – 8 சதங்கள்
  3. ஆரோன் பின்ச் (அவுஸ்திரேலியா) 261 இன்னிங்ஸ் – 7 சதங்கள்
  4. டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா) 270 இன்னிங்ஸ் – 7 சதங்கள்
  5. லுக் ரைட் (இங்கிலாந்து) 289 இன்னிங்ஸ் – 7 சதங்கள்
  6. ப்ரெண்டன் மெக்கலம் (நியூசிலாந்து) 364 இன்னிங்ஸ் – 7 சதங்கள்
  7. ரோஹிட் சர்மா (இந்தியா) 303 இன்னிங்ஸ் – 6 சதங்கள்
  8. ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா) 308 இன்னிங்ஸ் – 6 சதங்கள்
  9. கொமரூன் டெல்போர்ட் (தென்னாபிரிக்கா) 197 இன்னிங்ஸ் – 5 சதங்கள்
  10. விராட் கோஹ்லி (இந்தியா) 255 இன்னிங்ஸ் – 5 சதங்கள்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<